...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Friday, November 2, 2018

அன்பார்ந்த தோழர்களே !
                                        நெட் ஒர்க் பிரச்சினையால் அலகாபாத் அஞ்சலகத்தை தாக்கிய நபர்களை கண்டித்தும் SAP பிரச்சினையில் மெத்தனம் டார்கெட் நெருக்கடி =மாத சம்பளம் GPF இவைகளை பெறுவதில் காலதாமதம் GDS ஊழியர்க்ளுக்கு கொடுக்கப்பட்ட டர்பன் தரத்தை உயர்த்துவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று மாலை 6  மணிக்கு பாளையம்கோட்டையில் நடைபெறும் ஆர்பாட்டத்தில் அனைவரும் பங்கேற்க கேட்டுக்கொள்கிறோம் .நேற்று அலகாபாத் நாளை எங்கே ? பொதுமக்களின் கோபத்திற்கு நேரடியாக ஆளாகும் அஞ்சல் ஊழியர்களை பாதுகாக்க பாளை நோக்கி வாரீர் !வாரீர் ! இன்று உங்களுக்கு கருப்பு பேட்ஜ் அனுப்பப்பட்டுள்ளது .அனைவரும் இன்று கருப்பு பேட்ஜ் அணிந்து பணியாற்றுங்கள் .இந்த புகைப்படங்களை கோட்ட சங்க வாட்ஸாப் நெல்லை NFPE யில் பதிவிடுங்கள் .
                                                   நெல்லை    கோட்ட சங்க செய்திகள் 
நாம் சென்ற மாத மாதாந்திர பேட்டிக்கு சென்றுவிட்டு வந்தவுடன் பதிவிட்டோம் .அர்த்தமுள்ள மாதாந்திர பேட்டி -பயனுள்ள 2 மணிநேர சந்திப்பு என்று .ஆம் அது இன்றும் தொடர்கிறது .இன்னும் தொடரட்டும் 
                                    தட்டுங்கள் திறக்கப்படும் 
 1.SB Counters of Palayankottai HO are already overburdened and hence it is requested to withdraw the additional works viz., CC Bridge, KYC maintenance, Commission bills etc., which can be entrusted to the officials working in back office.இது இந்த மாத  மாதாந்திர பேட்டியில் நாம் வைத்த பிரச்சினை  
நேற்று பாளையம்கோட்டையில் மூன்று கவுண்டர்களில் இணைக்கப்பட்ட கூடுதல் வேலைகள்  நிறுத்தப்பட்டு BACKOFFICE  PA க்கு கொடுக்கப்பட்டுவிட்டது .
2.MDW of SB Branch of Palayankottai HO has not been revised even after introduction of several new works.  Hence, it is requested to take action to revise the MDW of SB Branch of Palayankottai HO which is obsolete now. பாளையம்கோட்டையில்  புதிய வரைவு MDW  தயாரிக்கப்பட்டு (அனைத்து ஊழியர்களின் ஒப்புதலோடு ) 9.11.2018 குள்  கோட்ட அலுவலகத்திற்கு அனுப்ப உத்தரவு  வந்துவிட்டது 
3.The Divisional gradation list of PA Cadre is due for 2017 and the last one was issued during the year 2013.  Hence we request the SSPOs to consider release of the same at the earliest.(இது செப்டம்பர் மாத சப்ஜெக்ட் )
இதன்  அடிப்படையில்  கோட்ட அலுவலகத்தில் இருந்து  LSG  HSG II  மற்றும் HSG I நீங்கலாக  248 எழுத்தர்களுக்கான வரைவு சீனியாரிட்டி பட்டியில்  31.10.2018 அன்று  உங்கள் சுற்றுக்கு வந்துள்ளது .குறைகள் விடுதல் இருந்தால் உடனே  கோட்ட அலுவலகத்திற்கு விண்ணப்பிக்கவும் .
4..Request to re-fix the pay of the officials w.e.f 01.01.2006 who are promoted in the light of the Directorate Lr No. 7-2/2016-PCC(Pt.)  dated 03.10.2018 communicated in RO Lr No. EST/121-21/CPC-Rlg/2016 dated 11.10.2018 இதுகுறித்து  ஊழியர்களின்  விண்ணப்பங்களை  சம்பந்தப்பட்ட தலைமைஅஞ்சலகங்களுக்கு  அனுப்பி  நடவடிக்கை எடுக்க கோட்ட அலுவலகத்தால்  தாக்கீது வந்துவிட்டது .
5..  Request to grant of remaining amount of CEA as per the latest orders of Ministry of Personnel (Dept of personnel &Training ) OM no A-27012/02/2017 –Est (AL)dtd 16.08.2017&OM NO-A-27012/02/2017dtd 17.07.2018 to all  eligible staffs of Tirunelveli Division இதற்கான  பணிகள்  கோட்ட அளவிலே முடுக்கிவிடப்பட்டுள்ளது .இதன்மூலம் சுமார் 130 ஊழியர்கள் நிலுவைத்தொகையினை பெறுவார்கள் 
                                    இதுபோன்ற  ஊழியர்நலன் சார்ந்த விஷயங்களில்  மின்னல் வேகத்தில் செயல்படும்  நெல்லை கோட்ட நிர்வாகத்திற்கும் குறிப்பாக நமது SSP  திரு சாந்தகுமார்  அவர்களுக்கும் நெல்லை NFPE யின்  சார்பாக நன்றியை  தெரிவித்துக்கொள்கிறோம் .
                                                    நன்றி . வாழ்த்துக்களுடன்  SK .ஜேக்கப் ராஜ் -SK .பாட்சா  கோட்ட செயலர்கள் நெல்லை 

0 comments:

Post a Comment