...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Friday, September 29, 2017

  தோழர் சத்தியமூர்த்தி @சத்யா கோட்டசெயலர் பாண்டிச்சேரி      அவர்களின் பணிநிறைவு விழா
                            நாள் --29.09.2017   இடம் திண்டிவனம் 
  சத்யா எனும் சாணக்கியனே !
  சத்தமில்லாமல் சாதனைகளை தனதாக்கியவனே !
 ஆச்சர்யமாகத்தான் இருக்கிறது -உனக்கு 
அறுபதா ! அது தெரியாமலே 
ஒருமையில் அல்லவா இத்தனை நாளும் 
அழைத்திருக்கிறேன் !
ஆனாலும் எனக்கந்த உரிமையுண்டு 
நீயும் நானும் ஒரே 
பாசறையில் பயின்றவர்கள் 
ஒரே வெற்றிக்காக 
பலமுறை முயன்றவர்கள் 
பேரவையின் இணைப்பிற்கு 
பெரிதும் உதவியவன் நீ -வெளியே 
பெயர் வரத்தேவையில்லை என்று 
பெருந்தன்மை காட்டியவன் 
HSG I பதவியில் இருந்தாலும் 
எந்த வேறுபாட்டையும் உன்னிடம் காணவில்லை 
அன்று இருந்ததை போலவும் 
இன்றும் இருக்கிறாய் -என்றும் இருப்பாய் 
ஆம்நீ   அதிசயம் கலந்தவன் -
ஆச்சர்யம் மிகுந்தவன் 
அன்பை விதைத்தவன் 
ஆசையை விலக்கியவன் 
அடிமையை வெறுத்தவன் 
அதிகாரத்தை அறுத்தவன் 
அமைதியை விரும்பியவன் -
அனைத்திற்கும் மேல் 
அண்ணன் பாலுவை ஏற்றுக்கொண்டவன் 
அதனால் என்னவோ 
அனைவர் உள்ளங்களையும் ஆக்கிரமித்தவன் 
வாழ்க !நீ    சீக்கிரம் வா !
செங்கை மாநாடும் உனக்கு 
சிறப்பு சேர்க்க காத்திருக்கிறது !
வாழ்த்துக்களுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்டசெயலர் நெல்லை 


0 comments:

Post a Comment