...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Wednesday, July 3, 2019

                                 அகில இந்திய மாநாடு -நமது பங்கு .
                                          நமது துறையில் நிலவும் ஆட்பாற்றாக்குறை -முறையான கட்டமைப்புகள் ஏதுமின்றி புகுத்தப்படும் புதிய சேவைகள் -உறுப்பினர் சரிபார்ப்பு 2015 முடிவுகளை வெளியிடாமலே காலம்கடத்தும் மெத்தனப்போக்கு பலஆண்டுகளாக நடத்தப்படாத DEPARTMENT கவுன்சில்  கூட்டம் -தொழிற்சங்கங்களை கலந்தாலோசிக்காமலே அமுல்படுத்தநினைக்கும் புதிய நியமன விதிகள் - CSI -SAP போன்ற பணிகளுக்கு இதுவரை வழங்கப்படாத STANDARD OPERATION PROCEDURE போன்ற நமது அஞ்சல் பகுதி பிரச்சினைகளை குறித்து நிர்வாகத்திடம் பலமுறை விவாதிக்கப்பட்டு அதற்கான தீர்வு என்பது இதுவரை எட்டப்படவில்லை .என நமது மத்திய சங்க செய்திகள் தெரிவிக்கின்றன புதிய அரசு என்றாலும் அதே கொள்கை -அதே அமைச்சர் -அதே கோரிக்கை 
                                                               இந்த பின்னணியில் நமது அகிலஇந்திய மாநாடு வருகிற அக்டோபர் திங்கள் 20 முதல் -22 வரை நடைபெறுகிறது ..இந்த மாநாட்டில் நமது அஞ்சல் எழுத்தர் பிரச்சினைகளை தீர்த்திட வலுவான போராட்ட திட்டங்கள் எடுத்திட வேண்டும் என்கின்ற அடிப்படையில் நமது கோட்டசங்கத்தின் சார்பாக தீர்மானங்களை அகிலஇந்திய சங்கத்தின் கவனத்திற்கு கொண்டுசெல்லவேண்டிய கடமை நமக்கும் உண்டு .
                      ஆகவே நமது தோழர்கள் நமது பிரச்சினைகளை கோரிக்கைகளாக வடித்தெடுக்க உங்கள் கருத்துக்களை தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம் 
 நன்றி தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை 

Tuesday, July 2, 2019

                                                      வருந்துகிறோம் 
நமது சங்க முன்னாள் பொருளாளர் தோழர் கோபாலகிருஷ்ணன் PA பாளையங்கோட்டை அவர்கள் நேற்று (01.07.2019 நள்ளிரவு மரணமடைந்தார் என்பதனை வருத்தத்தோடு தெரிவித்துக்கொள்கிறோம் .குடும்பத்தலைவனை இழந்து தவிக்கும் குடும்பத்தாருக்கு நெல்லை NFPE தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறது 
                        

அ ன்பார்ந்த தோழர்களே !
             நமது அகிலஇந்திய மாநாட்டிற்கு செல்ல இதுவரை நமது கோட்டத்தில் 14 தோழர்களுக்கு  முன்பதிவு செய்யப்பட்டுள்ளது .பயனவிவரங்கள் -புறப்படுதல் 
18.10.2019--  19.40 நெல்லை -மதுரை நெல்லை எக்ஸ்பிரஸ் 
19.10.2019-- 01.00 மதுரை -ஹைதெராபாத் (16733) இரவு 11.45 
                                        திரும்புதல் 
23.10.2019 --16.00 ஹைதெராபாத் --நெல்லை (16353) 24.10.2019 இரவு 7 மணி 
 இனிமேல் வரவிரும்பும் தோழர்கள் மேற்கண்ட அடிப்படையில் தங்களது பயண திட்டங்களை வகுத்து கொள்ளலாம் .பயண கட்டணம் மொத்தம் ரூபாய் 1500 .
                                             --------------------------------------------
 GDS ஊழியர்களின் போராட்டத்திற்கு கிடைத்த மற்றுமொரு வெற்றி 
         பணிஓய்வு பெரும் GDS ஊழியர்களுக்கு உயர்த்தப்பட்ட செவரென்ஸ் மற்றும் கிராஜூட்டி 01.01.2016 முதல் அமுல்படுத்தப்படும் என அஞ்சல்   வாரியம் உத்வு பெரும்  தோழர்களுஅக்கு என்று இருந்தது இப்பொழுது 01.01.2016 முதல் மாற்றியமைக்கப்பட்டுள்ளது என்பது மாபெரும் சாதனை தான் .தங்களது கோரிக்கைகளை வென்றெடுக்க தனித்தும் மற்றும் இணைந்தும்    போராடி வெற்றிபெற்ற GDS தோழர்கதரவிட்டுள்ளது .முன்னதாக கமிட்டி அமுலான 01.07.2018 முதல் ஓய்ளின்   போராட்ட குணத்திற்கு    வாழ்த்துக்கள் .       
நன்றி .தோழமை வாழ்த்துக்களுடன் 
SK .ஜேக்கப் ராஜ் -SK .பாட்சா கோட்ட செயலர்கள் நெல்லை