...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Friday, November 1, 2019

                                                              நெல்லை     முக்கிய செய்திகள் 
அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !
                     * போஸ்ட்மாஸ்டர் கிரேடு  அனைத்தும் பொதுப்பிரிவொடு இணைக்கப்பட்ட பின்னணியில் அதற்கான வரைவு சீனியாரிட்டி பட்டியலும் வெளியிடப்பட்டிருந்தது .அதனை தொடர்ந்து  அஞ்சல் வாரியம் 31.10.2019 அன்று பதவிகளை அடையாளம் காட்டும் விதமான வழிகாட்டுதல்களை பிறப்பித்துள்ளது .கேடர் சீரமைப்பிற்கு பின்னால் உருவாக்கப்பட்ட பதவிகளின் அடிப்படையில் இந்த பதவிகளை எவ்வாறு LSG HSG II மற்றும் HSG I என வகைப்படுத்துவது குறித்து விரிவாக எடுத்துரைத்துள்ளது .
               அதன்படி தற்சமயம் போஸ்ட்மாஸ்டர் கிரேடு  1 அலுவலகம் HSG II ஆகவும்  போஸ்ட்மாஸ்டர் கிரேடு II அலுவலகம் HSG I ஆகவும் மறு அடையாளம் கட்டப்பட்டு தகுதி உயர்வு பெறும் .
              * சுமார் 721 பேருக்கு LSG பதவி உயர்வு பட்டியல் ஓரிருநாளில் வெளிவரும் என்றும் NFG குறித்த பணிகளும் துரிதமாக நடைபெற்று வருவதாகவும் மாநிலச்சங்க செய்திகள் தெரிவிக்கின்றன .
                                               பணிஓய்வு பாராட்டு விழா 
            அன்புத்தோழர் ஆனந்த கண்மணி நான்குனேரி அவர்களின் பணிநிறைவு விழா பணகுடி புள்ளிமான் மெட்ரிக் பள்ளியில் வைத்து மிக சிறப்பாக நடைபெற்றது .நமது கோட்டசங்கத்தின் சார்பாக கோட்ட தலைவர் தோழர் T.அழகுமுத்து கோட்டசெயலர் ஜேக்கப் ராஜ் T.சுடலையாண்டி VS .கிருஷ்ணன் ஹாஜி அலி ராஜேந்திரபோஸ் சாகுல் இளங்கோ ஆசை தம்பி  செல்வின் உள்ளிட்ட நிர்வாகிகளும் முன்னாள் தென்பகுதி தலைவர்களான தோழர் நடராஜன் செல்வராஜன் சுந்திரஜெயசீலன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டு சிறப்பித்தனர் .
 நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் -SK .பாட்சா கோட்ட செயலர்கள் நெல்லை 


1 comment:

  1. Have a good day.
    Wishing a happy retired life
    Comrade Ananthakamani.

    K.PONNURAJ
    Retired P.A.
    TIRUNELVELI H.O
    1/11/2019

    ReplyDelete