...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Tuesday, March 24, 2015

                                போராட்ட கோரிக்கைகளில் ஒருசில 

உள்ளூர் பயிற்சி மையங்களை மூட சொல்லுவது ஏன் ?

     10 பேர் .10 நாட்கள் பயிற்சி என்ற பெயராலே வருவதும் .போவதுமாக இருக்கிறார்கள் .இருக்கின்ற ஆட்பற்றாக்குறையில் SINGLE HAND SPM என்றால் அவருக்கு பதில் ஆள் அனுப்பவேண்டும் .அந்த அலுவலகத்திற்கு மேலும் SHORTAGE .பயிற்சி முடித்து வருவதற்குள் மீண்டும் அதே அலுவலகத்தில் இருந்து மீண்டும் வேறொருவருக்கு பயிற்சி இதனால் கோட்ட அளவில் செயற்கையான ஆள் பற்றாகுறை சராசரியாக நாள் ஒன்றுக்கு 20 என்பது உறுதி ஆகிறது ,மேலும் சாதரண விடுப்புகள் /DEPUTATION என்பது வேறு 

 பயிற்சி மையங்களுக்கு ஆள் தேவை என்பதற்காக இந்த ஆட் பற்றாக்குறையில் கதறுவது நாம் தானே !

   காலுக்கு தகுந்தாற்போல் செருப்பு போட்ட காலம் மாறி 
   செருப்புக்கு தகுந்தாற்போல்  காலை வெட்ட சொல்வது நியாயமா ?
   செருப்புக்கு தோல் வேண்டி செல்வ குழந்தைகளை பழி கொடுப்பதா ?  

                            தலை பெருக்கிறது  --உடல்  சிறுக்கிறது   

கோட்ட அலுவலகத்தில் உட்கார நாற்காலி /மேஜை இல்லாமல் பாளையம்கோட்டையில் இருந்து மட்டும் பெருமளவில் ஊழியர்கள் DEPUTATION அனுப்ப சொல்வதையும் கோட்ட நிர்வாகம் மறு பரிசிலனை செய்ய வேண்டும் 
விளைவு பாளை CBS கவுன்ட்டர் 6 இயங்குவது 3அல்லது 4
SB  Back office அனாதை குழந்தைபோல் போனது .ACCOUNTS BRANCH அடுத்த வீட்டு பிள்ளை ஆனது .
        தொடரும்     SK .ஜேக்கப் RAJ  கோட்ட செயலர் 

அன்பார்ந்த தோழர்களே !

               டார்கெட் இல் தொடங்கி டார்செரில் முடிந்திருக்கும் நிர்வாகத்தின் எதேச்சதிகார  போக்கை கண்டித்தும் ,,பாடாவதியான கம்ப்யூட்டர் மற்றும் உபகரணங்களை மாற்றிட   கோரியும் ,தபால் காரர்   பணி இடங்களில்    அவுட் சைடர்களை பார்க்க அனுமதிக்கவும் ,தென் மண்டலத்தில் நடக்கும் தொழிற் சங்க பழிவாங்குதலை கண்டித்தும் ,கோட்ட கண்காணிப்பாளர் கொடுத்த எல்லா தண்டனைகளையும் ( 3மாதம் இன்கி ரிமென்ட் வெட்டு என்றால் 6 மாதமாக உயர்த்துவது ,6 மாதத்தை 1வருடம் ,1 வருடத்தை 3வருடம் என விதி 16 இல் கீழ் கொடுக்கப்பட்ட தண்டனைகளை தானாகவே REVIEW செய்து தனக்குதானே மகிழ்ந்து கொள்ளும் மண்டல நிர்வாகம் ) உயர்த்துவது போன்ற மனிதாபமற்ற கொடுமைகளை கட்டு படுத்த நடைபெறும் 26.03.2015 அன்று ஒரு நாள் போராட்டத்தை முழுமையாக வெற்றி பெற செய்வோம் .

Incharge SPM தோழர்களுக்கு ஒரு வேண்டுகோள் 

 கோட்ட அலுவலகத்தில் இருந்து தகவல் கேட்டாலும் /கேட்காவிட்டாலும் 25.03.2014 மாலைக்குள் நீங்கள் வேலைநிறுத்தத்தில் பங்குபெறுவது குறித்து ஈமெயில் மூலம் கீழ் கண்ட கடிதத்தை கொடுக்கவும் .

 SIR 
          I kindly inform that I am going to  participate   in the proposed strike ,call given by  NFPE on 26.03.2015 . 
                                                                         Name 
                                                                        ----------------------
                                                                        SPM 

 ஏனைய சந்தேகங்கள் இருந்தால் கோட்ட சங்க நிர்வாகிகளை தொடர்பு 
கொள்ளவும் 

                     போராட்ட வாழ்த்துக்களுடன் 

                                      SK .ஜேக்கப்ராஜ் 
                                     கோட்ட செயலர் 

Monday, March 23, 2015

நிர்வாக அலுவலகங்களில் DEPUTATION என்ற புறவாசல் வழியாக பல ஆண்டுகளாக ஜால்ரா தட்டி கொண்டிருந்த ஊழியர்கள் மீண்டும் போஸ்ட் ஆபீசுக்கு போய் சீல் குத்த CPMG அவர்களின் உன்னதமான உத்தரவை பாரீர் !

SUCCESS TO THE EFFORTS OF TN NFPE COC ! SUCCESS TO TN P3 CIRCLE UNION !

தமிழக என். எப்.பி .இ . இணைப்புக் குழுவின் வெற்றி  ! 
தமிழக  அஞ்சல் மூன்று மாநிலச் சங்கத்தின் வெற்றி ! !

அன்புத் தோழர்களே ! அஞ்சல் மூன்று மாநிலச் சங்கத்தின் 17.03.2015 கடிதத்தையும்  நமது மதிப்புக்குரிய  CPMG  அவர்களின் 20.03.2015 தேதியிட்ட  உத்திரவின் நகலையும்   நன்கு படித்துப் பார்க்கவும் ! 

15 ஆண்டு கால  போராட்டத்திற்கு  தற்போது  நமது  வேலை நிறுத்த போராட்டத்தால் கிடைத்த  வெற்றிதான் இது !  

மாநில அலுவலகம்  மற்றும் அனைத்து மண்டல அலுவலகங்களிலும் நீண்ட வருடங்களாக DEPUTATION  என்ற பெயரில்   இருந்து வரும் ஊழியர்கள்  அவர்களது சொந்த கோட்டங்களுக்கே  திரும்ப அனுப்பப் படுவார்கள் என்ற உத்திரவே  இது !  

நம் தமிழ் மாநில அஞ்சல் மூன்று செயலரின் கோரிக்கையை ஏற்று  உத்திரவிட்டுள்ள  CPMG  உயர்திரு. M .S . ராமானுஜன் IP o S  அவர்களுக்கு  மீண்டும்  நன்றி !  இதர கோரிக்கைகளிலும்  நாம்  உறுதியான வெற்றியைப் பெற  வேலை நிறுத்தத்தை தீவிரப் படுத்துங்கள் !