...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Thursday, May 3, 2018

                                         GDS கமிட்டி இன்றைய நிலை
-உன்னை சொல்லி குற்றமில்லை 
-என்னை சொல்லி குற்றமில்லை -
உள்ளதை சொல்ல ஆளுமில்லை -
உள்ளுக்குள் நடப்பதும் தெரியவில்லை 
 வழக்கமாக ஒவ்வொரு கமிட்டியிலும் நமது துறைதான் தேவையில்லாத கேள்விகளை கேட்டு GDS ஊழியர்களின் நலனை புறக்கணித்து வந்ததை நாம் பார்த்திருக்கிறோம் .ஆனால் வழக்கத்திற்கு மாறாக கமேலேஷ் சந்திரா அறிக்கையில் அரசாங்கம் காட்டுகிற அலட்சியம் ஏன் என்று புரியவில்லை .நமது அமைச்சருக்கும் நிதி அமைச்சகத்திற்கு ஒருமித்த கருத்து ஏற்படாததும் -குறைந்த TRCA வாங்குகிறவர்களுக்கு அதிக தொகை நிலுவையாக வருவதை அனுமதிக்க முடியாது என நிதி அமைச்சகம் தொடர் பிடிவாதத்தால் இருப்பதும் காரணம் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது .நமக்குள்ளே நாம் கல்லெறிந்துகொண்டிருக்கமால் ஒரு ஒன்றுபட்ட இயக்கத்தை நடத்த அனைத்து தலைவர்கள் முன் வரவேண்டும் .அஞ்சல் துறையில் இருக்கின்ற நான்கு சங்கங்களிலும் GDS ஊழியர்கள் இருக்கிறார்கள் 
அவரவர் அவர்களது சங்கத்தில் உள்ள GDS ஊழியர்களின் நன்மையை கருதி ஒரு ஒன்றுபட்ட போராட்டத்தை நடத்த வேண்டிய கட்டாயம் உள்ளது .பிரிந்த சங்கங்கள் இனைந்து போரட்டத்தை நடத்தியது நமக்கொன்றும் புதிதல்ல .1993 1998 2000 என மூன்று சங்கங்கள் இனைந்து 4 நாள் 8 நாள் என வேலை நிறுத்தம் செய்திருக்கிறோம் .
                                   அரசாங்கம் பல முனை 
                                     தாக்குதலை தொழிலாளி மீது 
                                    தொடுக்கிறது -நம் முன் இருக்கும்  
                                     ஒற்றை ஆயுதம்                 
                                   ஒற்றுமை எனும் கவசம் தான் 
                                    இந்த ஒற்றுமை எனும் கயிற்றை 
                                    இறுக பற்றிக்கொண்டு முன்னேறுவோம் 
                                    ஒன்றுபட்ட போராட்டம் -ஒன்றே 
                                    நமது துயரோட்டும் 
வாழ்த்துக்களுடன் SK .ஜேக்கப் ராஜ் நெல்லை 
--------------------------------------------------------------------------------------------------------------------
                                    
                                    


Wednesday, May 2, 2018

தோழியர் பிரமிளா மறைவு -கோட்ட சங்கம் அஞ்சலி செலுத்துகிறது .
 தேனி கோட்டத்தில் இருந்து சமீபத்தில் தான் நெல்லை கோட்டத்திற்கு RULE 38 இல் இடமாற்றலாகி பத்தமடை SPM ஆக பணியாற்றினார் .பின்பு அம்பை HO விற்கு அக்கௌன்டன்ட் ஆக விருப்பதுடனே சென்றார் .தொழிற்சங்கத்தில் மிகுந்த ஈடுபாடுள்ள தோழியர் அவர் .கடந்த தேனி கோட்ட மாநாட்டில் நான் கலந்துகொண்டேன் .அந்த மாநாட்டில் முக்கிய பங்காற்றியவர்களில் தோழியர் பிரமிளா அவர்களும் ஒருவர் .விரைவில் நெல்லைக்கு வருகிறேன் என்றார்கள் .சொன்னபடியே வந்தார்கள் .அதைவிட வேகமாகவே நம்மை விட்டு சென்றுவிட்டார்கள் .நேற்று மதியம் மருத்துவமனையில் தோழியரை பார்த்தோம் .மாலையில் இறந்துவிட்ட செய்தி நெல்லை கோட்டம் மீண்டும் ஒரு சோகத்தை தழுவி கொண்டது .அன்னாரது இறுதி சடங்கு இன்று பிற்பகலில் நடைபெறுகிறது .தோழியரை இழந்துவாடும் அவரின் இரண்டு குழந்தைகளுக்கு நெல்லை NFPE தனது அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறது .

Tuesday, May 1, 2018

                                                நெல்லையில் நடைபெற்ற மே தின விழா 
நெல்லையில் 01.05.2018 அன்று இரண்டு தலைமை அஞ்சலகங்களிலும் மே தின கொடியேற்றுவிழா சிறப்பாக நடைபெற்றது .
முதலாவதாக திருநெல்வேலி தலைமை அஞ்சலகத்தில் நடைபெற்ற விழாவில் அஞ்சல் மூன்றின் கோட்ட தலைவர் தோழர் T .அழகுமுத்து அவர்கள் தலைமை தாங்கினார்கள் .கலங்கரை விளக்கு ஆசிரியர் ஹாஜி மாலிக் அவர்கள் நமது சம்மேளன கொடியை ஏற்றி வைத்தார்கள் .தோழர்கள் SK .பாட்சா வண்ணமுத்து ஜேக்கப் ராஜ் ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள் .தோழியர் பவானி நன்றி கூறினார் .
--------------------------------------------------------------------------------------------------------------------
பாளையம்கோட்டையில் நடைபெற்ற விழாவில் நமது கோட்ட செயல் தலைவர் தோழர் N .கண்ணன் அவர்கள் தலைமை தாங்கினார்கள் .தோழர் KG.குருசாமி அவர்கள் நம் சம்மேளன கொடியை ஏற்றி வைத்தார்கள் .தோழர் சீனிவாச சொக்கலிங்கம் புஷ்பாகரன் SK .பாட்சா ஜேக்கப் ராஜ் ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள் .தோழர் M .தளவாய் அவர்கள் நன்றி கூறினார்கள் .
கொடியேற்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட அனைவருக்கும் நெல்லை NFPE யின் சார்பாக நன்றிதனை தெரிவித்து கொள்கிறோம் 
தோழமை வாழ்த்துக்களுடன் SK .ஜேக்கப் ராஜ் -SK பாட்சா கோட்ட செயலர்கள் நெல்லை 
------------------------------------------------------------------------------------------------------------------