...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Wednesday, November 26, 2025

 STANDARD OPERATING PROCEDURE TO UPDATE THE BALANCE IN POSB ACCOUNTS IN WHICH BALANCE DIFFERENCE OCCURRED DUE TO NON-MIGRATION OF TRANSACTIONS PERTAINING TO PRE-CBS MIGRATION PERIOD: SB ORDER NO.15/2025 DATED 20.11.2025

SB Order No.15/2025

No. CBS-25/96/2021-FS-DOP
Government of India
Ministry of Communications
Department of Posts
(Financial Services Division)

Dak Bhawan, New Delhi — 110001
Dated: 20.11.2025

To

All Head of Circles / Regions

Subject: Standard Operating Procedure to update the balance in POSB accounts in which balance difference occurred due to non-migration of transactions pertaining to pre-CBS migration period— Reg.

Madam / Sir,

This is regarding the Standard Operating Procedure (SOP) for settling discrepancies in accounts and certificates that were not migrated or partially migrated to the Finacle CBS.

2.         This Directorate has received numerous references from various Circles, and complaints from customers, regarding issues stemming from the non-migration of accounts/certificates or individual transactions.

3.         To address these concerns, the following guidelines have been already issued:

I.SB Order No. 18/2023 dated 13.09.2023: addresses the handling and payment of accounts/certificates not migrated to Finacle CBS.

  1. SB Order No. 18A/2023 dated 08.04.2024: addresses the handling and payment of accounts/certificates not migrated to Finacle CBS, specifically for discontinued schemes.
  2. OM No. CBS-25/82/2022-FS-DOP dated 28.03.2024: outlines the revised procedure for submitting proposals for relaxation of the back value date parameter for post migration period transactions.

4. Despite the above, the Circles have reported instances where passbook balance does not reconcile with Finacle balance. This discrepancy is attributed to missing transaction entries in the legacy application (Sanchay Post) or the data entry tool at the time of migration, particularly affecting Post Office Savings Account (POSA), Public Provident Fund (PPF), and Sukanya Samridhi Account (SSA).

5. While scheme-wise and account-wise balance agreements were intended prior to Finacle migration, differences often arose due to non-migration of one or more transactions. Finacle does not permit posting transactions pertaining to the pre-migration period. Previously, such cases were resolved by updating the balance (Principal + Interest) in Finacle through the HIARM menu. However, this method was discontinued vide SB Order No. 03/2024 dated 14.05.2024 due to identified accounting issues. This discontinuation led to further references from circles seeking alternative solutions.

6. After re-examination of the matter and taking into consideration the challenges faced by Circles as well as customers, a Standard Operating Procedure (SOP) has been developed to resolve account balance discrepancies resulting from non-migration of one or more transactions from legacy application (Sanchay Post) to Finacle CBS. The SOP is attached as Annexure-I.

7. It is specifically applicable only to POSA, PPF, and SSA accounts where the customer requests to continue the accounts. Discrepancies in other POSB scheme accounts as well as POSA, PPF and SSA, where customers want to close these accounts, are to be handled as per the procedures outlined in paragraph 3 above.

8. It is requested to circulate this to all concerned for information, guidance and necessary action.

9. This issues with the approval of the Competent Authority.

Yours faithfully,

(Devender Kumar Sharma)
Assistant Director (SB-II)

View/Download the PDF 

 NFPE -P3

தமிழ் மாநிலம்

627006

-------------------------------------

அன்பார்ந்த தோழர்களே!

தோழியர்களே!

NFPTE -சம்மேளன நாள்

24.11.1954

அனைவருக்கும் சம்மேளன நாள் வாழ்த்துக்கள்

---------------------------------------------

``இவ்வளவுக்குப் பிறகும்  ஒரு பூ பூக்கத்தானே செய்கிறது?!’’ - 

இந்த வரிகள் எழுத்தாளர் தோழர் பிரபஞ்சன் அவர்களின் வரிகள்.

இவ்வளவுக்குப் பிறகும் என்ற வார்த்தைகளில் 

எவ்வளவு சோதனைகள் ,சவால்கள் ,சதிகள் ,தாக்குதல்கள் என அனைத்திற்கு  பிறகும் ஓரு பூ பூப்பது என்பது எவ்வளவு நம்பிக்கை தரும் செய்தியாகும்.


அதைப்போலத் தான் நமது NFPE இயக்கமும் NFPTE என 24.11.1954 ல் உதயமான நாள் முதல் சந்தித்த சவால்கள் சாதாரனவைகள் அல்ல..

உயிர்பலி ,உடமைகள் இழப்பு ,பணி இடை நீக்கம் ,ஊதிய வெட்டு ,ஊதிய பிடித்தம் ,பழி வாங்கல்கள் ,தொலைதூர இடமாற்றங்கள் ,என எல்லா அம்புகளும் தாக்கிய பின்பும் இன்குலாப் ஜிந்தாபாத் ஒலித்துக்கொண்டே இருக்கும்.

ஏற்கனவே இரண்டு முறை நிர்வாகத்தால் அங்கீகாரத்தை இழந்தது முதல் கடைசியாக 26.04.2023 அன்று அங்கீகாரம் பறிக்கப்பட்ட பின்னனியிலும் இன்னும் ஊழியர்கள் நலன் சார்ந்த பிரச்சனைகள் குறித்து எழுதுவது ,விவாதிப்பது ,ஆர்ப்பாட்டங்கள் நடத்துவது என்பது இந்த NFPE சங்கத்திற்கு மட்டுமே சாத்தியம்.

நூற்றாண்டு கடந்த கவிதை இன்னறவும் சாகாவரம் பெற்ற கவிதை நினைவுக்கு வருகிறது.இது நமது NFPE க்கு எவ்வளவு பொருத்தமானது பாருங்கள் ..

தொழிலாளர் இயக்கம்

பத்தாயிரம் முறை 

விழும்;எழும்; வடுபடும்;

மறுபடியும் எழும்!


அதன் குரல்வளை இறுக்கப்படும்!

உணர்வற்றுப்போகும் வரை தொண்டை அடைக்கப்படும்!

நீதிமன்றம் கேள்விக் கணைகளைத் தொடுக்கும்!

ஓடுகாலிகளால்

மறுப்புறைகள் கூறப்படும்!

சூதாடிகளால் பலி கொடுக்கப்படும்!

உளவாளிகளின் ஒற்றறியும் நோயால் பீடிக்கப்படும்!

கோழைகளால் நடு வீதியில் விடப்படும்!

துரோகிகளால் வஞ்சிக்கப்படும்!

அட்டைகளால் உறிஞ்சப்படும்!

தலைவர்களால் கூட விற்றுவிடப்படும்!

ஓ.........

*இத்தனை சோதனைகள் இருந்தாலும்

இதன் வெற்றி சர்வ நிச்சயமே!

 -யூஜின் விடப்ஸ்

இந்த நம்பிக்கையில் தொடர்ந்து பயணிப்போம்.

ஆம்.இவ்வளவுக்குப் பிறகும் இந்த NFPE பூக்கத்தான் போகிறது

வாழ்க ! NFPTE

வெல்க NFPE

தோழமை வாழ்த்துக்களுடன் 

S.K.ஜேக்கப் ராஜ்

மாநிலச் செயலாளர்

Monday, November 24, 2025

 NFPE -P3

தமிழ் மாநிலம் 

627006

----------------------------------------

அன்பார்ந்த தோழர்களே! 

தோழியர்களே!

 குறைந்த பட்ச ஊதியம்

------------------------------------------

ஒவ்வொரு ஊதியக்குழுவிலும் தேவைக்கேற்ற குறைந்த பட்ச ஊதியம் (Need based Minimum Wage) என்பது முக்கிய பங்கு வகிக்கும்.

இரண்டாவது ஊதியக்குழுவின் பிரதான கோரிக்கையான தேவைக்கேற்ற குறைந்த பட்ட ஊதியம் (Need based Minimum wages)இன்று வரை கோரிக்கையாகவே தொடர்கிறது.

15 -வது சர்வதேச தொழிலாளர் காங்கிரஸ் வகுத்தெடுத்துக் கொடுத்த Dr.அக்ராயாடு பார்முலாவை முன்னிலைப் படுத்தியே நமது கோரிக்கைகள் முன்னிறுத்தப்படுகின்றன.

அதன்படி ஒரு குடும்பம் என்றால் 3 பேர் (யூனிட் )அவர்களுக்கேற்ற உணவு எத்தனை கலோரிகள் ,உடை -எத்தனை கஜம் ,உறைவிடம் -என்ன பரப்பளவு,மின்பகிர்வு - ,கல்வி ,மருத்துவம் இவைகளை காரணிகளாகக்  கொண்டு கணக்கிடப்படுகின்றன.

அன்று குடும்பத்தில் மூன்று பேர்.இன்று குறைந்தபட்சம் நான்கு பேர்.உணவில் புரதச்சத்து அளவில் மாற்றம் என ஒவ்வொரு ஊதியக்குழுவிலும் நாம் கேட்ட குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயிக்கப்படவில்லை.

ஏழாவது சம்பளக்குழுவில் நாம் கேட்ட குறைந்த ஊதியம் ரூபாய் 26000.

ஆனால் கொடுத்தது ரூபாய் 18000.குறைந்த பட்ச ஊதியத்தில்  பாதிதான் குறைந்த பட்ச ஓய்வூதியம் ரூபாய் 9000 நிர்ணயிக்கப்பட்டது.

அதனால் தான் குறைந்தபட்ச ஊதியத்தில் அரசாங்கம் இவ்வளவு இறுக்கமாகவும் ,அதிகபட்ச ஊதியத்தில் தாராளமாகவும் இருக்கிறது.

5 வது சம்பளக்குழுவில் 

குறைந்த ஊதியம் Rs 2550 அதிகபட்ச ஊதியம் Rs 30000 வித்தியாசம் 11.76 சதவிகிதம்.

ஆறாவது சம்பளக்குழுவில் Rs 7000 -Rs 90000 வித்தியாசம் 12.85 சதவிகிதம்.

ஏழாவது சம்பளக்குழுவில் 

Rs 18000 -Rs 250000 வித்தியாசம் 13.80

 ஒவ்வொரு ஊதியக்குழுவிலும் குறைந்த பட்ட ஊதியத்திற்கும் அதிகபட்ச ஊதியத்திற்கும் உள்ள வித்தியாசம் கூடிக்கொண்டு இருப்பதற்கு காரணம் என்ன?

அதிகாரிகளின் போராட்ட வீச்சா?

ஊழியர் தரப்பு  பேச்சுவார்த்தையின் தாக்கமா?

இரண்டுமே இல்லை ஆட்சியாளர்களின்

கொள்கை தான் காரணம்.

நாளை நமது மாநிலச்சங்கம் சார்பாக கொடுக்கப்பட குறைந்தபட்ச ஊதியம் குறித்த கோரிக்கை மனுவினை பார்ப்போம்.

தொடரும்..

தோழமையுடன்

S.K.ஜேக்கப் ராஜ்

மாநிலச்செயலாளர்

 NFPE -P3

தமிழ் மாநிலம்

627006

-------------------------------------

அன்பார்ந்த தோழர்களே!

தோழியர்களே!

NFPTE -சம்மேளன நாள்

24.11.1954

அனைவருக்கும் சம்மேளன நாள் வாழ்த்துக்கள்

---------------------------------------------

``இவ்வளவுக்குப் பிறகும்  ஒரு பூ பூக்கத்தானே செய்கிறது?!’’ - 

இந்த வரிகள் எழுத்தாளர் தோழர் பிரபஞ்சன் அவர்களின் வரிகள்.


இவ்வளவுக்குப் பிறகும் என்ற வார்த்தைகளில் 

எவ்வளவு சோதனைகள் ,சவால்கள் ,சதிகள் ,தாக்குதல்கள் என அனைத்திற்கு  பிறகும் ஓரு பூ பூப்பது என்பது எவ்வளவு நம்பிக்கை தரும் செய்தியாகும்.

அதைப்போலத் தான் நமது NFPE இயக்கமும் NFPTE என 24.11.1954 ல் உதயமான நாள் முதல் சந்தித்த சவால்கள் சாதாரனவைகள் அல்ல..

உயிர்பலி ,உடமைகள் இழப்பு ,பணி இடை நீக்கம் ,ஊதிய வெட்டு ,ஊதிய பிடித்தம் ,பழி வாங்கல்கள் ,தொலைதூர இடமாற்றங்கள் ,என எல்லா அம்புகளும் தாக்கிய பின்பும் இன்குலாப் ஜிந்தாபாத் ஒலித்துக்கொண்டே இருக்கும்.

ஏற்கனவே இரண்டு முறை நிர்வாகத்தால் அங்கீகாரத்தை இழந்தது முதல் கடைசியாக 26.04.2023 அன்று அங்கீகாரம் பறிக்கப்பட்ட பின்னனியிலும் இன்னும் ஊழியர்கள் நலன் சார்ந்த பிரச்சனைகள் குறித்து எழுதுவது ,விவாதிப்பது ,ஆர்ப்பாட்டங்கள் நடத்துவது என்பது இந்த NFPE சங்கத்திற்கு மட்டுமே சாத்தியம்.

நூற்றாண்டு கடந்த கவிதை இன்னறவும் சாகாவரம் பெற்ற கவிதை நினைவுக்கு வருகிறது.இது நமது NFPE க்கு எவ்வளவு பொருத்தமானது பாருங்கள் ..

தொழிலாளர் இயக்கம்

பத்தாயிரம் முறை 

விழும்;எழும்; வடுபடும்;

மறுபடியும் எழும்!

அதன் குரல்வளை இறுக்கப்படும்!

உணர்வற்றுப்போகும் வரை தொண்டை அடைக்கப்படும்!

நீதிமன்றம் கேள்விக் கணைகளைத் தொடுக்கும்!

ஓடுகாலிகளால்

மறுப்புறைகள் கூறப்படும்!

சூதாடிகளால் பலி கொடுக்கப்படும்!

உளவாளிகளின் ஒற்றறியும் நோயால் பீடிக்கப்படும்!

கோழைகளால் நடு வீதியில் விடப்படும்!

துரோகிகளால் வஞ்சிக்கப்படும்!

அட்டைகளால் உறிஞ்சப்படும்!

தலைவர்களால் கூட விற்றுவிடப்படும்!

ஓ.........

*இத்தனை சோதனைகள் இருந்தாலும்

இதன் வெற்றி சர்வ நிச்சயமே!

 -யூஜின் விடப்ஸ்

இந்த நம்பிக்கையில் தொடர்ந்து பயணிப்போம்.

ஆம்.இவ்வளவுக்குப் பிறகும் இந்த NFPE பூக்கத்தான் போகிறது

வாழ்க ! NFPTE

வெல்க NFPE

தோழமை வாழ்த்துக்களுடன் 

S.K.ஜேக்கப் ராஜ்

Sunday, November 16, 2025

 NFPE -P3

தமிழ் மாநிலம்

627006

---------------------------------------------

அன்பார்ந்த தோழர்களே! 

தோழியர்களே!

ஊதியக்குழு அறிவிப்பும் -ஊழியர்களின் எதிர்(பார்ப்)பும்

-------------------------------------

 எட்டாவது ஊதியக்குழுவின் பரிசீலனை பட்டியலில் உள்ள அம்சங்கள் ஊழியர்களுக்கும் /ஓய்வூதியர்களுக்கும் மகிழ்ச்சி அளிப்பதாக இல்லை ,மாறாக பாதாகமாக இருப்பதாக ஊழியர்கள் சங்க பிரதிநிதிகள் (NJCM )தங்கள் எதிர்ப்பினை பதிவு செய்யத்தொடங்கியுள்ளனர். இது குறித்து நம் மத்திய அரசு ஊழியர் மகாசம்மேளனம் மாண்புமிகு பாரத பிரதமருக்கு இன்று ஒரு கடிதத்தை எழுதியுள்ளது. 

 மற்ற ஊதியக்குழுவினில் பயன்படுத்தப்பட்ட Revision of Pension என்ற பதம் இந்த ஊதியக்குழுவில் Review of Pension அதிலும்  Unfunded cost of Non -contributory Pension என்பது பழைய ஓய்வூதிய திட்டத்தை குறிவைத்து தொடுக்கப்பட்ட தாக்குதல்களாக உணர முடிகிறது.

Defered wage கொடுபடாத ஊதியமே பென்சன் என்றும் அதனால் திரட்டப்பட்ட பல இலட்சம் கோடிகளை பழைய ஓய்வூதிய திட்டத்திற்கு செலவழித்திட இந்த அரசு விரும்பவில்லை எனத்தெரிகிறது.  பழைய பென்ஷன் திட்டத்தில் ஒவ்வொரு ஊழியருக்கான அரசின் பங்கு பணத்தினை அரசு மாதாமாதம் தருவதில்லை. மாறாக ஊழியர் ஒய்வு பெரும் போது அரசின் பங்கு மொத்தமாக வைக்கப்பட்டு அந்த பணத்திலிருந்து தான் பழைய பென்ஷன் தரப்படுகிறது. 

  கடந்த 10 ஆண்டுகளில் 58 சதம் பஞ்சப்படி உயர்வு என்பது விலைவாசி உயர்வு புள்ளிகள் சரியாகத்தான் நிர்ணயம் செய்யப்பட்டுருக்கிறதா என புது சந்தேகங்கள் எழுந்துள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார்கள். Consumer Price Index கணக்கீட்டில் அடிப்படை வருடம் மாற்றப்பட்டு முன்பு இருந்த விலைவாசி அதிகம் உள்ள திருச்சி போன்ற நகரங்கள் நீக்கப்பட்டு விலைவாசி குறைவாக உள்ள நகரங்கள் சேர்க்கப்பட்டதன் விளைவாக இன்றுவரை ஒவ்வொரு அரையாண்டும் அகவிலைப்படி 2% முதல் 4% வரை தான் உயர்வு கண்டுள்ளது.  இது சந்தையில் உள்ள விலைவாசியை ஒட்டி இல்லாததால் ஊழியர்கள் இன்று அனைத்து ஊழியர்களும் ஒரு நிதி நெருக்கடிக்கு ஆளாகி உள்ளனர். 

ஊதியக்குழு பலன்களை அடைய இன்னும் 18 மாதங்கள் காத்திருக்க வேண்டிதுள்ளது.

இந்த தேவையற்ற காலதாமத்தால் ஏற்படப்போகும் கூடுதல் செலவுகளை ஈடுகட்ட 

ஊதியம் மற்றும் ஓய்வூதியத்தில் 01.01.2026 முதல் 5வது ஊதிய குழுவின் போது கொடுத்தது போல் 30 சதம் இடைக்கால நிவாரணம் (Interim Relief ) வழங்கிட வேண்டும் என்ற  கோரிக்கையும் நியாயமானதுதான்.

ஊதியக்குழு இடைக்கால அறிக்கை சமர்ப்பித்திட வாய்ப்பிருந்தால் நிச்சயம் இடைக்கால நிவாரணம் கொடுத்திட நிர்பந்திக்க வேண்டும்.

மேலும் 01.01.2024 முதல் அடிப்படைசம்பளத்துடன் 50 சத பஞ்சப்படியை இணைத்திடவும் கோரிக்கை வலுக்கிறது. 6வது ஊதிய குழுவிற்கு முன் 2004 ஆண்டு 50% பஞ்சப்படி இணைக்கப்பட்டது குறிப்பிடத்தத்தக்கது.

பஞ்சப்படி கணக்கீட்டில் மாற்றம் கொண்டுவரப்போவதாகவும்,01.01.2026 முதல் நோஷனலாக ஊதியத்தை நிர்ணயம் செய்து நிலுவைத்தொகை கொடுத்திடாமல் தவிர்த்திடவும் வாய்ப்புகள் இருப்பதாக தெரிகிறது.

ஊதியக்குழு அமுலாக்கம் எந்த தேதியில் வந்தாலும்

01.01.2026 முதல் நிலுவைத்தொகை வழங்கிட வேண்டும் என்பதிலும் நாம் உறுதியாக இருக்கவேண்டும்.

மற்ற துறைகளை விட நமது துறையில் GDS ஊழியர்களையும் சம்பளக்குழு வரம்பிற்குள் கொண்டுவர வேண்டும் என்ற கோரிக்கை இருக்கிறது.

இதுபோன்ற முக்கிய கோரிக்கைகளை வென்றெடுக்க மத்திய அரசு ஊழியர் மகாசம்மேளனங்கள் ,இரயில்வே தொழிற்சங்கங்கள் ,பாதுகாப்புத்துறை ஊழியர் சம்மேளனங்கள் மற்றும் ஓய்வூதியர் அமைப்புகள் என அனைவரும் ஒன்றினைய 

வேண்டும்.ஒன்றினைக்க வேண்டும்.

பழைய நாட்களைப் போல பக்கம் பக்கமாக கோரிக்கை மனுவினை கொடுத்து அதை படித்திடும் நிலையில் ஊதியக்குழு இல்லை எனத் தெரிகிறது. 

கேள்வி பதில் அடிப்படையில் கோரிக்கைகளை கேட்டு பெற்று அதை பதிவேற்றம் செய்திடும் டிஜிட்டல் அமைப்பு அறிமுகப்படுத்தப்படலாம் எனத் தெரிகிறது.

இடைக்கால நிவாரணம் ,நியாயமான ஊதியம் , பாகுபாடில்லாத ஓய்வூதியம் இவைகளை உறுதிப்படுத்த வலுவான இயக்கங்கள் தான் அவசியம்.

நன்றி

தோழமையுடன்

S.K.ஜேக்கப் ராஜ்

மாநிலச் செயலாளர்

Wednesday, October 29, 2025

 The Union Cabinet, chaired by the Prime Minister Shri Narendra Modi, today approved the Terms of Reference of 8th Central Pay Commission.

The 8th Central Pay Commission will be a temporary body. The Commission will comprise of one Chairperson; One Member (Part Time) and one Member-Secretary.  It will make its recommendations within 18 months of the date of its constitution. It may consider, if necessary, sending interim reports on any of the matters as and when the recommendations are finalized. While making the recommendations the Commission will keep in view the followings:


i.   The economic conditions in the country and the need for fiscal prudence;

ii. The need to ensure that adequate resources are available for developmental expenditure and welfare measures;

iii. The unfunded cost of non-contributory pension schemes;

Pension planning services