...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Wednesday, April 1, 2015

சேமிப்பு வங்கி வட்டி விகிதங்களில் மாற்றம் --செல்வமகள் சேமிப்பு திட்டம் 9.2 ஆக உயருகிறது .SCSS  9.3 ஆகவும் உயருகிறது 

SMALL SAVINGS SCHEMES INTEREST RATES wef 01.04.2015-- PIB NEWS

Government Announces Interest Rates for Various Small Savings Schemes; Rates to Come Into Force with Effect from 01.04.2015
         
It was decided by the Government of India that interest rates on Small savings Schemes will be linked to yields on government securities of comparable maturity. In pursuance of that decision, the Government has decided to revise the rates applicable on various small savings schemes as given in the table below.

     Scheme
Rate of interest
w.e.f.01.04.2014
Rate of Interest
w.e.f. 01.04.2015
1.
2.
3.
 Savings Deposit
4.0
4.0
 1 Year Time Deposit
8.4
8.4
 2 Year Time Deposit
8.4
8.4
 3 Year Time Deposit
8.4
8.4
 5 Year Time Deposit
8.5
8.5
 5 Year Recurring Deposit
8.4
8.4
 5 Year SCSS
9.2
9.3
 5 Year MIS
8.4
8.4
 5 Year NSC
8.5
8.5
 10 Year NSC
8.8
8.8
 PPF
8.7
8.7
Kisan Vikas Patra
8.7
8.7
Sukanya Samriddhi Account Scheme
9.1
9.2

                                                         முக்கிய செய்திகள் 

01.04.2015 இன்று சம்பளம் மற்றும் பென்ஷன் கிடைக்கும் --மாநில சங்க முயற்சிக்கு நன்றி 

AT LAST WE GOT THE ORDERS FOR PAYMENT OF SALARY/PENSION ON 01.04.2015

நம்முடைய அஞ்சல் மூன்று மாநிலச் சங்கத்தின் இடைவிடாத முயற்சி காரணமாக இன்று மதியம் 03.00 மணியளவில்  கர்நாடகா CPMG  அவர்களால் தமிழ் நாடு , கர்நாடகா  மற்றும் கேரளா மாநிலங்களுக்கு எதிர்வரும் 01.04.2015 அன்று ஊதியம் மற்றும்  பென்ஷன்  வழங்கிட உத்திரவு வெளியிடப்பட்டது.  

ஆனால்  தமிழகத்தில் இந்த உத்தரவு சற்றே நிறுத்தி வைக்கப்பட்டது.  SeniorAO  அவர்கள் எழுப்பிய  QUERY காரணமாக  இந்த உத்திரவை வெளியிடுவதில்  சிக்கல் ஏற்பட்டது.  இது குறித்து   SR . AO  விடம்  நம் அஞ்சல் மூன்று மாநிலச் செயலர்  பேசியதன்  விளைவாகவும் மீண்டும் நமது   கர்நாடகா மாநிலச் சங்கம் மூலம் பிரச்சினையை  எடுத்துச் சென்றதன் விளைவாகவும் இறுதியாக  சுமார் 05.30 மணியளவில்  இந்த உத்திரவு வெளியிடப்பட்டது.  

எனினும் நம்முடைய மாநிலச் செயலர்  தொலைபேசியில் பேசிய பின்னர்  இந்த உத்திரவை வெளியிட முன்வந்த   கர்நாடகா CPMG  திரு. M .S ராமானுஜன்  அவர்களுக்கு  நம் மாநிலச் சங்கத்தின் நன்றியை  தெரிவித்துக் கொள்கிறோம். உத்திரவின் நகலை கீழே  பார்க்கவும் .

                                   மார்ச் 31 உன் மகிமைதான் என்ன ?

அப்படி என்ன மார்ச் 31 க்கு மட்டும் இத்தனை மகத்துவம் 

மார்ச் 31க்கு பிறகு சுகன்யா சம்ரிதி தொடங்க சாப்ட்வர் சம்மதிக்காதா?  
மார்ச் 31க்கு பிறகு RPLI  பாலிசை  மெக்காமீ ஸ் ஏறெடுத்து பார்க்காதா ?
பிறகு என்ன இத்தனை 
முஸ்திப்பு .முண்டியடிப்பு .மும்முரம் ,மூர்க்கத்தனம் 
இலக்கை எட்ட மட்டுமா இத்தனை முகங்கள் 
இது ஆர்வமா?  இல்லை நாடகமா ?

நாங்கள் பார்த்த மார்ச் 31இருக்கிறது 

சாக்கு   சாக்யாய் பண மூட்டைகள் 
மாநில அரசின் ஒத்துழைப்போடு வந்து குவிந்ததுண்டு 
5 வருட  இந்திரா பத்திரம் இன்ச ன்டிவ் கிடைத்தாலும் விற்று கொடுக்க இருக்கின்ற ஆட்களால் முடியாது 
ஆரம்பகால MIS [13.5 ) சமாளிக்க முடியாது 
TD உம் NSC உம் கொடுத்து முடியாது 
திருவிழா கோலமாக இருந்தது அஞ்சல் அலுவலகம்  -இன்றும் 
வந்தவர்கள் எல்லாரும் தங்கி விட்டனர் NET கிடைக்காமல் ?

  நாங்கள் கேட்ட  மார்ச் 31இருக்கிறது 

எந்தெந்த அலுவலகங்களுக்கு என்னன்ன தேவையோ அதை முன்கூட்டியே தெரிந்து கொண்டு மீதி இருக்கும் தொகையில் SPM தோழர்கள் கேட்டதை மறுக்காமல் /மறக்காமல் சப் ளை செய்த காலங்களும் உண்டு 
அது வசந்த காலம் 
இது கசந்த காலம் -களம் கண்டால் தான் 
வசந்தம் பிறக்கும்என்றால்  அங்கே அசந்து கிடக்கும் நம்   ஊழியர்களுக்கு
ZINDABAD சொல்லிகொடுங்கள் -இன்குலாப் பேச சொல்லுங்கள்  

இன்று பார்க்கும் மார்ச் 31 இருக்கிறது 

இரவு எத்தனை மணி ஆனாலும் அத்தனையும் முடித்து விட்டுதான் போக வேண்டும் .நெல்லையில் வழிப்பறி கொள்ளை கிடையாது ,கொலை நடப்பது இல்லை கழுத்தில் நகை அணிந்து கொண்டு நள்ளிரவிலும் தோழியர்கள் வீட்டிற்கு தைரியமாக போகலாம் என்ற நிலையிலா இருக்கிறோம். அஞ்சல் வாரியம் நிர்ணயம் செய்த இலக்கை வரிந்து கட்டிக்கொண்டு மாநில நிர்வாகம் மண்டல நிர்வாகத்தை முடுக்குகிறது 
மண்டல நிர்வாகம் கோட்டங்களை விரட்டுகிறது 
கோட்ட நிர்வாகம் மத்தளம் போல் இரண்டு பக்க இடிகளுக்கு மத்தியில் 
ஊழியர்களை புண் படுத்தும் வகையிலும்  ,உரக்கவும் பேச தொடங்குகிறது 
ஊழியர்களோ உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டு 
நாலும் ஏங்குகிறான் -நாள் ஒன்றுக்கு 4 மணிநேரம் தான் தூங்குகிறான்  
சாப்பாடு நல்லா இருந்தாலும் 4 இட்லிக்கு   பதில் 6 சாப்பிடலாம் 40சாப்பிட சொல்லி கட்டாய படுத்த முடியுமா ?
வேறு எந்த துறையிலும் இப்படி ஒரு நெருக்கடிகளை அதிகாரிகள் தன்சொந்த  சக ஊழியர்களுக்கு கொடுத்ததில்லை 

                                   முதல் சங்கம்  இடைச் ச ங்கம் .கடைச் ச ங்கம் 
                                    என்று போய் இன்று தொழிற்சங்க காலம் 
                                  தமிழகத்தில் துளிர் விட தொடங்கி இருக்கிறது 
                                   பயிரை மரமா க்குவோம் ! உழைப்பை உரமா க்குவோம் !

                                               தோழமையுடன் 
                                                SK ஜேக்கப்ராஜ்