...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Thursday, May 2, 2019

    அன்பார்ந்த தோழர்களே !
          இந்த ஆண்டு சுழல் மாறுதளுக்கு விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 03.05.2019 ஆகும் .ஆகவே நமது உறுப்பினர்கள் சுழல் மாறுதலுக்கு விண்ணப்பித்தவர்கள் அதன் தகவல்களை கோட்ட சங்கத்திற்கு தெரிவிக்கும் படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் .அதே போல் சுழல் மாறுதலோடு RULE 38 யின் கீழ் நெல்லை கோட்டத்திற்கு வருகின்ற அனைத்து ஊழியர்களும் இடமாறுதல் உத்தரவுகளும் பிறப்பிக்கப்படும் .ஆகவே RULE 38 யின் கீழ் வருகின்றவர்களும் ஏற்கனவே தகவல்கள் தெரிவித்திருந்தாலும் மீண்டும் ஒருமுறை (RT NOTIFICATION க்கு பிறகு ) 9442123416 என்ற கோட்ட செயலரின் எண்ணிற்கு தகவல் தெரிவிக்கும் படி கேட்டுக்கொள்கிறோம் .
               நெல்லை அஞ்சல் மூன்று புதிய உறுப்பினர்களை வாழ்த்தி வரவேற்கிறோம் 
1.தோழர் M.ரமேஷ் PA பேட்டை 
2.தோழியர் A.வெற்றி செல்வி PA களக்காடு 
3.தோழர் M.சபரி மணிகண்டன் PA களக்காடு 
4.தோழர் P.ஜெய குமார் PA அம்பாசமுத்திரம் 
5.தோழியர் S.சுந்தரதேவி PA நாங்குநேரி 
6.தோழியர் J.ரோகினி PA அம்பாசமுத்திரம் 
7. தோழியர் V.முருகானந்தி PA அம்பாசமுத்திரம் 
8. தோழர் R.அதிநாராயணன் PA அம்பாசமுத்திரம் 
9.தோழர் S .நாராயணன் PA களக்காடு 
10.தோழர் M.ஆசை தம்பி PA திசையன்விளை 
                                           அவசர செயற்குழு கூட்டம் 
நாள் 04.05.2019    சனிக்கிழமை 
நேரம் மாலை 6 மணி 
இடம் திருநெல்வேலி HO
பொருள் --1.சுழல் மாறுதல் 2019
                        2.RULE 38 இடமாறுதல் 
                       3.டெபுடேஷன் விதிமீறல்கள் 
                        4. இன்னும் பிற (தலைவர் அனுமதியுடன் )
          செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் புதிய உறுப்பினர்கள் அனைவரும் செயற்குழு கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம் 
                                                    வாழ்த்தி வரவேற்கிறோம் 
 புதிய ASP (HOS ) திரு .மாரியப்பன் அவர்கள் இன்று நமது கோட்டத்தில் பொறுப்பேற்கிறார் .அவர்களை நெல்லை NFPE வாழ்த்தி வரவேற்கிறோம் .
நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் -SK .பாட்சா கோட்ட செயலர்கள் நெல்லை 
                                           


                           


Wednesday, May 1, 2019

தொழிற்சங்க இலக்கணம்


தொழிலாளர் இயக்கம்
பத்தாயிரம் முறை விழும்
எழும் வடுபடும் மறுபடியும் எழும்
அதன் குரல்வளை இறுக்கப்படும்
உணர்வற்றுப் போகும் வரை
தொண்டை அடைக்கப்படும்
நீதிமன்றம்
கேள்விக்கணைகளைத் தொடுக்கும்
குண்டர்களால் தாக்கப்படும்
பத்திரிகைகளால் வசைபாடப்படும்
பொதுமக்களின் புருவ நெரிப்பும் கூட போர் தொடுக்கும்
அரசியல்வாதிகளால் ஏய்க்கப்படும்
ஓடு காலிகளால் மறுப்புரைகள் கூறப்படும்
சூதாடிகளால் பலிகொடுக்கப்படும்
உளவாளிகளின் ஒற்றறியும் நோயால் பீடிக்கப்படும்
கோழைகளால் நடு வீதியில் விடப்படும்
துரோகிகளால் வஞ்சிக்கப்படும்
அட்டைகளால் உறிஞ்சப்படும்
தலைவர்களால் கூட விற்று விடப்படும்
ஓ………………..
இவ்வளவு சோதனைகள் இருந்தாலும்
இந்த வையகம்
இதுவரை கண்டிராத
உன்னத சக்தி வாய்ந்தது
உழைக்கும் மக்களின்
இயக்கம் ஒன்றுதான்.
ஆண்டாண்டு காலமாக
அடிமைப்பட்டிருக்கும் பாட்டாளிகளை
விடுதலை செய்வதே
வரலாற்று கடமையாகும்
இதன் வெற்றி சர்வ நிச்சயமே

(1940ம் ஆண்டு தி மெட்டல் ஒர்க்கர் பத்திரிகையில்
ஈகிள்ஸ்விடப்ஸ் என்னும் தொழிலாளியால் எழுதப்பட்டது)

தோழர்கள் /தோழியர்கள் அனைவருக்கும் மே -தின புரட்சிகர வாழ்த்துக்கள் 
1886-ம் ஆண்டு மே மாதம் 1-ம் தேதியன்று சிகாகோ நகரில் தொழிலாளர்கள் 8 மணி நேரம் வேலை கேட்டு நடத்திய மகத்தான வேலை நிறுத்தப் போராட்டத்தின் அடையாளமே இன்று உலகம் முழுவதும் மே தினமாக கொண்டாடப்படுகிறது.
இப்போராட்டத்திற்கு தலைமை தாங்கிய தோழர்கள் ஆல்பர்ட் பார் சன்ஸ், ஆகஸ்டு ஸ்பைஸ், ஜார்ஜ் ஏங் கல், அடால்ப் பிட்சர் ஆகியோர் தங்களது இன்னுயிரை இதற்காக விலையாக தரவேண்டியிருந்தது. தொழிலாளர் தலைவர்கள் மீது கொலைக் குற்றம் சுமத்தப்பட்டு, மரண தண்டனை விதிக்கப்பட்டது. 1887-ம் ஆண்டு நவம்பர் மாதம் 11-ம் தேதி அவர்கள் தூக்கிலிடப்பட்டனர். 
சிகாகோ நகர தொழிலாளர்களுக்கு 8 மணி நேரம் வேலை கேட்டு நடைபெற்ற போராட்டத்திற்கு தலைமை தாங்கி நடத்திய தோழர்களில் முதன்மையானவர் தோழர் ஆகஸ்டு ஸ்பைஸ் ஆவார். 
ஆகஸ்ட் ஸ்பைஸோ, ‘இந்த குற்றச் சாட்டே தனக்கு தற்காப்பு வாதமாக அமைந்து விட்டது” என எதிர்வாதம் செய்தார். காவலர்கள் மீது தான் குண்டு வீசியதாக அரசு தரப்பில் குற்றம் சுமத்தப்பட்டது இதன்மூலம் பொய் என நிரூபிக்கப்பட்டுவிட்டதாக வாதிட்டார். காவலர்கள் மீது வீசப்பட்ட குண்டு தன்னால் உண்மையில் வீசப்பட்டிருந்தால் அதை நீதிமன்றத்தில் ஏற்றுக்கொள்வதில் தனக்கு எந்தவித தயக்கமும் கிடையாது என்று தைரியத்தோடு உரைத்தார்.
மற்றொரு தோழர் ஆல்பர்ட் பர்ஸன் நீதிமன்றத்தில் வாதாடுகையில், மரம் கனிகளால் அறியப்படுவதைப் போல் தொழிலாளர்கள், போர்க்குணம் மற்றும் தியாகத்தின் மூலம் தங்களது உண்மையான தலைவர்களை அடையாளம் கண்டுகொள்வார்கள். தங்களுக்கு அளிக்கப்படும் மரணதண்டனை தீப்பொறியாக உலகம் முழுவதும் பரவும் என ஆர்ப்பரித்தார்.
ஆஸ்கர் நீபி என்ற தோழர், கலவரம் விளைவிக்கப்பட்ட இடத்தில் நடந்த கூட்டத்திற்கு தான் தலைமை வகித்தேன் என்ற உண்மையை இந்த நீதிமன்றத்தில் ஒப்புக் கொள்வதாகவும், 8 மணி நேரம் வேலை கேட்டு போராடிய தொழிலாளர்களுக்கு நான் தலைவன் என்று சொல்லிக் கொள்வதில் பெருமைப் படுவதாகவும் உரைத்தார்.
அடால்ப் பிட்சர் என்ற தோழர் நீதி மன்றத்தில் உள்ள காவலர்களைப் பார்த்து எள்ளி நகையாடி இவர்களா சட்டத்தின் காவலர்கள்? இவர்கள் திருடர்கள். அடுத்தவர்களின் சொத்தினை அபகரிப்பவர்கள் என எக்காளமிட்டார்.
தோழர் மைக்கேல் ஸ்வாப், நீதி மன்றத்தில் தங்களுடைய நோக்கம் கலகம் விளைவிப்பது அல்ல, சோசலிசத்தை அடைவதே என்று பிரகடனப்படுத்தினார்.
தோழர் ஜார்ஜ் ஏங்கல், தொழிலாளர்களின் தேவை, வேலை, ரொட்டி, அமைதி, இவை மூன்றுதான். இது கூட இவர்களுக்கு இன்று உத்தரவா தப்படுத்தப்படவில்லை என்று முழக்க மிட்டார்.
தோழர் சாமுவேல் பீல்டன் நீதி மன்றத்தில் உரையாற்றுகையில், நாங்கள் சோசலிசத்தைப் பேசினால் சிலர் பயப்படுகிறார்கள் நாங்கள் பிறரின் சொத்துக்களை சோசலிசத்தின் பெயரில் அபகரித்து விடுவோம் என நினைக்கிறார்கள். ஆனால் சோசலிசத்தின் நோக்கம் அது அல்ல.யார் ஒருவர் இன்னொருவருடைய சொத்துக்களை திட்டமிட்டு பறிக்கிறார்களோ அதை தடுத்து நிறுத்தக்கூடிய அமைப்பை உருவாக்குவதுதான் சோசலிசம் என விளக்கினார்.
எதிர்பார்த்தது போலவே அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. தீரத்துடன் போராடிய அந்த தோழர்களுக்கு கிடைத்த மரண தண்டனையே முதலாளித்துவத்திற்கு அடிக்கப்பட்ட முதல் சாவு மணியாக மாறியது. 
அவர்களின் மரணமே உலகத் தொழிலாளர்களை ஒன்று சேர்த்திடும் மகத்தான சக்தியாகவும் உழைப்பாளர்கள் கொண்டாடி மகிழும் மே தினமாகவும் இன்று உருவெடுத்து உள்ளது.
வாழ்த்துக்களுடன் நெல்லை NFPE