...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Friday, November 2, 2018

                                                    நன்றி ! நன்றி !  நன்றி 
கொட்டும் மழையிலும் கொள்கை முழக்கம் --சற்று நேரம் மழை நின்று நமக்கு ஆதரவு தந்தது -
ஆர்ப்பாட்டம் வெற்றிபெற துணைநின்ற இயற்கைக்கும் -இயக்க தோழர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம் .
முன்னதாக கருப்பு பேட்ஜ் போராட்டத்தை சிறப்பாக செய்துமுடித்த அனைத்து தோழர் /தோழியர்களுக்கும் நெல்லை NFPE இன் வீர வாழ்த்துக்கள் .
SAP பிரச்சினை -நெட்ஒர்க் தாமதம் இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்களால் தாக்கப்பட்ட அலகாபாத் சம்பவத்தை கண்டித்தும் அஞ்சல் ஊழியர்களின் உயிருக்கும் உடமைக்கும் பாதுகாப்பு வழங்கிட நிர்வாகத்தை வலியுறுத்தியும் நெல்லையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் மாபெரும் எழுச்சியை தந்தது .ஆர்ப்பாட்டத்திற்கு தோழர்கள் அழகுமுத்து -சீனிவாச சொக்கலிங்கம் ஆகியோர் கூட்டு தலைமை தா ஙகினார்கள் .தோழர்கள் SA ராமசுப்ரமணியம் FNPO முன்னாள் கோட்ட செயலர் தோழர் N .கண்ணன் செயல்தலைவர் தோழர்கள் புஷ்பாகரன் ச ண்முகசுந்தரராஜா கிருஷ்ணன் *ஓய்வூதியர் சங்கம் ) வண்ணமுத்து ஞானபாலசிங் மற்றும் SK பாட்சா  ஜேக்கப் ராஜ் ஆகியோர் வாழ்த்திப்பேசினார்கள் -இறுதியாக தோழர் M.தளவாய் நன்றி கூறினார் .
                          நெட்ஒர்க் பிரச்சினை -பொதுமக்களிடம் கொண்டு செல்லவும் -வருகிற 24.11.2018 நமது சம்மேளன தினத்தை முன்னிட்டு புதிய ஓய்வூதிய திட்டஎதிர்ப்பு  விழிப்புணர்வு பிரச்சாரத்தை ஊழியர்களிடம்  முன்னெடுக்கவும்  தோழர்கள் தெரிவித்த கருத்துக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டது .
                                  13.11.2018 மதுரையில் தர்ணா 
நமது இரண்டாவது கட்ட போராட்டம் 13.11.2018 அன்று மதுரை PMG அலுவலகம் முன்பு நடைபெறுகிறது .கோட்டசங்கத்தின் சார்பாக ஒரு வேன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது .மதுரை தர்ணாவிற்கு வரவிரும்பும் தோழர்கள் தங்கள் பெயர்களை கோட்ட செயலரிடம் தெரிவிக்கும் படி கேட்டு கொள்கிறோம் .
13.11.2018 சரியாக காலை 6 மணிக்கு பாளையில் இருந்து வேன் புறப்படும் .விடுப்பு விண்ணப்பிக்கிற தோழர்கள் தங்கள் சொந்த காரணங்களை காட்டி விடுப்பு விண்ணப்பிக்கவும் .
தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் --SK பாட்சா கோட்ட செயலர்கள் 
                                     







அன்பார்ந்த தோழர்களே !
                                        நெட் ஒர்க் பிரச்சினையால் அலகாபாத் அஞ்சலகத்தை தாக்கிய நபர்களை கண்டித்தும் SAP பிரச்சினையில் மெத்தனம் டார்கெட் நெருக்கடி =மாத சம்பளம் GPF இவைகளை பெறுவதில் காலதாமதம் GDS ஊழியர்க்ளுக்கு கொடுக்கப்பட்ட டர்பன் தரத்தை உயர்த்துவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று மாலை 6  மணிக்கு பாளையம்கோட்டையில் நடைபெறும் ஆர்பாட்டத்தில் அனைவரும் பங்கேற்க கேட்டுக்கொள்கிறோம் .நேற்று அலகாபாத் நாளை எங்கே ? பொதுமக்களின் கோபத்திற்கு நேரடியாக ஆளாகும் அஞ்சல் ஊழியர்களை பாதுகாக்க பாளை நோக்கி வாரீர் !வாரீர் ! இன்று உங்களுக்கு கருப்பு பேட்ஜ் அனுப்பப்பட்டுள்ளது .அனைவரும் இன்று கருப்பு பேட்ஜ் அணிந்து பணியாற்றுங்கள் .இந்த புகைப்படங்களை கோட்ட சங்க வாட்ஸாப் நெல்லை NFPE யில் பதிவிடுங்கள் .
                                                   நெல்லை    கோட்ட சங்க செய்திகள் 
நாம் சென்ற மாத மாதாந்திர பேட்டிக்கு சென்றுவிட்டு வந்தவுடன் பதிவிட்டோம் .அர்த்தமுள்ள மாதாந்திர பேட்டி -பயனுள்ள 2 மணிநேர சந்திப்பு என்று .ஆம் அது இன்றும் தொடர்கிறது .இன்னும் தொடரட்டும் 
                                    தட்டுங்கள் திறக்கப்படும் 
 1.SB Counters of Palayankottai HO are already overburdened and hence it is requested to withdraw the additional works viz., CC Bridge, KYC maintenance, Commission bills etc., which can be entrusted to the officials working in back office.இது இந்த மாத  மாதாந்திர பேட்டியில் நாம் வைத்த பிரச்சினை  
நேற்று பாளையம்கோட்டையில் மூன்று கவுண்டர்களில் இணைக்கப்பட்ட கூடுதல் வேலைகள்  நிறுத்தப்பட்டு BACKOFFICE  PA க்கு கொடுக்கப்பட்டுவிட்டது .
2.MDW of SB Branch of Palayankottai HO has not been revised even after introduction of several new works.  Hence, it is requested to take action to revise the MDW of SB Branch of Palayankottai HO which is obsolete now. பாளையம்கோட்டையில்  புதிய வரைவு MDW  தயாரிக்கப்பட்டு (அனைத்து ஊழியர்களின் ஒப்புதலோடு ) 9.11.2018 குள்  கோட்ட அலுவலகத்திற்கு அனுப்ப உத்தரவு  வந்துவிட்டது 
3.The Divisional gradation list of PA Cadre is due for 2017 and the last one was issued during the year 2013.  Hence we request the SSPOs to consider release of the same at the earliest.(இது செப்டம்பர் மாத சப்ஜெக்ட் )
இதன்  அடிப்படையில்  கோட்ட அலுவலகத்தில் இருந்து  LSG  HSG II  மற்றும் HSG I நீங்கலாக  248 எழுத்தர்களுக்கான வரைவு சீனியாரிட்டி பட்டியில்  31.10.2018 அன்று  உங்கள் சுற்றுக்கு வந்துள்ளது .குறைகள் விடுதல் இருந்தால் உடனே  கோட்ட அலுவலகத்திற்கு விண்ணப்பிக்கவும் .
4..Request to re-fix the pay of the officials w.e.f 01.01.2006 who are promoted in the light of the Directorate Lr No. 7-2/2016-PCC(Pt.)  dated 03.10.2018 communicated in RO Lr No. EST/121-21/CPC-Rlg/2016 dated 11.10.2018 இதுகுறித்து  ஊழியர்களின்  விண்ணப்பங்களை  சம்பந்தப்பட்ட தலைமைஅஞ்சலகங்களுக்கு  அனுப்பி  நடவடிக்கை எடுக்க கோட்ட அலுவலகத்தால்  தாக்கீது வந்துவிட்டது .
5..  Request to grant of remaining amount of CEA as per the latest orders of Ministry of Personnel (Dept of personnel &Training ) OM no A-27012/02/2017 –Est (AL)dtd 16.08.2017&OM NO-A-27012/02/2017dtd 17.07.2018 to all  eligible staffs of Tirunelveli Division இதற்கான  பணிகள்  கோட்ட அளவிலே முடுக்கிவிடப்பட்டுள்ளது .இதன்மூலம் சுமார் 130 ஊழியர்கள் நிலுவைத்தொகையினை பெறுவார்கள் 
                                    இதுபோன்ற  ஊழியர்நலன் சார்ந்த விஷயங்களில்  மின்னல் வேகத்தில் செயல்படும்  நெல்லை கோட்ட நிர்வாகத்திற்கும் குறிப்பாக நமது SSP  திரு சாந்தகுமார்  அவர்களுக்கும் நெல்லை NFPE யின்  சார்பாக நன்றியை  தெரிவித்துக்கொள்கிறோம் .
                                                    நன்றி . வாழ்த்துக்களுடன்  SK .ஜேக்கப் ராஜ் -SK .பாட்சா  கோட்ட செயலர்கள் நெல்லை 

Thursday, November 1, 2018

                                                முக்கிய செய்திகள்
    மீண்டும் அஞ்சலகம் மூலம் OAP மணியார்டர் சேவையை பயன்படுத்த தமிழக அரசு முடிவெடுத்துள்ளது .இது குறித்து தமிழகஅரசு செய்திக்குறிப்பு எண் 799 தேதி 31.10.2018 இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது .மொத்தம் உள்ள பயனாளிகள் 29,48,527 பேர் மீண்டும் தங்கள் தங்கள் வீடுகளி லேயே ஓய்வூதியத்தை பெற்றுக்கொள்ள முடியும் .அஞ்சல் சேவையின் மகத்துவத்தை பாதுகாப்போம் 
-----------------------------------------------------------------------------------------------------------------------
நாளை 02.11.2018 அன்று பாளையம்கோட்டையில் மாலை 6 மணிக்கு நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் அனைவரும் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறோம் .இதற்கான சுற்றறிக்கை இன்று உங்களுக்கு கிடைத்திருக்கும் .கருப்பு பேட்ஜ் இன்று எல்லா அலுவலகங்களுக்கும் அனுப்பப்படும் .நாளை மற்றும் நாளை மறுநாள் அதாவது 02.11.2018 மற்றும் 03.11.2018 ஆகிய நாட்களில் தோழர்கள் /தோழியர்கள் அனைவரும் கருப்பு பேட்ஜ் அணிந்து பணியாற்ற கேட்டுக்கொள்கிறோம் .அதற்கான புகைப்படங்களை நமது NELLAI NFPE வாட்ஸாப்ப் குழுவில் பதிவிடவும் கேட்டுக்கொள்கிறோம் 
தோழமை வாழ்த்துக்களுடன் 
SK .ஜேக்கப் ராஜ் --SK பாட்சா கோட்ட செயலர்கள் நெல்லை