...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Thursday, June 1, 2017

                                             முக்கிய செய்திகள் 
LSG பதவி உயர்வு இடமாற்றங்கள் அமுலாகும் இந்நேரத்தில் ஏற்கனவே C மாற்றும் B அலுவலகங்களில் பணியாற்றும் தோழர்களின் விருப்பங்கள் கோரப்பட்டு கூடுமானவரை அவர்களின் விருப்பங்களின் அடிப்படையில் இடமாறுதல்கள் வழங்கப்படும் .ஏற்கனவே RT யில் இடம்பெற்றவர்கள் மீண்டும் புதிய RT அறிவிப்பு வந்தவுடன் விண்ணப்பிக்கவும் .
   திரு ரமணன் அவர்களின் வானிலை அறிக்கை மாதிரி இன்று மழை பெய்யலாம் -மழை பெய்யாமல் இருக்கலாம் என்பதைபோன்றுதான் இடமாறுதல் உத்தரவுகள் இருக்கின்றன .இருந்தாலும் பதவி உயர்வு பெறும் ஊழியர்களின் விருப்ப மனுக்களை பெற்று முடிவெடுக்க நினைக்கும் அனைத்து அதிகாரிகளுக்கும் உள்ளபடியே நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம் .நேற்றைய முந்தினநாள் கூட ஊழியர்களின் முதல் இரண்டு விருப்ப இடங்கள் போடமுடியவில்லை என்றால் மூன்றாவது இடம் போடுவதற்கான சரியான காரணங்களை பதிவு செய்ய கோட்ட நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தி இருப்பது பாராட்ட வேண்டிய அம்சமாகும் .
தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை 

GDS ஊழியர்களின் கருணைஅடிப்படையிலான வேலைவாய்ப்பில் அஞ்சல் வாரியம் வெளியிட்டுள்ள புது உத்தரவு 
 இறந்த ஊழியரின் மகன் --அவர் தத்தெடுத்த மகன் -திருமணமாகிய மகன் (குடும்பம் இவரை முற்றிலுமாக சார்ந்திருந்தால் ) மகள் -தத்தெடுத்த மகள் திருமணமான மகள் (குடும்பம் இவரை முற்றிலுமாக சார்ந்திருந்தால் ) விவாகரத்து பெற்ற மகள் -மருமகள் (GDS ஊழியருக்கு ஒருமகன் இருக்கும் பட்சத்தில் )திருமணம் ஆகாத சகோதரன் அல்லது சகோதரி இவர்கள் தகுதியுடையவர்கள் .ஊழியர் இறந்த 15 நாட்களுக்குள் அந்த குடும்பத்தினருக்கு ரெகுலர் vacancy பட்டியலை தெரிவித்து விண்ணப்பிக்க உதவவேண்டும் .பெரும்பாலும் அவர்களின் வசிப்பிடத்தின் அருகில் காலியான பதவிகள் இருந்தால் அது அவர்களுக்கு கொடுக்கப்படும் .இந்த உத்தரவு 20.05.2017 முதல் அமுலுக்கு வருகிறது .இது ஏற்கனேவே நிலுவையில் உள்ள விண்ணப்பங்களும் பொருந்தும் .தோழர்களே உங்கள் பகுதிகளில் இதுபோல் இறந்த GDS ஊழியர்களின் குடும்பங்கள் இருந்தால் உடனே தெரிவிக்கவும் .
அன்புடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை 

தோழர் விஜயகுமார் SPM மாவடி அவர்களின் பணிநிறைவுவிழா 

 நம் அன்பிற்குரிய தோழர் விஜயகுமார் SPM மாவடி அவர்களின் பணிநிறைவு விழா 31.05.2017 அன்று களக்காடு அருன்ஸ் திருமணமண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது .நமது கோட்டத்தலைவர் குருசாமி அவர்கள் தலைமை தாங்கினார்கள் .திருநெல்வேலி ASP திரு G.செந்தில்குமார்  நமது கோட்ட நிர்வாகிகள் ஜேக்கப் ராஜ்  வண்ணமுத்து  அழகுமுத்து தென்பகுதி தோழர்கள் முத்துகிருஷ்ணன் பெருமாள் ,அன்புராஜன் .மகாராஜன்  சந்திரகுமார் கோபால் ஆனந்த கண்மணி  கணபதி  காஜி அலி மற்றும் தோழியர் கௌரி மற்றும் மாவடி பத்மநேரி களக்காடு அலுவலக ஊழியர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர் .