...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Wednesday, November 1, 2017

  CSI குறித்த சென்னை வடகோட்ட சங்கத்தின் கடிதத்தில் இருந்து .......

    ஒரு சாதாரண நிறுவனங்கள் தங்களின் தயாரிப்புகளை விற்பதற்க்காக செய்யப்படும் விளம்பர யுக்திகள்அதன்பின் அது சந்தையில் இருந்து வாடிக்கையாளர்களுக்கு சென்றவுடன் கம்பெனிகளின் கைவிரிப்புகள் போன்றுதான் இன்றைய TCS-நிறுவனமும் செயலாற்றிக்கொண்டிருக்கிறது .CSI அமுலாக்கப்பட்ட கர்நாடக மாநிலத்தில் 25.10.2017 தேதி நிலவரப்படி 497 அலுவலகங்கள் CSI ஆக மாறியதில் சுமார் 49 அலுவலகங்களில் மட்டும்தான் DAILYACCOUNT எடுக்க முடிந்திருக்கிறதாம் .மீதமுள்ள 448 அலுவலகங்களில் கணக்குகள் TALLY ஆக நிபுணர்கள் குழு வரவழைக்கப்பட்டுள்ளதாம் .தெலுங்கானா மாநிலத்தில் 200 அலுவலகங்கள் கடந்த 25 நாட்களாக வேலைசெய்ய முடியாமல் மூடப்பட்டிருக்கிறதாம் .மகாராஷ்டிரா மாநிலத்தில் உயர் அதிகாரிகளே ஒத்துக்கொள்ள தொடங்கிவிட்டார்கள் இது ஒரு பெரிய இழப்பில் போய் முடியும் என்று .
  பொதுமக்களுக்கு எந்தவகையிலும் பயனளிக்காத இத் திட்டத்தை எதிர்த்து போராட்ட பாதையில் செல்லவேண்டும் என நமது பொது செயலருக்கு தெரிவித்திருக்கிறார்கள் .முன்னதாக வேலூர் கோட்ட தோழர்களின் எழுச்சியும் -மாநிலச்சங்கத்தின் முயற்சியும் தமிழகத்தில் அமுலாக்கத்தை தள்ளிபோடவைத்தது என்பதை நினைத்து பார்க்கிறோம் 
வாழ்த்துக்கள் தோழர் செந்தில்குமார் .
தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் 

0 comments:

Post a Comment