...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Saturday, January 29, 2022

 அன்பார்ந்த தோழர்களே !தோழியர்களே ! 

                                   முக்கிய செய்திகள் 

    *சுழல் மாறுதல் 2022-23 ஆண்டிற்க்கான வழிகாட்டுதலை அஞ்சல் வாரியம் 28.01.2022 அன்று வெளியிட்டுள்ளது .

*வழக்கம் போலவே non -sensitive பதவிகளில் உள்ளவர்கள் ஒரு ஆண்டு extension வழங்கப்படும் 

*அதேபோல் sensitive பதவிகளில் உள்ளவர்கள் அவர்களுக்கான பழைய பணிக்காலங்களில் உள்ள நடத்தைகளை பொறுத்து வழங்கப்படும் 

*C மற்றும் B கிளாஸ் அலுவலகத்தில் தனியாக பார்த்தவர்க்ளுக்கு EXTENSION கிடையாது .இதில் கோவிட் பாதிப்பு போன்ற மிகவும் பாதிப்புள்ள ஊழியர்களுக்கு CPMG அவர்களால் 6  மாதம் EXTENSION வழங்கப்படும் 

*சென்ற ஆண்டு EXTENSIONபெற்றவர்களுக்கு இந்தாண்டு EXTENSIONகிடையாது 

*OUT OF SATATION இடமாறுதல் கிடையாது 

இந்த EXTENSION போன்ற வசதிகளை நாம் பெருகிறோமோ இல்லையோ அதிகாரிகள் STATIONT TENNURE மற்றும் EXTENSION சலுகைகளை பெற்றுக்கொண்டுதான் வருகிறார்கள் .......

நன்றி தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை 


Thursday, January 27, 2022

 அன்பார்ந்த தோழர்களே !தோழியர்களே !வணக்கம் 

              நெல்லையில்   இன்று 27.01.2022 நமது இரண்டாவது கட்ட இயக்கமான கருப்பு பேட்ஜ் அணிந்து பணியாற்றுதல் ----வெற்றிபெற செய்வீர் ! அதன் புகைப்படங்களை கோட்ட செயலர்களுக்கு அனுப்புங்கள் 

                                                              நன்றி ! நன்றி !நன்றி !

                    டார்கெட் நெருக்கடிகளுக்கு எதிரானநெல்லை கோட்ட நிர்வாகத்தின் நடவடிக்கைகளை கண்டித்து நடைபெற்ற 25.01.2022 ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டு சிறப்பித்த அனைவருக்கும் கூட்டு போராட்ட குழுவின் சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம் .பாளையம்கோட்டை மற்றும் அம்பாசமுத்திரம் கிளைகளில் தலமட்ட போராட்டம் என்பது ஒருசேர ஒற்றுமையாக நடைபெற்றது NELLAI --NFPE க்கு மேலும் புதிய உத்வேகம் தந்துள்ளது .அதேபோல் GDS ஊழியர்களும் பெருமளவில் கலந்துகொண்டு சிறப்பித்ததும் இந்த ஆர்ப்பாட்டத்தின் மாபெரும் வெற்றியே !குறிப்பாக திசையன்விளை பகுதி தோழர்களின் பங்களிப்பு அவர்களை ஓரணியில் திரட்டி கொண்டுவந்த அன்பு தோழர் தொழிற்சங்க தீவிர பற்றாளர் சண்முகம் SPMதிசையன்விளை அவர்க்ளுக்கும் வள்ளியூர் பகுதிகளில் GDSதோழர்களை ஒருங்கிணைத்து அழைத்துவந்த தெற்கு கருங்குளம் -தோழர் ஐயப்பன் அவர்களுக்கும் எங்கள் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம் ..

                                                 மாநில சங்கங்களுக்கு நன்றி நன்றி 

நமது ஆர்ப்பாட்ட அறிவிப்பு கிடைத்த நாளில் இருந்து நமக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கிய அஞ்சல் மூன்றின் மாநில செயலர் தோழர் வீரமணி மண்டல செயலர் அண்ணன் R.கிருஷ்ணமூர்த்தி அவர்களுக்கும் R3 மாநில செயலர் தோழர் ரமேஷ் அவர்களுக்கும் எங்கள் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம் ..---அதேபோல் நமக்கு ஆதரவாக 25.01.2022அன்று ஆதரவு இயக்கங்களை அறிவித்து கருப்பு பேட்ஜ் அணிந்து பணியாற்றிய அஞ்சல் நான்கு கிளை /கோட்ட சங்கங்களுக்கும் ஆர்ப்பாட்ட தினத்தன்று நம்மோடு ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட அஞ்சல் நான்கின் மாநில செயலர் தோழர் G.கண்ணன் அவர்களுக்கும் ,CPMG மற்றும் தென்மண்டல அதிகாரிகளுக்கு கடிதங்களை கொடுத்து விரைந்து செயல்பட்ட பொறுப்பு மாநில செயலர் தோழர் வேதகிரி அவர்களுக்கும் தென்மண்டல செயலர்  ராஜசேகர் மற்றும் மாநில உதவி தலைவர் தோழர் சோலையப்பன் அவர்களுக்கும் எங்கள் நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.

                                     நன்றி ...போராட்ட வாழ்த்துக்களுடன் கூட்டு போராட்ட குழு 

                              

Tuesday, January 25, 2022

 அன்பார்ந்த தோழர்களே !தோழியர்களே ! 

                        டார்கெட் நெருக்கடிகளை கண்டித்து இன்று மாலை 05.45 மணிக்கு பாளை தலைமை அஞ்சலகம் முன்பு நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் தாங்கள் அனைவரும் பங்கேற்குமாறு மீண்டும் நினைவூட்டுகிறோம் ..

                      அதேபோல்  27.01.2022 அன்று நடைபெறும் கருப்பு பேட்ஜ் அணிந்து பணியாற்றிடவும் அதன் புகைப்படங்களை கோட்ட சங்கத்திற்கு அனுப்பிடவும் கேட்டுக்கொள்கிறோம் .கருப்பு பேட்ஜ் அனைத்து அலுவலகங்களுக்கும் கிளை அஞ்சலகங்கள் உட்பட அனைவருக்கும் இன்று அனுப்பிவைக்கப்படும் .27.1.2022 அன்று காலையில் அனைவருக்கும் கிடைக்கும் .

                இன்னும் மார்ச் இறுதிவரை நமது ஊழியர்க்ளுக்கு தொடுக்கப்படும் தாக்குதலுக்கு முற்றுப்புள்ளி வைத்திடவேண்டும் .பணிபுரிகின்ற இடத்தில அது GDS என்றால் என்ன ?தபால்காரர்களாக இருந்தால் என்ன ?SPM ஆக இருந்தால் என்ன ?அனைவரும் நிம்மதியாக பணியாற்ற வேண்டும் ..மணிக்கொருமுறை தொலைபேசி கணக்கில இருந்து விடுபடவேண்டும் ...அச்சமில்லாமல் பணியாற்ற வேண்டும் .

        நமது ஆர்ப்பாட்டத்திற்கு இன்று நாடு முழுவதும் ஆதரவு கிடைத்துள்ளது .மாநில சங்கங்கள் சார்பாக மாநில /மண்டல அதிகாரிகளுக்கு கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன ...போராடும் எந்தவொரு கோட்டமாக இருந்தலும் அது தனித்து விடப்பட்டதில்லை ...கோடி கால் பூதமடா ! கோரிக்கைகளின் ரூபமடா !என்ற வரிகள் இன்று மீண்டும் உறுதி செய்யப்பட்டுள்ளது ..

                   ஒற்றுமையே நமது பேராயுதம் ! போராட்டமே நமது தீர்வு !

போராட்ட வாழ்த்துக்களுடன் -கூட்டு போராட்ட குழு நெல்லை 

Friday, January 21, 2022

 அன்பார்ந்த தோழர்களே !தோழியர்களே !  

                           சேமிப்பு கணக்கு நெருக்கடிகளை கண்டித்து நெல்லை கூட்டு போராட்டக்குழு (NFPE -P 3 -P 4 NFPE -GDS மற்றும் AIGDSU சார்பாக இரண்டு கட்ட போராட்டங்கள் 

25.01.2022 செவ்வாய் கிழமை மாலை ஆர்ப்பாட்டம் (பாளையம்கோட்டை மற்றும் அம்பாசமுத்திரம் தலைமை அஞ்சலகங்கள் முன்பு )

27.01.2022 அன்று (மெகா லாகின் அன்று )கருப்பு பேட்ஜ்  அணிந்து பணியாற்றுதல் 

                     கொரானா பேராபத்தை கணக்கில் கொள்ளாமல் நெல்லை கோட்டத்தில் அதிகாரிகளின் அத்துமீறல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து போகின்றது .ஊழியர்களின் உயிரை விடவும் டார்கெட் தான் முக்கியம் என நித்தம் நித்தம் புதுக்கட்டளைகளை SSP முதல் ASP வரை பிறப்பித்து ஊழியர்களை மிருகத்தை விட மிக கேவலமாக நடத்த தொடங்கிவிட்டார்கள் 

                         அம்பாசமுத்திரம் தலைமை அஞ்சலகத்தில் தபால் காரர்களிடம் கட்டாயப்படுத்தி ஸ்டேட்மென்ட்  இன்று மாலைக்குள் 20 கணக்கு தொடங்குவேன் என்று எழுதி வாங்கியுள்ளார் 

                        ஒவ்வொரு GDS ஊழியர்களிடம் மெயில் ஓவர்சியர் மூலம் எத்தனை கணக்கு பிடிக்கமுடியும் அதில் SB எத்தனை /? RD எத்தனை ? என புலன் விசாரணைகள் 

           அனைத்து உபகோட்ட அலுவலகத்தில் இருந்தும் வாட்சாப்ப் டார்ச்சர் தொலைபேசி தொந்தரவுகள் 

            வருகிற 27.01.2022    SB மெகா லாகின் அன்று ஒவ்வொரு கிளை அஞ்சலகம் தொடங்கி துணை அஞ்சலகம் வரை கொடுத்த இலக்கை எட்டவில்லை என்றால் ?என அன்பான மிரட்டல்கள் 

             இதனால் மீண்டும் ஊழியர்கள் தங்கள் பெயரிலே கணக்குகளை ஸ்ப்ளிட் செய்து தொடங்கி தங்களை தப்பித்துக்கொள்ள தவறான முடிவுகளை எடுக்கிறார்கள் .பழைய கலஙக்ளில் இவ்வாறு இலாகா விதிகளை மீறி பலநூறு  பொய்கணக்குக்களை தொடங்கியதன் விளைவு இன்று அனைத்து கணக்குகளும் காலாவதி ஆகிவிட்டது அல்லது மொத்தமாக CLOSUER ஆகிவிட்டது .அதனை வைத்துக்கொண்டு NET -அக்கௌன்ட் குறைகிறது என புது விஞ்ஞான கணக்கெடுப்பு 

 இந்த கொடுமைகைளை தடுத்து நிறுத்திட உழைக்கும் மக்கள் எவருக்கும் அடிமை இல்லை என உணர்த்திடவும் டார்கெட் என்கின்ற பெயரில் தொடரும் டார்ச்சர்க்கு முற்றுப்புள்ளி வைத்திடவும் நமது கூட்டு போராட்ட குழு அறிவித்துள்ள மேற்கண்ட இரண்டு இயக்கங்களையும் வெற்றிபெற செய்வோம் .

          நன்றி தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் P3   I.உதய குமார் P4  E.காசிவிஸ்வநாதன் NFPE-GDS  கோட்ட செயலர்கள் நெல்லை  --P.சுப்பிரமணியன் P3 அம்பை V.தங்கராஜ் P4  அம்பை I.ஞான பாலசிங் AIGDSU நெல்லை R.ஹரிஹர சுதன் AIGDSU அம்பை 

              

              

Thursday, January 20, 2022

 அன்பார்ந்த தோழர்களே !தோழியர்களே ! வணக்கம் .

                                               முக்கிய செய்திகள் 

அஞ்சல் மூன்றின்  33வது அகிலஇந்திய மாநாடு 28.03.2022 முதல் 30.03.2022வரை பஞ்சாப் மாநிலத்தில் ரோபர் மாவட்டத்தில் ஸ்ரீ அனந்தபூர் சாகிப் எனும் இடத்தில நடைபெறுகிறது .பொதுவாக பல ஆயிரம் தோழர்கள் சங்கமிக்கும் நமது அகிலஇந்திய மாநாட்டில் கொரனா பரவலை அடுத்து சார்பாளர்களை மட்டுமே கொண்டு மாநாடு நடைபெறவிருக்கிறது .அதையும் தாண்டி பார்வையாளராக கலந்துகொள்ளும் தோழர்கள் அவர்களதுதனிப்பட்ட முறையில் அனைத்து ஏற்பாடுகளையும் செய்துகொள்ள திட்டமிட்டுள்ளார்கள் . செல்லும் போது ரயில் மூலமும் திரும்பி வருவது விமான பயணமும் என உத்தேசிக்கப்பட்டுள்ளது  ..வரவிரும்பும் தோழர்கள் நாளை மாலைக்குள் தகவல்களை தெரிவிக்கும் படி கேட்டுக்கொள்கிறோம் .

நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை 

தோழியர் R .சுகிர்தா OA அவர்கள் இன்று விருப்ப ஓய்வில்  செல்கிறார்கள் .அவர்களின் பணி ஓய்வு காலங்கள் சிறக்க வாழ்த்துக்கள் ..

தோழியர் சுகிர்தா !

நீண்ட காலமாக --கோட்ட அலுவலகத்தில் 

சீரிய பணியாற்றிய ஒரு தோழியர் ...

கோட்ட அலுவலகம் மீண்டும் மீண்டும் 

அழைத்து கொள்ளுமளவிற்கு --

பேராற்றால் தோழியருக்கு உண்டு 

STAFF--II எனும் அதி முக்கிய பிரிவில் 

ஆரவாரம் ஏதுமின்றி --தன் 

முழுநாட்களும் பணியாற்றியவர் !

அமைதியும் -பொறுமையும் 

சுகிர்தாவுக்கு அடையாளங்கள் 

எதைக்கேட்டாலும் --ஒரு மெல்லிய 

சிரிப்போடு பதிலளிப்பவர் 

அரசாங்க ரகசியத்தை --அப்படி 

பாதுகாத்தவர் 

பணிக்கு வந்த நாள் முதல் 

இன்றுவரை --தான் ஏற்றுக்கொண்ட 

NFPE --இயக்கத்தின் 

அசைக்கமுடியா அடிப்படை உறுப்பினர் -என்ற 

கூடுதல் பெருமையோடு 

விருப்ப ஓய்வில் செல்லும் 

தோழியரை வாழ்த்துகிறேன் ------SKJ 







Wednesday, January 19, 2022

அன்பார்ந்த தோழர்களே !தோழியர்களே !வணக்கம் .

                                               முக்கிய செய்திகள் 

*HSG -II பதவி உயர்வுக்கான நடவடிக்கைகளை மாநில நிர்வாகம் மேற்கொண்டுள்ளது .அதன்படி நமது கோட்டத்தில் தோழர்கள் S .சுப்பிரமணியம் (LSG PA COLLECTRATE ) S பாப்பா (LSG PA  TVL HO ) N .கண்ணன்  (LSG PA  TVL HO )  ஆகியோர் பெயர்கள் பரிசீலனைக்கு கோரப்பட்டுள்ளது .இதனால் வருகிற RT நேரங்களில் கூடுதலாக இரண்டு LSG காலியிடங்கள் மாநகர பகுதியில் உருவாக வாய்ப்புள்ளது .

*தொண்டர் பஜார் அலுவலகத்தை ராமையன் பட்டி அருகில் உள்ள கால்நடை மருத்துவ கல்லூரி வளாகத்திற்குள் RELOCATE செய்வதாக இருந்த நடவடிக்கைகளை நெல்லை சட்டமன்ற உறுப்பினர் மாண்புமிகு .திரு .N.நயினார் நாகேந்திரன் அவர்களின் நேரடி முயற்சியின் காரணமாக தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன .இந்த முயற்சியில் முழுக்கவனம் செலுத்திய முன்னாள் நெல்லை அஞ்சல் நான்கின் கோட்ட செயலர் தோழர் SK .பாட்சா ,நெல்லை ஓய்வூதியர் சங்க செயலர் தோழர் KG.குருசாமி அவர்களுக்கும் எங்கள் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம் '

நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை 


Tuesday, January 18, 2022

அன்பார்ந்த தோழர்களே !தோழியர்களே !வணக்கம் .

                                            தங்கம் குவித்த தமிழகம் !ஆனாலும் அங்கீகரிக்க மறுக்கும் நிர்வாகம் !

கடந்த 10.01.2022முதல் 14.01.2022 வரை விற்பனை செய்யப்பட்ட தங்கபத்திரத்தின் பட்டியல் உங்கள் பார்வைக்கு தரப்பட்டுள்ளது .இந்த தொடரில் நமது மாநிலம் 31271கிராம் விற்று இரண்டாம் இடத்தை பெற்றுள்ளது . குஜராத்  மாநிலம் 37526  கிராம் விற்று முதலிடம் பெற்றுள்ளது . ஆனாலும் அதிகாரிகளின்  கவலை எல்லாம் தமிழகம் ஏன் பின் தங்கியது என்று தான் .பீகார்மற்றும் டெல்லி தலா  வெறும் 10கிராம் விற்று வரலாற்று சாதனை படைத்துள்ளது . ஹரியானா 3 கிராம் விற்று திருப்தி அடைந்துள்ளது .மத்திய பிரதேசம் ஒடிசா மற்றும் பஞ்சாப் 20 முதல் ---22கிராம் என தன் நிலையை வெளிப்படுத்தியுள்ளது .தங்க பத்திர விற்பனை இன்றோடு முடிவதில்லை .தொடர் ஓட்டம் தான் .ஒவ்வொரு தொடரிலும் நாம் விற்று கொடுக்கின்ற விகிதங்களில் ஏனோ நிர்வாகம் திருப்தி அடைவதில்லை .நம்மைவிட பெரிய மாநிலங்கள் எட்டாத இலக்கை ஒவ்வொரு தொடரிலும் நாம் பெற்ற சாதனைகளை ஏனோ நிர்வாகம் அங்கீகரிக்க மறுக்கிறது .

நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை 

Monday, January 17, 2022

 அன்பார்ந்த தோழர்களே !தோழியர்களே !வணக்கம் .

POSB உத்தரவு 01/2022 ---13.01.2022 உத்தரவின் முக்கிய அம்சங்கள் 

*அஞ்சல் சேமிப்பு கணக்குகளில் ஏற்படும் முறைகேடுகளை தடுக்கவும் ,சேமிப்பு  பிரிவில் சுமுகமான செயல்பாடுகளை  உறுதிப்படுத்தவும் இந்த உத்தரவு சொல்லுகிறது .குறிப்பாக POSB உத்தரவு 17/2017  23.10.2017  உத்தரவு மீண்டும் வலியுறுத்துகிறது .அதாவது அஞ்சலகங்களில் தொடங்கப்படும் எல்லா வகையான சேமிப்பு கணக்குகளிலில் வாடிக்கையாளர் தொலைபேசி எண்களை சேர்த்துவிடுவது கட்டாயமாக்க படுகிறது .

*ரூபாய் 20000இக்கு மேல் பரிவர்த்தனை செய்யப்படும் அனைத்து கணக்குக்களிலிலும் தொலைபேசி எண்னும் ரூபாய் 50000 க்கு மேல் நடைபெறும் அனைத்து கணக்குக்களிலிலும்பான் எண் கட்டாயமாக்கப்படுகிறது 

\*கவுண்டர் PA  ஒவ்வொரு கணக்கிலும் பரிவர்த்தனையை தொடங்கும் பொழுது CICD மெனு மூலம் இதை உறுதிசெய்ய வேண்டும் .அதை அந்தந்த வவுச்சரில் குறிக்கவும் வேண்டும் .

* ரூபாய் 50000 க்கு மேல் நடைபெறும் அனைத்து கணக்குக்களிலிலும்பான் எண் இல்லையென்றல் படிவம் 60/61 பெற்றுக்கொண்டு அனுமதிக்கலாம் .அந்த வாடிக்கையாளர் 6 மாதத்திற்குள் பான் எண் கொடுத்திடவேண்டும் 

*வாடிக்கையாளர் தொலைபேசி எண்ணை மாற்றியிருந்தால் அதை அவரிடம் ஒரு கடிதம் மூலமாகவோ அல்லது AOF பெற்றுக்கொண்டு CMRC மெனுவில் மாற்றம் செய்து கொடுக்கவேண்டும் 

*இனிமேல் Cமற்றும் B கிளாஸ் அலுவலகங்களில் நடைபெறும் SB தவிர அனைத்து வகையான கணக்குகள் CLOSE செய்யப்பட்டாலோ /PMC செயயப்பட்டாலோ அந்த புத்தகத்தை வவுச்சர் உடன் இனைத்து SBCO விற்கு அனுப்பவேண்டும் 

*அவ்வாறு புத்தகத்தை பெற்றுக்கொள்ளும் போது HPR மெனுவில் சென்று CLOSUER ரிப்போர்ட் எடுத்து வாடிக்கையாளரிடம் கொடுக்கவேண்டும் 

*கோட்ட அலுவலகம் அந்தந்த SBCO விற்கு  Cமற்றும் B கிளாஸ்அலுவலகங்கள்   குறித்து தகவல்களை தெரிவிக்கவேண்டும் 

*CEPT இந்த பரிவர்தனைகளில் வாராந்திர ரிப்போர்ட் எடுத்து எந்தெந்த கணக்குகளில்தொலைபேசி எண்கள் இல்லையோ /PAN குறிப்பிடவில்லையோ  அதை CPC மூலம் கோட்ட அலுவலகத்திற்கு தெரியப்படுத்தும் 

*ஆய்வுக்கு வரும் அதிகாரிகள் இனிமேல் இதையும் ஆய்வு செய்வார்கள் .இந்த நடைமுறையினை பின்பற்றாத ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கலாம் .

வேலைப்பளு மற்றும் நெட்ஒர்க் பிரச்சினை இவைகளுக்கிடையில் இவையெல்லாம் செய்யமுடியுமா என நாம் மலைத்து நின்றாலும் நாம் மறுத்திட முடியாத பணிகளில் இதுவும் ஒன்று .எங்காவது முறைகேடு நடக்கும் பொழுது அதை சரிகட்ட யார் யாருக்கு பங்கு போடலாம் என நிர்வாகம் நினைக்கும் போதுதான் இதுபோன்ற உத்தரவுகளை காட்டி அப்பாவி ஊழியர்களையும் இதில் நிர்வாகம் எளிதில் சிக்கவைக்கும் .ஆகவே கவனமுடன் பணியாற்றுவோம் .

நன்றி தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை 

Monday, January 10, 2022

 அன்பார்ந்த தோழர்களே !தோழியர்களே !

                                        கொரானா மூன்றாம் அலை நாடெங்கும் பெருகிவரும் சூழலில் அஞ்சல் அலுவலகங்களில் மட்டும் வழக்கம்போலவே பொதுமக்கள் வந்து செல்கின்றனர் .பழைய காலங்களில் நமது அலுவலகங்களில் எத்தகைய  பாதுகாப்புகளை நாம் மேற்கொண்டோமோ அதைவிட கூடுதலாக கவனமாக இருக்கவேண்டியது நமது கடமை .பொதுமக்களை நேரடியாக சந்திக்கும் தபால்காரர் GDS மற்றும் கவுண்டர்களில் பணியாற்றும் எழுத்தர்களுக்கு தேவையான முகக்கவசங்கள் ,கையுறைகள் மற்றும் சானிடைசர் இவைகளை வழங்கவேண்டிய பொறுப்பு கோட்ட நிர்வாகத்திற்கு இருந்தாலும் அந்தந்த துணை அஞ்சலகத்தில் இருந்து தங்கள் தேவைகளுக்கு என்னென்ன வேண்டும் எவ்வளவு வேண்டும் என்பதை இன்றே ஈமெயில் மூலம் கோட்ட அலுவலகத்திற்கு அனுப்பிவைக்கவும் .கோட்ட அலுவலகத்தில் இருந்து எந்த நடவடிக்கையும் இல்லையென்றல் கோட்ட சங்கத்திற்கு தெரிவிக்கவும் .

நன்றி தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை 


Saturday, January 1, 2022

அன்பார்ந்த தோழர்களே !தோழியர்களே !

நமது அஞ்சல் மூன்றின் பொதுச்செயலர் தோழர் RN .பராசர் அவர்கள் 31.12.2021அன்று SUPERANU VATION மூலம் பணி ஓய்வு பெற இருந்தார்கள் .இந்த சூழ்நிலையில் அவருக்கு விதி 14 ளின் கீழ் குற்றச்சாட்டுகளை கொடுத்து  அவர் மீது அஞ்சல் துறை கொடூரமான தாக்குதலை மிக துணிச்சலாக  தொடுத்துள்ளது .தோழர்  RN .பராசர் அவர்கள் நமது அஞ்சல் மூன்றின் பொதுச்செயலர் மட்டுமல்ல.NFPE பேரியக்கத்தின் பொதுச் செயலர் ,மத்திய அரசு ஊழியர்களின் மகாசம்மேளனத்தின் மாபொது செயலரும் கூட .

                        இந்த சூழ்நிலையில் தொழிற்சங்கத்தில் நாம் போராடி பெற்ற  FOREIGN SERVICE அயற் பணி சேவையில் அவர் 7ஆண்டுகளுக்கு மேல் சலுகைகளை பெற்றுவிட்டார் என்கின்ற அற்ப காரணங்களை காட்டி அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது .

                          இந்த தாக்குதல் வருங்காலங்களில் தொழிற்சங்க பொறுப்புக்கு வரும் தோழர்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் ஒரு மறைமுக மிரட்டல் என்றாலும் தோழர் RN .பராசர் அவர்கள் இதை மிக துணிச்சலுடனும் உறுதியுடனும் எதிர்கொள்வர் என்கின்ற நம்பிக்கை நமக்கு இருந்தாலும்  நமக்காக உழைத்திட்ட அந்த தலைவருக்கு ஆதரவாக நாம் குரல் கொடுக்கவேண்டியது நமது கடமை 

                       எப்படி இந்த அரசும் அஞ்சல் துறையும் தொழிற்சங்கத்தில் நிர்வாகிகளாக தொடர்வதற்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை நமது அஞ்சல் மூன்று தமிழ் மாநில சங்கம் நமது தலைவர் அறிவுஜீவி அண்ணன் KVS தலைமையில் நமது மாநிலசெயலர் சகோதரர் வீரமணி அவர்கள் பெயரில் வழக்கினை இந்த நிர்வாகத்திற்கு எதிராக துணிச்சலோடு தொடுத்து தடையாணை பெற்றதோ அதைபோல் நமது பொதுச்செயலர் தோழர் RN .பராசர் மீதான விதி 14 யை நமது தலைவர் அறிவுஜீவி அண்ணன் KVS  அவர்களின் வழிகாட்டுதலில் விதி 14 யை உடைத்து பொதுச்செயலரை மட்டுமல்ல அகிலஇந்திய அளவில் நிர்வாகத்தால் ஏற்படுத்தப்பட்டுள்ள இந்த அச்சுறுத்தலை விரட்டி காட்டுவோம் .என்பதுமட்டுமல்ல மீண்டும் நமது அஞ்சல் மூன்று தமிழ் மாநில சங்கம்  முன்கையெடுத்து வெற்றி கொடி நாட்டுவோம் என்பதில் ஐயமில்லை .

             இருந்தாலும் நமது பொதுச்செயலருக்கு விடுக்கப்பட்ட இந்த அநீதியை ரத்துசெய்ய கோரி அகிலஇந்திய அளவில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தை நாமும் நமது பகுதியில் வெற்றிகரமாக நடத்திக்காட்டுவோம் .நிர்வாகத்திற்கு தக்க பாடத்தை புகட்டுவோம் 

                                                         ஆர்ப்பாட்டம் 

நாள் 03.01.2022                 திங்கள் கிழமை நேரம் மாலை 5.45 மணி இடம் பாளையம்கோட்டை தலைமை அஞ்சலம் அனைவரும் வாரீர் !ஆதரவு தாரீர் !

போராட்ட வாழ்த்துக்களுடன் 

SK .ஜேக்கப் ராஜ் --I.உதய குமார் கோட்ட செயலர்கள் நெல்லை