...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Friday, September 29, 2017

                                                முக்கிய செய்திகள் 
இன்று 29.09.2017 அன்று நடைபெறவிருந்த நெல்லை கோட்ட மாதாந்திர பேட்டி தள்ளிவைக்கப்பட்டுள்ளது .
----------------------------------------------------------------------------------------------------------------------
அஞ்சல் மூன்றின் மாநில மாநாட்டிற்கான நன்கொடை புத்தகங்கள் வரவேற்பு குழு சார்பாக வந்துள்ளன .நமது தோழர்கள் ரூபாய் 100 மட்டும் மாநாட்டு நன்கொடையாக வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம் 
-----------------------------------------------------------------------------------------------------------------------
நமது கோட்ட அமைப்பு செயலர் தோழர் S .முத்துமாலை அவர்களின் சீரிய முயற்சியால் 65 SSA கணக்குகள் நன்கொடைகள் மூலம் தொடங்கப்பட்டு அதற்கான விழா கடையநல்லூர் ரஹ்மானியா நர்சரி &பிரைமரி பள்ளி சார்பாக 30.09.2017 கடையநல்லூரில் நடைபெறுகிறது .நமது மதிப்பிற்குரிய கொடைவள்ளல்
 Rtn .Major திரு .மயில் பாண்டியன் அவர்கள் இந்த தொகையினை அன்பளிப்பாக வழங்கியுள்ளார்கள் .இந்த இனிய நிகழ்வில் நமது SSPதிரு .VPC அவர்கள்  மற்றும் திருநெல்வேலி ASPதிரு .G.செந்தில்குமார்  -நமது நெல்லை கோட்ட செயலர் தோழர் SK .ஜேக்கப் ராஜ் --SK பாட்சா உள்ளிட்ட நிர்வாகிகளும் கலந்து கொள்கிறார்கள் .அடுத்த விழா இதைவிட சிறப்பாக NELLAI NFPE சார்பாக நடைபெறுகிறது .
அச்சுறுத்தல் வேண்டாம் -அதிகாரம் வேண்டாம் -மிரட்டல் இல்லை -உருட்டல் இல்லை -அதனால் தான் இதய சுத்தியோடு எங்களால் களம் இறங்க முடிகிறது .
நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை 
---------------------------------------------------------------------------------------------------------------------
                                   இந்தமாத நிகழ்வுகள் 
08.10.2017 பொள்ளாச்சி கோட்ட மாநாடு 
15.10.2017 கோவை -பேரவை விழா 
22.10.2017 அண்ணன் பாலு இரண்டாம் ஆண்டு நினைவேந்தல் -திருச்சி 
-----------------------------------------------------------------------------------------------------------------------

  தோழர் சத்தியமூர்த்தி @சத்யா கோட்டசெயலர் பாண்டிச்சேரி      அவர்களின் பணிநிறைவு விழா
                            நாள் --29.09.2017   இடம் திண்டிவனம் 
  சத்யா எனும் சாணக்கியனே !
  சத்தமில்லாமல் சாதனைகளை தனதாக்கியவனே !
 ஆச்சர்யமாகத்தான் இருக்கிறது -உனக்கு 
அறுபதா ! அது தெரியாமலே 
ஒருமையில் அல்லவா இத்தனை நாளும் 
அழைத்திருக்கிறேன் !
ஆனாலும் எனக்கந்த உரிமையுண்டு 
நீயும் நானும் ஒரே 
பாசறையில் பயின்றவர்கள் 
ஒரே வெற்றிக்காக 
பலமுறை முயன்றவர்கள் 
பேரவையின் இணைப்பிற்கு 
பெரிதும் உதவியவன் நீ -வெளியே 
பெயர் வரத்தேவையில்லை என்று 
பெருந்தன்மை காட்டியவன் 
HSG I பதவியில் இருந்தாலும் 
எந்த வேறுபாட்டையும் உன்னிடம் காணவில்லை 
அன்று இருந்ததை போலவும் 
இன்றும் இருக்கிறாய் -என்றும் இருப்பாய் 
ஆம்நீ   அதிசயம் கலந்தவன் -
ஆச்சர்யம் மிகுந்தவன் 
அன்பை விதைத்தவன் 
ஆசையை விலக்கியவன் 
அடிமையை வெறுத்தவன் 
அதிகாரத்தை அறுத்தவன் 
அமைதியை விரும்பியவன் -
அனைத்திற்கும் மேல் 
அண்ணன் பாலுவை ஏற்றுக்கொண்டவன் 
அதனால் என்னவோ 
அனைவர் உள்ளங்களையும் ஆக்கிரமித்தவன் 
வாழ்க !நீ    சீக்கிரம் வா !
செங்கை மாநாடும் உனக்கு 
சிறப்பு சேர்க்க காத்திருக்கிறது !
வாழ்த்துக்களுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்டசெயலர் நெல்லை 


Thursday, September 28, 2017

08.10.2017 அன்று நடைபெறும் பொள்ளாச்சி கோட்ட மாநாடு வெல்லட்டும்