...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Saturday, November 2, 2019

                                                      வருந்துகிறோம் 
நமது கோட்ட சங்கத்தின் முன்னாள் தலைவர் -நெல்லை கோட்ட  தலமட்ட போராட்ட களத்தில் முக்கிய பங்காற்றியவர்  தலைவர் பாலையா அவர்களின் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறோம் .அன்னாரது இறுதி சடங்கு நாளை 03.11.2019 நண்பகல் 11 மணிக்கு நெல்லை ஆனந்தா புரத்தில் நடைபெறுகிறது .தலமட்ட போராளிக்கு வீரவணக்கம் செலுத்துவோம் .நெல்லை NFPE

                                         முக்கிய செய்திகள் 
அன்பார்ந்த தோழர்களே !
                    அடுத்த ஒரு LSG பட்டியல் நேற்று வெளியி டப்பட்டுள்ளது .671 ஊழியர்களுக்கு இந்த பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது .நமது கோட்டத்தில் 37 ஊழியர்கள் இந்த பட்டியலில் இருக்கிறார்கள் .ஜூலை 2007 வரை பணியில் சேர்ந்தவர்களுக்கு LSG கிடைத்துள்ளது .இதில் பல தோழர்கள் MACP II பதவி உயர்வின் விளிம்பில் இருக்கிறார்கள் .ஏற்கனவே நாம் நிர்வாகத்தை தொடர்ந்து வற்புறுத்திய முக்கிய கோரிக்கைகளில் ஒன்று கோட்ட அளவிலான MACP உயர்வுகளை விரைந்து வழங்கிடவேண்டும் என்பது மந்த கதியில் நடக்கிறது .கடந்தவாரம் தான் அதற்கான சர்விஸ் புத்தகங்கள் தலைமை அஞ்சலகத்தில் இருந்து அனுப்பப்பட்டுள்ன .
இந்நிலையில் இதில் LSG பதவி உயர்வை ஏற்பவர்களை பொறுத்து நமது கோட்டத்தில் LGO தேர்வுக்கான காலியிடங்கள் கூடும் என்கின்ற வாய்ப்புகள் இருக்கிறது .ஆகவே கோட்ட நிர்வாகமும் LSG 
காலியிடங்களை முழுமையாக அறிவித்து உதவிட வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம் .
நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் -SK .பாட்சா கோட்ட செயலர்கள் நெல்லை 

Friday, November 1, 2019

                                                              நெல்லை     முக்கிய செய்திகள் 
அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !
                     * போஸ்ட்மாஸ்டர் கிரேடு  அனைத்தும் பொதுப்பிரிவொடு இணைக்கப்பட்ட பின்னணியில் அதற்கான வரைவு சீனியாரிட்டி பட்டியலும் வெளியிடப்பட்டிருந்தது .அதனை தொடர்ந்து  அஞ்சல் வாரியம் 31.10.2019 அன்று பதவிகளை அடையாளம் காட்டும் விதமான வழிகாட்டுதல்களை பிறப்பித்துள்ளது .கேடர் சீரமைப்பிற்கு பின்னால் உருவாக்கப்பட்ட பதவிகளின் அடிப்படையில் இந்த பதவிகளை எவ்வாறு LSG HSG II மற்றும் HSG I என வகைப்படுத்துவது குறித்து விரிவாக எடுத்துரைத்துள்ளது .
               அதன்படி தற்சமயம் போஸ்ட்மாஸ்டர் கிரேடு  1 அலுவலகம் HSG II ஆகவும்  போஸ்ட்மாஸ்டர் கிரேடு II அலுவலகம் HSG I ஆகவும் மறு அடையாளம் கட்டப்பட்டு தகுதி உயர்வு பெறும் .
              * சுமார் 721 பேருக்கு LSG பதவி உயர்வு பட்டியல் ஓரிருநாளில் வெளிவரும் என்றும் NFG குறித்த பணிகளும் துரிதமாக நடைபெற்று வருவதாகவும் மாநிலச்சங்க செய்திகள் தெரிவிக்கின்றன .
                                               பணிஓய்வு பாராட்டு விழா 
            அன்புத்தோழர் ஆனந்த கண்மணி நான்குனேரி அவர்களின் பணிநிறைவு விழா பணகுடி புள்ளிமான் மெட்ரிக் பள்ளியில் வைத்து மிக சிறப்பாக நடைபெற்றது .நமது கோட்டசங்கத்தின் சார்பாக கோட்ட தலைவர் தோழர் T.அழகுமுத்து கோட்டசெயலர் ஜேக்கப் ராஜ் T.சுடலையாண்டி VS .கிருஷ்ணன் ஹாஜி அலி ராஜேந்திரபோஸ் சாகுல் இளங்கோ ஆசை தம்பி  செல்வின் உள்ளிட்ட நிர்வாகிகளும் முன்னாள் தென்பகுதி தலைவர்களான தோழர் நடராஜன் செல்வராஜன் சுந்திரஜெயசீலன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டு சிறப்பித்தனர் .
 நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் -SK .பாட்சா கோட்ட செயலர்கள் நெல்லை