...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Friday, January 22, 2016

அன்பார்ந்த தோழர்களே !
               21.01.2016 அன்று நடைபெற்ற மாதாந்திர பேட்டியில் எடுக்கப்பட்ட முடிவுகள் .

1..Request call for flood advance applications from our staffs 

for   
 assigning the amount required

           நமது கோரிக்கை ஏற்றுகொள்ளபட்டு உடனடியாக 

விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன .(பார்க்க அடுத்த செய்தி )

2.MACP பட்டியல் 

      MACP  I இல் ஒருவருக்கும் ,MACP II இல் 24 பேருக்கும் MACP III -

ஒருவருக்கும் பதவி உயர்வு கிடைத்துள்ளது .அனைவருக்கும் எங்கள் 

வாழ்த்துக்கள் .

3.LRPA பட்டியல் 

   கடந்த 2013 யை போல் அதே எண்ணிக்கை எழுத்தர்கள் LRPA 

ஆக  மாற்றபடுகிறார்கள்     

4.சுழல்  மாறுதல் 

         இந்த மாத இறுதியில் பட்டியல் வெளிவருகிறது .

5.பிரிண்டர் /பேட்டரிகள்  

             ஏற்கனவே  வந்த 44 பேட்டரிகள் தேவையான அலுவலகத்தில் 

பொருத்தப்பட்டுள்ளன .மேலும் 22பே ட்டரிகள்  விரைவில்

வரவிருக்கின்றன .வந்தவுடன் C கிளாஸ் அலுவலகத்திற்கு

 பொருத்தப்படும் 

6. மகாராஜநகர் /பெருமாள் புரம் எழுத்தர்கள் பற்றாக்குறை ஓரிரு நாளில்

 தீர்க்கப்படும்  

7.B CLASS CBS அலுவலகங்களில் அதிலும் குறிப்பாக அதிக BO கள் உள்ள 

அலுவலகங்களில் Deputation குறைக்கப்படும்   

8.Shiffy net வொர்க் கிடைக்காத அலுவலகங்களை மூன்றடைப்பு மாதிரி net 

வொர்க்  கிடைக்கிற பகுதிக்கு மாற்றப்படும் 

9.நாள் ஒன்றுக்கு எத்தனை முறை நெட் வொர்க் போகிறது ,எத்தனை 

முறை Already login ஆகிறது என்ற விவரங்களை  பதிவு செய்துவிட்டு 

அதை கோட்ட 

அலுவலகம் /கோட்ட சங்கத்திற்கு தெரிவிக்கவும் .

                                                           நன்றி 

                                                       வாழ்த்துக்களுடன் 

                                                 SK .ஜேக்கப்ராஜ்  கோட்ட  செயலர் 

.

Thursday, January 21, 2016

வெள்ளநிவாரண விண்ணப்பங்கள் கோட்ட அலுவலகத்தால் கோரப்பட்டுள்ளன --நமது கோட்ட சங்க தொடர் முயற்சிக்கு வெற்றி !
   அன்பார்ந்த தோழர்களே !
                    அஞ்சல்  ஊழியர்களுக்கு வெள்ள நிவாரணம் முன்பணம் வழங்க எவ்வளவு தொகை செலவாகும் என்ற கணக்கை மண்டல நிர்வாகம் 16.12.2015 அன்று கேட்டதற்கு அன்றைய தேதியில் எந்த விண்ணப்பமும் இல்லை என்ற பதில் கோட்ட நிர்வாகத்தால் அனுப்பப்பட்டுள்ளது .இது குறித்து இன்றைய 21.01.2016 மாதாந்திர பேட்டியில் விவாதித்து முதலில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஊழியர்களிடம் இருந்து விண்ணப்பதை கேட்டு வாங்குங்கள் என்ற நமது கோரிக்கையை ஏற்று கோட்ட அலுவலகம் இன்று GDS உட்பட அனைத்து ஊழியர்களிடமும் விண்ணபங்களை கேட்டு உள்ளது .இலாகா ஊழியர்களை பொறுத்தவரை FORM 9 மற்றும் Declaration ஒன்றும் கொடுத்தால் போதும் .GDS யை பொறுத்தவரை FORM -4 ,Declaration ,இவைகளுடன் வருவாய்துறை அலுவலகத்தில் இருந்து பெறப்பட்ட சான்றிதழுடன் அனுப்ப வேண்டும் .
இலாகா ஊழியர்களுக்கு முன்பனம் --ரூபாய் 7500 ( 25 மாத பிடித்தம் )
GDS ஊழியர்களுக்கு ரூபாய் 5000+ DA 50 சதம் உயர்வால் வந்த தொகை (GDS ஊழியர்கள்  திருப்பி செலுத்த வேண்டாம் .அவர்களுக்கு Welfare தொகையில் இருந்து கொடுக்கப்படும் 
                        கோட்ட அலுவலகத்தால் தங்கள் அலுவலகத்திற்கு  ஈமெயில் அனுப்பப்பட்டுள்ள  படிவத்தை நிரப்பி அனுப்புங்கள் .பாரம் தேவைபடுவோர்  கோட்ட சங்கத்தை தொடர்பு கொள்ளவும் .இந்த உத்தரவு 11.12.2015 இல் இருந்து மூன்று மாதங்களுக்கு பொருந்தும் .
                                  இலாகா ஊழியர்களுக்கான படிவம் 


                        GDS  ஊழியர்களுக்கான படிவம்