...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Wednesday, February 9, 2022

அன்பார்ந்த தோழர்களே !தோழியர்களே ! வணக்கம் 

                              நேற்று 08.02.2022அன்று நடைபெற்ற மாதாந்திர பேட்டியில் விவாதிக்கப்பட்ட விசயங்கள் உங்கள் பார்வைக்கு தரப்பட்டுள்ளன .

1.தோழர் R .சண்முக சுப்ரமணியன் (APS  ) LSG PA பாளை அவர்களுக்கு முன்னதாக மறுக்கப்பட்ட TRANSFER  TA  மண்டல நிர்வாக பரிந்துரையை அடுத்து TRANSFER  TA    BILL ஏற்றுக்கொள்ளப்பட்டுவிட்டது ..

2.வள்ளியூர் அஞ்சலகத்தில் நிலவிவந்த மெயில் பிரச்சினைக்கு தீர்வு கானும் வகையில் வள்ளியூர் உள்ளிட்ட தென்பகுதிகளுக்கு புதிய மெயில் வேன் SCHEDULE மண்டல நிர்வாகத்தால் அனுமதிக்கப்பட்டுள்ளது ..விரைவில் முதல்கட்டமாக வாடகை குறித்த டெண்டர் கோரப்பட்டு அறிமுகப்படுத்தப்படுகிறது 

\3.சமீபத்தில் வெளியிடப்பட்ட LSG ஊழியர்களுக்கான கோட்ட அளவிலான வரைவு  சீனியாரிட்டி பட்டியல் குறித்து விவாதிக்கப்பட்டு கேடெர் சீரமைப்பு வந்தபின் மாநில அளவிலான சீனியாரிட்டி தான் நடைமுறையில் இருக்கிறது என்றும் கோட்ட அளவிலானLSG  சீனியாரிட்டி பட்டியலை ரத்துசெய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது 

4.கோவிட் மூன்றாம் அலையில் கொரானாவால் பாதிக்கப்பட்ட ஊழியர்களின் குடும்ப உறுப்பினர்களால் தனிமைப்படுத்திக்கொண்ட நமது தோழியர்களுக்கு வழங்கப்பட்ட விடுப்பினை CCL ஆக மாற்றிக்கொள்ள ஏற்றுக்கொள்ளப்பட்டது 

.5புதிய .DSM நியமிப்பது குறித்து விவாதிக்கப்பட்டது .ஆனால் தற்சமயம் இருக்கின்ற DSM நான்குபேர் போதுமென்று கோட்டநிர்வாகம் விடாப்பிடியாக இருந்தது .நீண்ட விவாதத்திற்கு பிறகு DSM தரப்பில் இருந்து REPRESENTATION ஏதும் வந்தால் பின்னர் பரிசீலிக்கப்படும் என முடிக்கப்பட்டது 

6.சங்கர்நகர்  SO விற்கு புதிய PASSBOOK பிரிண்டர் வழங்கப்படும் 

7.களக்காடு SO விற்கு சேமிப்பு பிரிவு வேலைநேரம் மாற்றம் குறித்து ASP   TVL அவர்களின் ரிப்போர்ட் வந்தவுடன் முடிவெடுக்கப்படும் 

8.திருநெல்வேலி HO அக்கௌன்டன்ட் பதவி விரைவில் நிரப்பப்படும் 

              பேட்டி முடிந்தபின் SSP அவர்களும் கணக்குகள் பிடிப்பது சம்பந்தமாக உங்களிடம் நான் பேசவேண்டும் என்று டார்கெட் குறித்த விளக்கங்களை கூறினார்கள் .நாமும் நமது NFPE யை பொறுத்தவரை டார்கெட் புதியவணிகம் இவைகளுக்கு நாங்கள் எதிரிகள் அல்ல என்றும் ஆனால் டார்கெட் என்கின்ற பெயரில் ஊழியர்க்ளுக்கு மனஉளைச்சல் ஏற்படுத்தும் அதிகாரிகளின் நடவடிக்கைகளை நாங்கள் ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம் என்கின்ற நமது நிலைப்பாட்டை எடுத்து கூறினோம் .SSP அவர்களும் அதை ஏற்றுக்கொண்டு WELFARE விசயத்தில் தான் எப்பொழுதும் ஊழியர்க்ளுக்கு சாதகமாக இருப்பேன் என்றும் தெரிவித்தார்கள் ...அதையே தான் நாங்களும் விரும்புகிறோம் என்கின்ற ஒரு புரிந்துணர்வோடு மாதாந்திர பேட்டி சுமுகமாக முடிவுற்றது ...இந்தமாதம் தோழர் ராமேஸ்வரன் புதிதாக பேட்டிக்கு அழைத்து செல்லப்பட்டார் ..அடுத்த மாத பேட்டி  09.03.2022 அன்று நடைபெறுகிறது .மகளீர் தினத்தை முன்னிட்டு முற்றிலும் தோழியர்களுக்கு பேட்டியில் கலந்துகொள்ள வாய்ப்புகள் வழங்கப்படும் --

நன்றி ..தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் 


1 comment:

  1. Where is the cheapest way to get from Casino Sites in India?
    ₹18,000 슬롯 커뮤니티 (plus tax) on 넥스트 벳 ₹10,000 강원 랜드 여자 노숙자 on ₹11,000 on ₹3,000 이빨빠지는꿈 on ₹2,000 on Indian Players, Indian and foreign av 보는 곳 (Pune), with a

    ReplyDelete