...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Friday, May 29, 2020

தோழியர் P குமாரி   DY போஸ்ட்மாஸ்டர் & தலைவர் NFPE NELLAI மகிளா கமிட்டி அவர்களின் பணிநிறைவு விழா

அன்றைய அஞ்சல் துறையின் 
அடிமைகளின் மற்றொருபெயர் RTP 
இன்றைய ED களைவிட 
எந்த விதத்திலும்  உயர்ந்தவர் இல்லை என்ற 
உத்தரவத்தோடு பணிக்கு அழைக்கப்பட்டவர்களுக்கு 
வைத்த பட்டப்பெயர் தான் அது 

தினக்கூலிக்காக கையேந்திய 
தொழிலாளிகளில் கொஞ்சம் 
வசதியானவர்  இவர்கள் 
அந்த வரிசையில் 
அவதரித்த அங்காள அம்மன் தான் 
எங்கள் குமாரி 

வெண்கல குரலும் 
வெளிர் சிரிப்புகள் மட்டுமல்ல 
இவரின் அணிகலன்கள் 

வெறும் சிரிப்புகளை வைத்தே 
அடையாளம் காணப்பட்ட நாட்களில் 
அவரின் சிரிப்பில் அர்த்தம் இருந்தது 
அது அழகின் சிரிப்பை விட 
அர்த்தமுள்ளது 

RTP என்றால் பேசக்கூடாது 
அலுவலகத்தில் சுதந்திரமாக திரிய கூடாது 
நிரந்தரம் குறித்து கேட்க கூடாது 
கொடுப்பதை வாங்கி கொள் -என்ற 
கருப்பு சட்டத்திற்கு 
எதிராக போராடிய பேரியக்கத்தில் 
அப்பொழுதே பங்கேற்றவர் 

இந்த சூழலில் தான் -தென்காசியில் இருந்து 
தினமும் வந்துசென்றதில் ஏற்பட்ட தாமதத்திற்காக 
கோபப்பட்ட அதிகாரியின்  கொடுமையை எதிர்த்து 
கொள்கை  முழக்கம் உங்களுக்காக ஒலித்தது 

அதன் பின்புதான் 
உழைக்கும் பெண்களுக்காக -ஒரு இயக்கம் 
நெல்லையில் இருக்கிறதென்றால் அதன் பெயர் 
NFPE என பின்னாளில் பேசப்பட்டது 
இன்னாளிளும் பேசப்படுகிறது 


அடுத்து வந்த மருத்துவ விடுப்பு போராடத்திலும் 
இடைநீக்கம் செய்யப்பட்டவர்களில் நீங்களும் ஒருவர் 
ஆறுதல் சொல்ல சென்ற தலைவர்களுக்கோ பேரதிர்ச்சி 
அதே சிரிப்பு அதே உறுதி 
அதே துணிவு அதே அதிரவைக்கும் குரல் 

இந்த பின்னணியில் தான் 
NELLAI NFPE யின் மகிளா கமிட்டி தலைவர் 
மாநாடுகளில் எங்களுக்கான ஆதரவு 
போராட்ட காலங்களில் அபார பங்கேற்பு 


அ ச்சம் மடம் நாணம் தவிர்த்து -
மிச்சமிருந்த தயக்கத்தை தளர்த்தி 
தோழியர்களை ஓரணியில் திரட்டியவரே !
ஆண்டுக்கொருமுறை சங்கம் மாற சொல்லி 
வந்தவரை 
வந்தவழி வரை விரட்டியவரே !அவருக்கும் அவர் 
வந்த வழியின் வரலாற்றை புகட்டியவரே !

கோட்ட அலுவலகத்தில் பணியாற்றினாலும் 
தலைமை அஞ்சலகத்தில் இருந்தாலும் 
போராட்டதிற்கு  தலைமையேற்ற எங்கள் 
ஜான்சி ராணி -ராணி மங்கம்மாள்   நீ 

அன்றுவந்த சோதனை இன்றும் வந்தது 
நல்லெண்ணம் கொண்ட அதிகாரிகளால் 
நன்மையே வந்தது 
அச்சம் இல்லா அலட்சிய பார்வை 
இன்றும் நின்றது 

எவரெவர் ஓய்வு பெற்றாலும் வழக்கமாக 
சொல்லும் வார்த்தை வெற்றிடம் உண்டு என்று 
சத்தியமாக சொல்லுகிறோம் 
இங்கு வெற்றிடம் இல்லை
 வெற்றியின் இடம் பிறந்திருக்கிறது 
மகிளா கமிட்டி அல்ல -
மகளிர் ராணுவ பிரிவே -இங்கு 
மலர்ந்திருக்கிறது -வளர்ந்திருக்கிறது 

தோழியர்களை -இளந்தோழர்களை 
உற்சாக படுத்திய 
உருவாக்கிய எங்கள் குமாரியே 
உங்கள் பணி ஓய்வு காலங்கள் சிறக்க 
வாழ்த்துகிறோம் வணங்குகிறோம் 
                                  நன்றி 
                                                             தோழமையுடன் 
                                                                SK ஜேக்கப் ராஜ் 
                                                                கோட்ட செயலர் 

















Sunday, May 24, 2020

                                  இனிய திருமண வாழ்த்துக்கள் 
இன்று 24.05.2020 மணவிழா  கானும் அன்புத்தோழியர் K .வள்ளிகாஞ்சனா  தபால்காரர் டவுண் அவர்களின் இல்லறம் சிறக்க NELLAI NFPE வாழ்த்துகிறது 
                                                               மணமக்கள் 
                                     K .மகாராஜா --K . வள்ளிகாஞ்சனா
நாள் 24.05.2020        இடம் உக்கிரன்கோட்டை சிவன்கோவில் 

Saturday, May 23, 2020

அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !
                                                நெல்லை கோட்ட செய்திகள் 
*நேற்று சில நண்பர்களிடம் இருந்து ஓரிரு  செய்திகள் வந்தன .தபால்காரர் தோழர்களிடம் இன்று நீங்கள் யாரும் பட்டுவாடா செய்யவேண்டாம் தபால்களை கட்டிவையுங்கள் .IPPB கணக்கு தொடங்கினால் போதும் என்று வாய்மொழி உத்தரவு பிறப்பிக்க பட்டதாம் .உண்மையா ? பழையகாலங்களில் சில அதிகாரிகள் இப்படி சொன்னதுண்டு நீ OFFICE யை திறந்தாலும் சரி திறக்காவிட்டாலும் சரி உனக்கு நிர்ணயிக்கப்பட்ட கணக்கை பிடி அப்புறம் கணக்கை முடி ........அன்று SB க்காக மல்லுக்கட்டியவர்கள் இன்று IPPB க்காக .................
*இன்றைய காலகட்டத்தில் ஊழியர்களுக்கு இலாகா அடையாளஅட்டை என்பது அவசியமானது .பல ஊழியர்கள் அடையாளஅட்டை வேண்டும் என எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறார்கள் .சிலர் விண்ணப்பித்தாலும் அவைகள் நிர்வாகத்தால் திருப்பப்படுவதாக கூறுகிறார்கள் .ஆகவே கோட்ட நிர்வாகமே ஒரு மாதிரி அடையாளஅட்டையை வெளியிட்டால் ஊழியர்கள் அதன் அடிப்படையில் அடையாள அட்டை விண்ணப்பிக்க உதவியாக இருக்கும் .
*நேற்றைய கருப்பு அட்டை இயக்கத்தில் பங்கேற்ற தோழர்கள் /தோழியர்கள் அனைவருக்கும் எங்கள் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம் .பல அலுவலகங்களில் இருந்து தங்களுக்கு பேட்ஜ் வரவில்லை என வருத்தப்பட்டார்கள் .இனி வருங்காலங்களில் இந்த குறைகள் முற்றிலும் களையப்படும் என்பதனை தெரிவித்துக்கொள்கிறோம் .
நன்றி .தோழமையுடன் 
SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் அஞ்சல் மூண்று நெல்லை 
T.புஷ்பாகரன் கோட்ட செயலர் அஞ்சல் நான்கு