...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Saturday, September 19, 2015

WE PRAY FOR OUR LEGEND LEADER COM.N. BALU TO RECOVER FROM HIS ILLNESS !

முன்னாள் மாநில செயலர் அண்ணன் பாலு அவர்கள் உடல்நலம் குன்றி திருவனந்தபுரத்தில் சிகிச்சையில் இருக்கிறார் .அவருடைய உடல்நலத்தில் பெரியதொரு முன்னேற்றம் இல்லை என்பது வருத்தமான செய்தி .அவர் நலம் பெற நாமும் இறைவனை வேண்டுவோம் 

"இறைவா  உன் மாளிகையில்  எத்தனையோ மணி விளக்கு !
தலைவா உன் காலடியில்  எம் நம்பிக்கையின் ஒளி  விளக்கு !
ஆண்டவனே உன் பாதங்களை கண்ணீரால் நீராட்டினோம் !
இந்த   ஓர்  உயிரை  நீ வாழ வைக்க இன்று உன்னிடம் கையேந்தினோம் !"

அஞ்சா  நெஞ்சன்  அண்ணன் பாலு  மீண்டும்  நலம் பெற்று  வாழ 
இந்த மாநிலச் சங்கம்  வேண்டுகிறது !  விழைகிறது ! நல்லதே  நடக்கும் !
அவரை மீண்டும் வரவேற்க  நாம் காத்திருக்கிறோம் !

                             புதுகை மாநில மாநாட்டில் அஞ்சா நெஞ்சன் ,மாநிலசெயலர் JR,மத்திய மண்டல செயலர் குமார்  

Friday, September 18, 2015

                             தோழர் KG குருசாமி இல்ல மணவிழா                   

 தோழர் T.சுடலையாண்டி இல்ல மணவிழா  

                                                    செய்திகள் 
1.GDS தோழர்களுக்கு சைக்கிள் பராமரிப்பு அலவன்ஸ் உயருகிறது .SPM தோழர்கள் தங்கள் அலுவலக GDS ஊழியர்களிடம் இந்த தகவலை தெரிவிக்கவும்

REVISION OF CYCLE MAINTENANCE ALLOWANCE TO GDS MC/ GDS MD W.E.F. 15.9.2015

GDS  MC / GDS MD பணியினைப் பார்க்கும் நம்முடைய GDS  தோழர்களுக்கு 15.09.2015 முதல் CYCLE  MAINTENANCE  ALLOWANCE  மாதம் ஒன்றுக்கு ரூ. 90/- ஆக உயருகிறது . மேலும்  இனி வரும் காலத்தில், ஒவ்வொரு முறை D.A. 50% SLAB  தாண்டும் போதும் CMA  25% உயர்வு  அளிக்க வேண்டும் என்றும் இலாக்கா  உத்திரவு அளிக்கப்பட்டுள்ளது. 

2..                                                   மாதா ந்திர பேட்டி 
  இந்த மாத மாதாந்திர பேட்டிக்கு SUBJECTS இருந்தால் உடனே கீழ் கண்ட தோழர்களுக்கு தெரிவிக்கும் படி கேட்டு கொள்கிறோம் .
1.தோழர் C .வண்ணமுத்து APM SB திலி                                  9843355339
2.தோழர்  C.  மந்திர மூர்த்தி   PA சங்கர்நகர்                            9943935299
3.தோழர் SK .பாட்சா CO திலி                                                       9976785913  
-------------------------------------------------------------------------------------------------------------------------