மாநிலச் சங்க செய்திகள்
அன்புத் தோழர்களுக்கு வணக்கம் ! மாநில தலைமையகத்தில் நடக்கும் நிகழ்வுகளின் செய்திகளை கீழே உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்.
16.04.2015 தமிழக அஞ்சல் -RMS NFPE இணைப்புக் குழு கூட்டம்
=============================================================
கடந்த 16.4.2015 அன்று மாலை சென்னை எழும்பூர் RMS அலுவலகத்தில் தமிழ் மாநில NFPE இணைப்புக் குழு கூட்டம் நடைபெற்றது. இதில் எதிர்வரும் 06.05.2015 முதல் நடைபெறவுள்ள PJCA வின் காலவரையற்ற வேலை நிறுத்தம் குறித்து விவாதித்து முடிவுகள் எடுக்கப்பட்டது. அதன்படி-
FNPO வின் முடிவுக்கு இணங்க,
==============================
1, PJCA வால் அறிவிக்கப்பட்டபடி, மாநில தலைமையகத்தில் NFPE/FNPO தலைவர்களை அழைத்து வேலை நிறுத்த ஆயத்தக் கூட்டம் நடத்துவது.
2. NFPE /FNPO மாநிலச் சங்கங்கள் கூட்டாக வேலை நிறுத்தம் குறித்து சுற்றறிக்கை வெளியிடுவது.
3. NFPE /FNPO மாநிலச் சங்கங்கள் கூட்டாக வேலை நிறுத்தம் குறித்து சுவரொட்டி வெளியிடுவது.
மாநில COC முடிவுக்கு இணங்க
==============================
1. மண்டல ரீதியிலான பிரச்சார இயக்கம், அந்தந்த மண்டலங்களில் உள்ள பொறுப்பாளர்களுடன், மண்டலங்களுக்கு நியமிக்கப்பட்ட NFPE உறுப்பு சங்கங்களின் மாநிலச் செயலர்கள் எதிர்வரும் 21.04.2015 முதல் 24.04.2015 வரை நான்கு நாட்கள் கோட்ட ரீதியாக சென்று பிரச்சார இயக்கம் மேற்கொள்வது .
மண்டல பொறுப்பு
==================
சென்னை பெருநகர மண்டலம் : தோழர். K . ரமேஷ் , R 3 மாநிலச் செயலர்.
மேற்கு மண்டலம் : தோழர். J . இராமமூர்த்தி , P 3 மா. செயலர்.
மத்திய மண்டலம் : தோழர். B . பரந்தாமன் ,R 4 மா. செயலர்
: தோழர். R . தனராஜ் , GDS மா. செயலர் .
தென் மண்டலம் : தோழர். G .கண்ணன் , P 4 மா. செயலர்.
திருச்சி, மதுரை , கோவை அஞ்சல் மூன்று மண்டலச் செயலர்கள் உடன் இது குறித்து இதர சங்கங்களின் நிர்வாகிகளுடன் கலந்துகொண்டு சுற்றுப் பயண விபரம் தெரிவிக்க வேண்டுகிறோம் .
2. 25.04.2015 அன்று சென்னையில் PJCA வால் அறிவிக்கப்பட்ட NFPE/FNPO தலைவர்களை அழைத்து வேலை நிறுத்த ஆயத்தக் கூட்டம் நடத்துவது.
17.04.2015 மாலை 03.00 மணியளவில் தொழிலாளர் நல உதவி ஆணையர் முன்னிலையில் நடைபெற்ற அமைதிப் பேச்சு வார்த்தை
===================================================
நமது தமிழக NFPE COC யின் வேலை நிறுத்தத்தை ஒட்டி தொழிலாளர் நல உதவி ஆணையர் முன்பாக மாநில நிர்வாகத்துடன் பேச்சு வார்த்தை நடை பெற்றது . அதில் நிர்வாக தரப்பில் அளிக்கப் பட்ட பதில் :-
1. நமது அனைத்து கோரிக்கைகளின் மீதும் தல மட்டங்களில் இருந்து அறிக்கைகள் பெறப்பட்ட உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவ தாகவும் ;
2. தமிழகத்தில் LSG பதவி உயர்வு குறித்து நீதி மன்ற வழக்குகள் காரணமாக மேலும் சில விளக்கங்கள் DTE க்கு அளிக்கப்பட்டுள்ள தாகவும் , அதனால் இந்தப் பிரச்சினையில் சிறிது தாமதமாகலாம் என்றும் ;
3. LSG தவிர LSG யிலிருந்து HSG II, HSG II விலிருந்து HSG I, இதேபோல PM GRADE I லிருந்து PM GRADE II, PM GRADE II விலிருந்து PM GRADE III பதவி உயர்வுகளுக்கான DPC விரைந்து முடிக்கப்படுவதாகவும் வரும் வாரத்தில் இவை வெளியிடப்படும் என்றும் ;
4. DEPUTATIONIST RELIEF மற்றும் AUDIT OFFICE CANTEEN பிரச்சினைகள்
CPMG ( கர்நாடகா) அவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்லப் பட்டுள்ளதாகவும் ;
5. MC CAMISH பிரச்சினைகள் குறித்து நம் மாநிலச் சங்கத்தின் கடிதத்தின் மீது ஏற்கனவே நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் , பெருமளவில் அதன் மீதான பிரச்சினைகளுக்கு தீர்வு தரப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது . நமது மாநிலச் சங்கத்தின் கடிதத்திற்கு பதில் ஒன்றும் அளிக்கப்பட்டுள்ளது . அதன் நகல் கீழே தருகிறோம். கோட்ட/ கிளைச் செயலர்கள் இதனை நன்கு படித்துப் பார்த்து , இதன் மீதான தங்களது கருத்துக்களை ,உங்கள் கோட்டத்தில் இந்தப் பகுதியில் பணியாற்றும் ஊழியருடன் கலந்துகொண்டு, உடன் மாநிலச் சங்கத்திற்கு தெரிவித்திட வேண்டுகிறோம். இது அவசரம் . மற்றும் அவசியம் .
6. எதிர்வரும் 20.04.2015 க்கு பிறகு CPMG தமிழகம் வரும்போது இருதரப்பு பேச்சு வார்த்தைக்கு ஏற்பாடு செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.