...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Wednesday, July 3, 2019

                                 அகில இந்திய மாநாடு -நமது பங்கு .
                                          நமது துறையில் நிலவும் ஆட்பாற்றாக்குறை -முறையான கட்டமைப்புகள் ஏதுமின்றி புகுத்தப்படும் புதிய சேவைகள் -உறுப்பினர் சரிபார்ப்பு 2015 முடிவுகளை வெளியிடாமலே காலம்கடத்தும் மெத்தனப்போக்கு பலஆண்டுகளாக நடத்தப்படாத DEPARTMENT கவுன்சில்  கூட்டம் -தொழிற்சங்கங்களை கலந்தாலோசிக்காமலே அமுல்படுத்தநினைக்கும் புதிய நியமன விதிகள் - CSI -SAP போன்ற பணிகளுக்கு இதுவரை வழங்கப்படாத STANDARD OPERATION PROCEDURE போன்ற நமது அஞ்சல் பகுதி பிரச்சினைகளை குறித்து நிர்வாகத்திடம் பலமுறை விவாதிக்கப்பட்டு அதற்கான தீர்வு என்பது இதுவரை எட்டப்படவில்லை .என நமது மத்திய சங்க செய்திகள் தெரிவிக்கின்றன புதிய அரசு என்றாலும் அதே கொள்கை -அதே அமைச்சர் -அதே கோரிக்கை 
                                                               இந்த பின்னணியில் நமது அகிலஇந்திய மாநாடு வருகிற அக்டோபர் திங்கள் 20 முதல் -22 வரை நடைபெறுகிறது ..இந்த மாநாட்டில் நமது அஞ்சல் எழுத்தர் பிரச்சினைகளை தீர்த்திட வலுவான போராட்ட திட்டங்கள் எடுத்திட வேண்டும் என்கின்ற அடிப்படையில் நமது கோட்டசங்கத்தின் சார்பாக தீர்மானங்களை அகிலஇந்திய சங்கத்தின் கவனத்திற்கு கொண்டுசெல்லவேண்டிய கடமை நமக்கும் உண்டு .
                      ஆகவே நமது தோழர்கள் நமது பிரச்சினைகளை கோரிக்கைகளாக வடித்தெடுக்க உங்கள் கருத்துக்களை தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம் 
 நன்றி தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை 

0 comments:

Post a Comment