...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Saturday, January 1, 2022

அன்பார்ந்த தோழர்களே !தோழியர்களே !

நமது அஞ்சல் மூன்றின் பொதுச்செயலர் தோழர் RN .பராசர் அவர்கள் 31.12.2021அன்று SUPERANU VATION மூலம் பணி ஓய்வு பெற இருந்தார்கள் .இந்த சூழ்நிலையில் அவருக்கு விதி 14 ளின் கீழ் குற்றச்சாட்டுகளை கொடுத்து  அவர் மீது அஞ்சல் துறை கொடூரமான தாக்குதலை மிக துணிச்சலாக  தொடுத்துள்ளது .தோழர்  RN .பராசர் அவர்கள் நமது அஞ்சல் மூன்றின் பொதுச்செயலர் மட்டுமல்ல.NFPE பேரியக்கத்தின் பொதுச் செயலர் ,மத்திய அரசு ஊழியர்களின் மகாசம்மேளனத்தின் மாபொது செயலரும் கூட .

                        இந்த சூழ்நிலையில் தொழிற்சங்கத்தில் நாம் போராடி பெற்ற  FOREIGN SERVICE அயற் பணி சேவையில் அவர் 7ஆண்டுகளுக்கு மேல் சலுகைகளை பெற்றுவிட்டார் என்கின்ற அற்ப காரணங்களை காட்டி அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது .

                          இந்த தாக்குதல் வருங்காலங்களில் தொழிற்சங்க பொறுப்புக்கு வரும் தோழர்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் ஒரு மறைமுக மிரட்டல் என்றாலும் தோழர் RN .பராசர் அவர்கள் இதை மிக துணிச்சலுடனும் உறுதியுடனும் எதிர்கொள்வர் என்கின்ற நம்பிக்கை நமக்கு இருந்தாலும்  நமக்காக உழைத்திட்ட அந்த தலைவருக்கு ஆதரவாக நாம் குரல் கொடுக்கவேண்டியது நமது கடமை 

                       எப்படி இந்த அரசும் அஞ்சல் துறையும் தொழிற்சங்கத்தில் நிர்வாகிகளாக தொடர்வதற்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை நமது அஞ்சல் மூன்று தமிழ் மாநில சங்கம் நமது தலைவர் அறிவுஜீவி அண்ணன் KVS தலைமையில் நமது மாநிலசெயலர் சகோதரர் வீரமணி அவர்கள் பெயரில் வழக்கினை இந்த நிர்வாகத்திற்கு எதிராக துணிச்சலோடு தொடுத்து தடையாணை பெற்றதோ அதைபோல் நமது பொதுச்செயலர் தோழர் RN .பராசர் மீதான விதி 14 யை நமது தலைவர் அறிவுஜீவி அண்ணன் KVS  அவர்களின் வழிகாட்டுதலில் விதி 14 யை உடைத்து பொதுச்செயலரை மட்டுமல்ல அகிலஇந்திய அளவில் நிர்வாகத்தால் ஏற்படுத்தப்பட்டுள்ள இந்த அச்சுறுத்தலை விரட்டி காட்டுவோம் .என்பதுமட்டுமல்ல மீண்டும் நமது அஞ்சல் மூன்று தமிழ் மாநில சங்கம்  முன்கையெடுத்து வெற்றி கொடி நாட்டுவோம் என்பதில் ஐயமில்லை .

             இருந்தாலும் நமது பொதுச்செயலருக்கு விடுக்கப்பட்ட இந்த அநீதியை ரத்துசெய்ய கோரி அகிலஇந்திய அளவில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தை நாமும் நமது பகுதியில் வெற்றிகரமாக நடத்திக்காட்டுவோம் .நிர்வாகத்திற்கு தக்க பாடத்தை புகட்டுவோம் 

                                                         ஆர்ப்பாட்டம் 

நாள் 03.01.2022                 திங்கள் கிழமை நேரம் மாலை 5.45 மணி இடம் பாளையம்கோட்டை தலைமை அஞ்சலம் அனைவரும் வாரீர் !ஆதரவு தாரீர் !

போராட்ட வாழ்த்துக்களுடன் 

SK .ஜேக்கப் ராஜ் --I.உதய குமார் கோட்ட செயலர்கள் நெல்லை 

0 comments:

Post a Comment