...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Wednesday, November 1, 2017

                                                   முக்கிய செய்திகள் 
ஏழாவது ஊதியக்குழுவின் தொடர்ச்சியாக குறைபாடுள்ள குழந்தைகளுக்கான CHILDREN EDUCATION ALLOWANCE இருமடங்காக உயர்த்தப்பட்டுள்ளது .இந்த உத்தரவு 01.07.2017 முதல் அமுலுக்கு வருகிறது .இதர நிபந்தனைகள் 11.09.2008 இன் படி தொடர்கிறது .இதனால் ஒருகுழந்தைக்கு அதிகபட்சமாக ரூபாய் 54000 வரை கிடைக்கும் .ய 

  CSI குறித்த சென்னை வடகோட்ட சங்கத்தின் கடிதத்தில் இருந்து .......

    ஒரு சாதாரண நிறுவனங்கள் தங்களின் தயாரிப்புகளை விற்பதற்க்காக செய்யப்படும் விளம்பர யுக்திகள்அதன்பின் அது சந்தையில் இருந்து வாடிக்கையாளர்களுக்கு சென்றவுடன் கம்பெனிகளின் கைவிரிப்புகள் போன்றுதான் இன்றைய TCS-நிறுவனமும் செயலாற்றிக்கொண்டிருக்கிறது .CSI அமுலாக்கப்பட்ட கர்நாடக மாநிலத்தில் 25.10.2017 தேதி நிலவரப்படி 497 அலுவலகங்கள் CSI ஆக மாறியதில் சுமார் 49 அலுவலகங்களில் மட்டும்தான் DAILYACCOUNT எடுக்க முடிந்திருக்கிறதாம் .மீதமுள்ள 448 அலுவலகங்களில் கணக்குகள் TALLY ஆக நிபுணர்கள் குழு வரவழைக்கப்பட்டுள்ளதாம் .தெலுங்கானா மாநிலத்தில் 200 அலுவலகங்கள் கடந்த 25 நாட்களாக வேலைசெய்ய முடியாமல் மூடப்பட்டிருக்கிறதாம் .மகாராஷ்டிரா மாநிலத்தில் உயர் அதிகாரிகளே ஒத்துக்கொள்ள தொடங்கிவிட்டார்கள் இது ஒரு பெரிய இழப்பில் போய் முடியும் என்று .
  பொதுமக்களுக்கு எந்தவகையிலும் பயனளிக்காத இத் திட்டத்தை எதிர்த்து போராட்ட பாதையில் செல்லவேண்டும் என நமது பொது செயலருக்கு தெரிவித்திருக்கிறார்கள் .முன்னதாக வேலூர் கோட்ட தோழர்களின் எழுச்சியும் -மாநிலச்சங்கத்தின் முயற்சியும் தமிழகத்தில் அமுலாக்கத்தை தள்ளிபோடவைத்தது என்பதை நினைத்து பார்க்கிறோம் 
வாழ்த்துக்கள் தோழர் செந்தில்குமார் .
தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் 

தோழர் குணசேகர் தபால்காரர் பாளை அவர்களின் பணிநிறைவு -விழா 
நெல்லை அஞ்சல் நான்கின் முன்னணி தோழரும் -அஞ்சல் நான்கில் மாற்றம் கொண்டுவந்த அண்ணன் RL .குணசேகர் அவர்களின் பணிநிறைவு விழா பாளையில் 31.10.2017 அன்று சிறப்பாக நடைபெற்றது .விழாவில் நமது முன்னணி தோழர்கள் அனைவரும் பங்கேற்று சிறப்பித்தனர் .அண்ணன் குணசேகர் எல்லாவளமும் பெற்று பல்லாண்டுகள் வாழ நெல்லை NFPE வாழ்த்துகிறது