...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Thursday, November 30, 2017

அன்புத் தோழர்களுக்கு, வணக்கம். 

நமது NFPE சம்மேளனத்தின் அறைகூவலை ஏற்று, நமது இலாக்காவில் நீண்டகாலமாக தீர்க்கப்படாமல் தேங்கிக் கிடக்கும் பிரச்சினைகளை தீர்த்திடக் கோரி இன்று
 ஆர்ப்பாட்டத்தில் 
கலந்துகொண்ட சங்க நிர்வாகிகளுக்கும் ,தோழமை நிர்வாகிகளுக்கும் நன்றி .
அடுத்தகட்டப் போராட்டமான டிசம்பர் 20, 2017 அன்று சென்னையில் CPMG அலுவலக வாயிலில்  நடைபெற உள்ள முழு நாள் தார்ணா போராட்டத்தில் கலந்து கொள்ள இன்றே விடுப்பு விண்ணப்பம் அளித்திடுவீர். பேருந்து அல்லது ரயில் டிக்கெட்டுகளை உடன் முன் பதிவு செய்திடுவீர்.அதே போல் 
12லிருந்து 16 வரை புதுடெல்லியில் நடை பெற உள்ள 5 நாட்கள் பாராளுமன்ற முற்றுகைப் போராட்டத்தில் கலந்து கொண்டு சரித்திரம் படைக்க இப்போதே ரயில் டிக்கெட் அல்லது Flight ticket உடன் முன்பதிவு செய்யுங்கள். 
Flight ticket இப்போது Book செய்தால் வெறும் ரூ.3200 தான். சங்க வரலாற்றில் உங்கள் பெயரும்  தடம் பதித்திட
உடனே செயல்படுங்கள்.
கடைசி நேரத்தில் டிக்கெட் கண்டிப்பாக கிடைக்காது. 
நம் கோரிக்கை வெல்ல வேண்டுமானால் தயங்காது சங்கம் அமைத்திருக்கும் போர்க்களத்தில் குதியுங்கள். 
நாளைய வெற்றி நமதே  என போர்ப்பரணி பாடுங்கள் !
போராட்ட வாழ்த்துக்களுடன்
NFPE அஞ்சல் மூன்று சங்கம், அஞ்சல் நான்கு  
நெல்லை 

Wednesday, November 29, 2017

தூத்துக்குடி கோட்ட அஞ்சல் மூன்றின் முன்னாள் கோட்ட செயலர் -மத்தியஅரசு ஊழியர் மகாசம்மேளனத்தின் அமைப்பு செயலர் தோழர் சங்கரகுமார் அவர்கள் பணிஓய்வு விழா30.11.2017



சங்கரகுமார் என்ற
சங்க நாதமே !
முத்துநகர் தந்திட்ட
முன்னணி தலைவனே !
பல்வேறு காலகட்டங்களில்
பொறுப்புகளை ஏற்க மறுத்தாய் -ஆனாலும் 
பொறுப்புகளை சுமந்தே நின்றாய்
கள்ளமில்லா நட்பு
களங்கமில்லா மனது -கொள்கை
கலப்பில்லா பிடிப்பு
கர்வங்கள் இல்லா சிரிப்பு
இவைகளெல்லாம் உந்தன் தனி சிறப்பு
இதயமெல்லாம் இளமையின் துடிப்பு

அதிகார வர்க்கங்களின்
சதிகார வலையில் சிக்கியதில்லை
மலிவான விளம்பரத்திற்க்காக
மாற்றார் மேடை ஏறியதில்லை
இளையவர்களை இழுத்துக்கொண்டு
இயக்கம் நடத்தவே துடித்தாய்
இயக்கத்தை இளமையாக்கவே
இளைப்பாறாமலே பயணித்தாய்

அஞ்சாநெஞ்சனின் பாசறையிலே
இறுதிவரை தொடர்ந்தாய்
அவர் தம்பி என தெரிந்ததில் இருந்து
என்னைக்கூட விடாமலே படர்ந்தாய்
முத் துநகருக்கும் நெல்லைக்கு ம் 
இடைவெளியை குறைத்தாய் 
முத்தமிழின் சுவைகூட்டியே
மேடைதோறும் முழங்கினாய் 

உன் பணிநிறைவு நாட்கள் 
சிறக்க வாழ்த்தி வணங்குகிறேன் 
தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை 

NFPE சம்மேளன அழைப்பை ஏற்று நெல்லையில் 29.11.2017 அன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டம் .29.11.2017
அஞ்சல் மூன்றின் கோட்ட தலைவர் KG.குருசாமி தலைமை தாங்கினார் .அஞ்சல் நான்கின் கோட்ட தலைவர் தோழர் சீனிவாச சொக்கலிங்கம் முன்னிலை வகித்தார் .தோழர் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை தோழர் செல்வபாரதி மாநிலஅமைப்பு செயலர் SBCO தோழர் சிவகுமார் தோழர் G.கிருஷ்ணன் தோழர் சுப்ரமணியன் SC /ST நலச்சங்க செயலர் தோழர் C .வண்ணமுத்து ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள் .தோழர் அழகுமுத்து நன்றி கூறினார் .ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட அனைவருக்கும் நெல்லை NFPE இன் வீர வாழ்த்துக்கள்