...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Friday, February 4, 2022

அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே ! வணக்கம் 

                                                             முக்கிய செய்திகள் 

நமது துறைக்கு IT Modernisation Project 2.0 திட்டத்தின் கீழ் ரூபாய் 5785 கோடிகள் ஒதுக்கப்பட்டுள்ளது .இதன்மூலம் நமது நெட்ஒர்க் ,சேமிப்பு , இன்சூரன்ஸ் ,டேட்டா சென்டர் மற்றும் CSI உள்ளிட்ட அனைத்து பிரிவுகளிலிலும் நவீனமயமா க்கப்படுகின்றன .தற்சமயம் நம்மிடம் உள்ள அனைத்து நிறுவனங்களுக்கும் உள்ள ஒப்பந்தங்கள் முடிவுக்கு வரும் சூழலில் இந்த  மாற்றங்கள் செய்யப்படவுள்ளன .

                                       ஏற்கனவே e -PAN  UPDATION நாம் மேற்கொண்டுவருகிறோம் .இனி  e -TDS  முறை அறிமுகப்படுத்தப்படவுள்ளது .நமது சேமிப்பு கணக்குளில் ஈட்டப்படும் அனைத்து வகையான வட்டிகளும் சாதாரண SB உட்பட அனைத்தும் வாடிக்கையாளரின் TDS கணக்கில் பிரதிபலிக்கும் ....

                                 மேலும் நிதி அமைச்சர் அறிவித்தபடி அஞ்சலகங்கள் வங்கிகளோடு இணைக்கப்படும் என்கின்ற அறிவிப்பு நமது IPPB யை மனதில் வைத்துக்கொண்டு அறிவிக்கப்பட்ட திட்டமாக கூட இருக்கலாம் .அஞ்சலக சேமிப்பு கணக்குகள் எல்லாம் IPPB க்கு மடைமாற்றம் செய்யக்கூடிய அறிகுறிகள் தெரிகின்றன 

பொழுதெல்லாம் எங்கள் செல்வம் கொள்ளை கொண்டு போகவோ? – நாங்கள் சாகவோ?’என்று கேட்டார் மகாகவி பாரதி.

அந்த அடிப்படையில் தான் நவீனப்படுத்துதல் என்ற பெயரில் அஞ்சல் துறையை அழகு படுத்துவது எதற்க்காக ?என்பதையும் நாம் சிந்திக்கவேண்டிய விசயங்கள் ...நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை 


0 comments:

Post a Comment