...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Tuesday, December 5, 2017

                                   நெல்லை கோட்ட செய்திகள் 
GDS கமிட்டி இன்றைய நிலை ---
GDS கமிட்டி குறித்த கோப்புகள் DEPARTMENT OF PERSONNE L& TRAINING க்கு 01.12.2017 அன்று அனுப்பப்பட்டுள்ளது .DOPT ஒப்புதலுக்கு பிறகு நிதியமைச்சக ஒப்புதலுக்கு அனுப்பப்படும் .2018 ஜனவரியிலாவது  GDS கமிட்டி அமுலாகும் என்ற எதிர்பார்ப்பு நிறைய இருக்கிறது .
-----------------------------------------------------------------------------------------------------------------
நமது கோட்டத்தில் நிலுவையில் உள்ள Increment for bunching of stages குறித்து இலாகாவின் 09.10.2017 தேதியிட்ட கடிதங்களையும் அதன் அடிப்படையில் அமுல்படுத்தப்பட்ட சில கோட்டங்களின் உத்தரவையும் கோட்ட அலுவலகத்தில் நேற்று சமர்பித்துள்ளோம் .ஓரிரு நாட்களில் பாதிக்கப்பட்ட தோழர்களுக்கு உரிய உத்தரவு கிடைக்கும் என்பதனை தெரிவித்துக்கொள்கிறோம் .
-----------------------------------------------------------------------------------------------------------------------
அஞ்சல் நான்கின் அகில இந்திய மாநாடு -ஜெய்ப்பூர் வர விரும்பும் தோழர்களின் கவனத்திற்கு .
நெல்லையில் இருந்து 05.03.2017 அன்று புறப்பட்டு சென்னையில் இருந்து 06.08.2017 அன்று இரவு ஜெய்ப்பூர் விரைவுவண்டியில் சென்று 08.03.2017 அன்று ஜெய்ப்பூர் செல்கிறோம் .
வரும்பொழுது 11.03.2017 அன்று ஜெய்ப்பூரில் இருந்துகிளம்பி 13.03.2017அன்று சென்னைக்கும் 14.03.2017 அன்று நெல்லைக்கு வருகிறோம் .பயண கட்டணம் 900+900+=1800 
சார்பாளர் கட்டணம் 1500 தனி .
வரவிரும்பும் தோழர்கள் அஞ்சல் நான்கின் கோட்ட செயலர் SK .பாட்சா அவர்களிடம் ரயில் கட்டணத்தை உடனே செலுத்துமாறு கேட்டு கொள்கிறோம் .
வாழ்த்துக்களுடன் SK .ஜேக்கப் ராஜ் ..SK .பாட்சா 
-------------------------------------------------------------------------------------------------------------------------

Monday, December 4, 2017

                         GDS குறித்த மர்மங்கள் விலகுவது எப்போது ?

நாடு முழுவதிலும் 8153 GDS பதவிகளுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் கோரப்பட்டிருக்கின்றன .ஏற்கனவே தமிழகத்தில் ஆன்லைன் மூலம் கோரப்பட்ட விண்ணப்பங்களுக்கு ஆகஸ்ட் 2017 கடைசி தேதியாக அறிவிக்கப்பட்டும் இன்று வரை அதன்முடிவுகளை வெளியிடுவதில் காலதாமதம் ஏன்  என்று தெரியவில்லை .
GDS நியமனங்களில் இந்த இழுத்தடிப்பிற்கு என்ன காரணம் ?
GDS கமிட்டி இன்றைய நிலை என்ன ? நிதியமைச்சகத்திற்கு சென்ற கோப்புகள் என்னவானது ?
GDS உறுப்பினர் சரிபார்ப்பு நடவடிக்கைகள் ரத்து செய்ய படவேண்டிய அவசியம் என்ன ? 
 வாழ்க்கையின் 
அடித்தட்டில் ஜீவிக்கும் GDS பிரச்சினைகளில் அரசு காட்டும் அலட்சியம் தீர்வது எப்போ ? எப்போ ?
SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை 




 



Friday, December 1, 2017

அன்பார்ந்த தோழர்களே !
  நேற்று 30.11.2017 அன்று நடைபெற்ற மாதாந்திர பேட்டியில் விவாதிக்கப்பட்ட பிரச்சினைகளில் இருந்து ......
1.2015 முதல் பணியில் சேர்ந்த எழுத்தர்களுக்கு conformation உத்தரவு வழங்குவது குறித்து பேசுகையில் சுமார் 29 ஊழியர்களுக்கு நிரந்தர உத்தரவு வழங்கப்படவில்லை என்றாலும் இதுவரை சான்றிதழ் சரிபார்க்கப்பட்ட ஊழியர்களுக்கு உடனே conformation உத்தரவு வழங்க நடவடிக்கை எடுக்க உறுதி அளிக்கப்பட்டது 
2.C கிளாஸ் அலுவலகங்களுக்கு வழங்கப்பட்ட தரமற்ற UPS பேட்டரிகள் படிப்படியாக மாற்றப்படும் என்றும் தற்சமயம் 10 அலுவலகங்களுக்கு புதிய பேட்டரிகள் வந்துள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது .
3.HSG II மற்றும் HSG I OFFICIATING யில் முதற்கட்டமாக இரண்டு பேருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது .விடுபட்ட ஊழியர்களுக்கு விரைவில் உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றும் முடிவெடுக்கப்பட்டுள்ளது .
4.சமீபத்தில் வந்த உத்தரவுப்படி SPEEDPOST வேலைநேரத்தை நீட்டிப்பதில் தனியாக அதற்கென PA ஒருவரை வேலைநேரத்தை மாற்றி பணியாற்ற அனுமதிக்கப்படும் என ஏற்றுக்கொள்ளப்பட்டது .
5.வேலை பளு அதிகமுள்ள அலுவலகங்களில் இருந்து டெபுடேஷன் தவிர்க்கப்படும் .( மூன்றடைப்பு .பொட்டல் புதூர்  வள்ளியூர் )
6.அம்பாசமுத்திரம் ASP குறித்த புகார்களை SSP அவர்களே நேரடியாக விசாரிப்பதாகவும் OFFICIATING பிரச்சினையில் கோட்டம் முழுவதும் ஒரே முறை பின்பற்றப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது 
7.மாவட்ட ஆட்சியரின் உத்தரவு படி குறைந்தபட்ச கூலி ரூபாய் 320 OUTSIDER களுக்கு வழங்க அனைத்து தலைமை அஞ்சலகங்களுக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது 
8.விடுபட்ட MACP பதவி உயர்வு குறித்து மறு DPC யில் சேர்க்கப்படவும் ஏற்றுக்கொள்ளப்பட்டது .
மற்றவை எழுத்துபூர்வமான பதில் வந்த பிறகு ...
தோழமை வாழ்த்துக்களுடன் 
SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை