...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Saturday, July 30, 2016

                                            முக்கிய செய்திகள் 
1.மத்திய அரசு ஊழியர்கள் தங்கள் சொத்து மதிப்புகளை சமர்ப்பிக்க காலஅவகாசம் 31.12.2016 வரை நீட்டிப்பு 
2.வருமானவரி தாக்கல் செய்ய கடைசி தேதி 05.08.2016 ஆக மாற்றம் .
3.நேற்றைய நமது வலைதள பார்வையாளர்கள் எண்ணிக்கை 1529.இது ஒரு புதிய சாதனை .ஆதரவு தரும் அனைத்து ஊழியர்களுக்கும் எங்கள் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம் .இதோ தேதி வாரியாக பார்வையாளர்கள் எண்ணிக்கை வரைபடத்தில் 
PageviewsMore stats »
Graph of Blogger page views

ஊதியக்குழு நிலுவைத்தொகை ஆகஸ்ட் மாத சம்பளத்தோடு வழங்க உத்தரவு 

GOVT ORDERED - ARREARS ON REVISED PAY SHALL BE PAID IN CASH IN ONE INSTALMENT ALONGWITH THE PAYMENT OF REVISED SALARY FOR AUG.2016


Friday, July 29, 2016

                               நெல்லை  கோட்ட செய்திகள் 
                              பணிநிறைவு விழா 
  பணிநிறைவு பெறும் தோழர்களுக்கு நெல்லை NFPE  ன்  வாழ்த்துக்கள் 
தோழர்  S .அய்யாக்குட்டி  PA வள்ளியூர் 
நாள் -30.07.2016   
இடம் -வள்ளியூர்  அஞ்சலகம் 
நேரம் - மாலை  4.30 மணி 
-------------------------------------------------------------------------------------------------------- 
தோழியர்  எல்லம்மாள்  MTS பழையம்கோட்டை  
நாள் -30.07.2016   
இடம் -பாளை  தலைமை அஞ்சலகம்  
நேரம் - மாலை  5.30 மணி 
--------------------------------------------------------------------------------------------------------------

28.17.2016 அன்று நடைபெற்ற மாதாந்திர பேட்டி முடிவுகள் 
1.MACP க்கு DPC 
  நமது கோட்டத்தில் எழுத்தர் ,தபால்காரர் மற்றும் MTS காண MACP பதவிஉயர்வு கமிட்டி 03.08.2016 அன்று கூடுகிறது .இதில் எழுத்தர்கள் 12பேர்  உட்பட மொத்தம் 16 பேர்  பதவிஉயர்வு பெறுகிறார்கள் 
2.LAZER பிரிண்டர் 
         நமது   கோட்டத்திற்கு 18 புதிய  லேசர்  பிரிண்டர்  அஞ்சல் வாரியத்தின் மூலம் நேரடியாக சப்ளை செய்ய  அனுமதி அளிக்கப்பட்டுள்ளது .
3.CEA 
         CEA வழங்குவதற்கு காலதாமதம் சம்பந்தப்பட்ட ஊழியரின் சர்வீஸ் புக் இங்கு இல்லாததே காரணம் .தற்சமயம் சிறப்பு ஏற்பாட்டில் சர்விஸ் புக் வரவழைக்கப்பட்டு CEA தோழர் ஜீவராஜ் சாலமோன்  அவர்களுக்கு பாஸ்  செய்யப்பட்டுள்ளது .
4.இடையன்குடி --இது குறித்து  கொள்கை அளவில் ஏற்றுக்கொண்ட நிர்வாகம் சம்பந்தப்பட்ட ஊழியரிடம் இருந்து  விருப்ப கடிதம் வாங்கி அனுப்ப கோரியுள்ளது  .
5.வீரவநல்லூர் காசாளர் பதவிக்கு விருப்பமனுக்கள் கோரப்படும் .RULE 38 வரும்பொழுது  அவைகள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் .
6.வீகே புரம்  அலுவலகத்திற்கு புதிய  நாற்காலிகள் வாங்க அம்பை  சர்வோதய சங்கத்தில் விலை பட்டியல்  வாங்கி அனுப்பியவுடன்  கொடுக்கப்படும் .
7.மானுர் அஞ்சலக  புதிய நாற்காலிகளுக்கு லோகல்  PURCHASE க்கு அனுமதிக்கப்படுகிறது .
8.04.04.2004 தபால்காரர் தேர்வு ஆண்டு  எந்தஆண்டுக்குரியது என்பதும் எழுத்து  பூர்வமாக தெரிவிக்கப்படும் .இதானால் சுமார் 6 தோழர்களுக்கு பழயை பென்ஷன்  கிடைக்க  வாய்ப்புள்ளது .
9.CONFORMATION  கிடைக்காத  GDS ஊழியர்கள்  அவர்களின் PAPERS  சம்பந்தப்பட்ட தாலுகா அலுவலகங்களில்  தேங்கிக்கிடப்பதால் சம்பந்தப்பட்ட GDS ஊழியர்களும் அதில் தனி  கவனம்  செலுத்த வேண்டும் 
10.  மேளா ளில்  கலந்து கொள்ளும் ஊழியர்களுக்கு பயணக்கட்டணம்  வழங்கப்படும் .
11. அம்பாசமுத்திரம் மெயில்  ஓவர் சீயர்  பதவி  விரைவில்  விருப்ப மனுக்களின் அடிப்படையில்   நிரப்பப்படும்   .
                                                  மற்றவை விரைவில் 
                                                         வாழ்த்துக்களுடன்  
SK .ஜேக்கப் ராஜ்                                                                   SK .பாட்சா 
கோட்டசெயலர் P3                                                          கோட்டசெயலர்  P4 

01.08.2016 முதல் நமது இலாகா முதல்வராக பொறுப்பேற்கவுள்ள திரு .BV.சுதாகர் அவர்களை வாழ்த்திவரவேற்கிறோம் 
Shri B. V. Sudhakar is our new Director General








ஊதியக்குழு நிலுவைத்தொகையை உடனே வழங்கலாம் .UNDERTAKING கடிதங்களை பெற்று நிலுவைத்தொகையினை வழங்க இதோ இலாகா உத்தரவு 




Wednesday, July 27, 2016

                     ஒரு கண்ணில் வெண்ணெய் -மறு               கண்ணில் சுண்ணாம்பு ?                   
 FSC  உயர்வு 22.07.2016 அன்று வெளியிடப்பட்டுள்ளது .இதிலும் அதிகாரிகள் /ஊழியர்களிடையே   பாகுபாட்டை அஞ்சல் வாரியம் கடைபிடித்துள்ளது  
IP /ASP கள்  இதுவரை மாதம் ஒன்றுக்கு ரூபாய் 200 பெற்று வந்தார்கள் .அது தற்சமயம் ரூபாய் 450 ஆக உயர்ந்துள்ளது . அஞ்சலகத்திற்கு வழக்கம் போல் எத்தனை பை கட்டப்பட்டது -அதற்கு எத்தனை நீள சணல் செலவானது  எரிந்த மெழுகுவர்த்தி எத்தனை போன்ற நாட்டின் பொருளாதாரத்தை பாதிக்கும் விஷயங்களை  ஆய்வு செய்தபிறகு வழங்கப்படுமாம் --மத்திய சங்கங்கள் இதுபோன்ற பிரச்சினைகளிலாவது நடக்கும் பாரபட்சத்தை போக்க நடவடிக்கை எடுக்குமா ?
Revision of Fixed Stationary Charges (FSC) for Post Offices, SBCO in HOs and IP/ASP



இந்த மாத மாதாந்திர பேட்டியில் விவாதிக்க கொடுத்த பிரச்சினைகள் 


NFPE
ALL INDIA POSTAL EMPLOYEES UNION GROUP ‘C’ UNION,
TIRUNELVELI DIVISION,
TIRUNELVELI 627 002.
---------------------------------------------------------------------------------------------------------------------

No PIII/Dlgs     dated      at    Tirunelveli  627 002           the  22.07.2016

To
The Sr. Supdt of Post Offices,
Tirunelveli Division,
Tirunelveli 627 002

Sir,
Sub:     New subjects to be discussed in the monthly Union meeting to be held on 28.07.2016 –reg.
Sir,
The following new subjects may kindly be included for discussion in the above meeting.

1.         Request to depute one P.A to Viravanallur S.O since there is acute shortage of P.As.
2.         Request to depute one P.A to Potttalpudur S.O .
3.         Request to supply  3 chairs to Vickramasingapuram S.O.
4.         Request to grant T.A to the officials who are deputed from Cheranmahadevi S.O to Melaseval S.O since distance between the above offices is more than 8 Kms.
5.         Request to supply black sealing wax to all S.Os.
6.         Request to replace UPS and Battery at Palayankottai High Grounds S.O.
7.         Request to supply one laser Printer to Palayankottai High Grounds S.O.
8.         Request tosupply  4 chairs to Manur S.O since all chairs are in worst condition.
9          Request to maintain P.A staff strength as 1 + 2 at all times at Vadakkankulam S.O., as the volume of work is increased by day to day.
10.       Request to depute one senior P.A as SPM, Idayankudi S.O since a P.A having less than 2 years service is working as SPM, Idayankudi.
11.       Request to repair the Gents dining table at Palayankottai H.O.
12.       Request to conduct the DPC for promotions to MACP since 7th C.P.C orders are to be issued shortly
13.       Request to grant CEA without further delay c/o Solomon Jeevaraj, PA, Ambasamudram H.O.

The following officials may kindly be permitted to attend the above meeting.

1.Shri. S.K. Jacobraj, Secretary and P.A, Palayankottai H.O.

2.Shri.M. Namasivayam, Treasurer and  PA, Tirunelveli H.O

3.Shri.P.Subramanian, Branch Secretary and P.A, Ambasamudram H.O.

                                    Thanking You,
                                                                                                Yours faithfully,

                                                                                                (S.K.JACOBRAJ)
                                                                                                Divisional Secretary.
அஞ்சல் நான்கு சார்பாக கலந்து கொள்ளும் தோழர்கள் 
1.SK .பாட்சா  திருநெல்வேலி 
2.P.செல்வின் துரை   காவல்கிணறு 
3.S.ஆதிநாராயணன்  அம்பாசமுத்திரம்   
                           விவாதிக்க கொடுத்த  பிரட்சினைகள் 
1.04.04.2004 இல் நடைபெற்ற தபால்காரர் தேர்வில் வெற்றிபெற்ற ஊழியர்களுக்கு தேர்வு ஆண்டை கணக்கில் கொண்டு அவர்களுக்கு பழயை பென்ஷன்  அனுமதிக்க வேண்டும் .
2.மேளா என்ற பெயரில் தபால்காரர்களை தேவையில்லாமல் அலைக்கழிக்கும் போக்கை உபகோட்டங்கள் நிறுத்த அறிவுறுத்த வேண்டும் .
3.தாலுகா தலைநகரமான ராதாபுரத்தில் தபால்காரர் வேலைப்பளுவை புதிதாக கணக்கீட்டு புதிய  பதவிகள் வழங்க வேண்டும் .
4. தச்சநல்லூர் SO வில் குறைக்கப்பட்ட GDSMD பதவியை திரும்ப வழங்கவேண்டும் . 
5.KTC நகர்  டெலிவரி  அலுவலக பரிந்துரையை விரைந்து மண்டல அலுவலகத்திற்கு அனுப்பிடவேண்டும் . 
--------------------------------------------------------------------------------------------------------------------

முன்னாள் மாநில தலைவர் தோழர் ஸ்ரீ வெங்கடேஷ் அவர்களின் பணிநிறைவு விழா 
நாள் 31.07.2016   இடம் சென்னை CPMG அலுவலக நாலாவதுதளம் --வாழ்த்துக்கள் 



                                          ஊதியக்குழு செய்திகள் 
புதிய ஊதியம் எப்பொழுது கிடைக்கும் என்ற கேள்வி மறைந்து இப்பொழுது எவ்வளவு கிடைக்கும் என ஊழியர்கள் எதிர்பார்ப்பது நியாம்தான் .இதோ 19440 GP 4200  வாங்கும் ஒருவரின் ஊதியத்தை வைத்து கணக்கிடப்பட்டுள்ளது 
 ஊதியம் .01.01.2016 முதல் 01.06.2016 வரை 
பழைய ஊதியம்                                                             புதிய ஊதியம் 
BASICPAY         -19440 (GP 4200 )                            BASICPAY        50500

DA                      23134                                                          DA        --    -----                                            
HRA   10%        1944                                                          HRA ------    1944                         
TA                       1752                                                          TA               1752
                       ---------------                                                            --------------------
                       46270                                                                              54196
                   -----------------                                                             -------------------------

                           புதிய  ஊதியம் .01.07.2016 முதல் 
BASICPAY      52000                             

DA                      -----                                                                                                     
HRA   10%        2003                                                                           
TA                      1800
-               ----------------                                                                                                                                                    55803     
   இதில்  புது DA எத்தனை  சதம்    வருகிறதோ    அதை   சேர்த்துக்கொள்ளவும்
-------------------------------------------------------------------------------------------------------------------------
இனிகிரிமெண்டுக்கும் /பதவி உயர்வுக்கும் வந்தது ஆபத்து 
 பெஞ்ச் மார்க்  VERY GOOD வேண்டுமாம் --

No annual increment for non-performing employees: GovernmentThe recommendation of "withholding of annual increments in the case of those employees who are not able to meet the benchmark either for MACP or a regular promotion within the first 20 years of their service" has been "accepted", it said.


The benchmark for performance appraisal for promotion and financial upgradation has been enhanced to “very good” from “good” level, the Finance Ministry said in an order notifying implementation of Seventh Central Pay Commission’s recommendations.
The Modified Assured Career Progression (MACP) scheme will continue to be administered at 10, 20 and 30 years of service as before, the Ministry said as it “accepted” the pay panel’s recommendations.
The recommendation of “withholding of annual increments in the case of those employees who are not able to meet the benchmark either for MACP or a regular promotion within the first 20 years of their service” has been “accepted”, it said.
The pay panel had in its report to the Centre said that there is a widespread perception that increments as well as upward movement in the hierarchy happen as a matter of course.
“The perception is that grant of MACP, although subject to the employee attaining the laid down threshold of performance, is taken for granted. This Commission believes that employees who do not meet the laid down performance criterion should not be allowed to earn future annual increments.
“The Commission is therefore proposing withholding of annual increments in the case of those employees who are not able to meet the benchmark either for MACP or a regular promotion within the first 20 years of their service. This will act as a deterrent for complacent and inefficient employees,” it had said.
There are about 50 lakh Central government employees.
-------------------------------------------------------------------------------------------------
                                         ஒரே  ஒரு லாபம் 
கடந்தகாலங்களில் ஜனவரி முதல் ஜூன் வரை  பணிநிறைவு  பெற்றவர்கள்  கடைசி  Increment வாங்கமுடியாமல் இருந்தது .அது தற்சமயம் ஜனவரி யில் Increment  பெற்றுக்கொள்ளலாம் .01.01.2016 முதல் 30.06.2016 காலத்திற்குள் ஓய்வு பெற்றவர்கள்கள்  01.01.2016 இல் தங்கள் increment யை  ஜனவரிக்கு மாற்றி  potion  கொடுக்கும் பட்சத்தில் ஓய்வூதிய  உயர்வு  இருக்கும் 
                                            தோழமையுடன்   
                                       SK .ஜேக்கப் ராஜ் 
     
                                                           
         

Tuesday, July 26, 2016

                                                   வருந்துகிறோம் 
தோழர் காளிதாஸ் PA SBCO பாளை அவர்களின் தாயார் திருமதி அம்மாசி அம்மாள் (76 ) அவர்கள் 25.07.2016 அன்று மாலை இயற்கை ஏய்தினார்கள் என்பதனை வருத்தத்தோடு தெரிவித்து கொள்கிறோம் .
                     அன்னாரது இறுதி சடங்குஇன்று ( 26.07.2016 ) பிற்பகல் 1 மணிக்கு மானுர் குப்பனாபுரம் கிராமத்தில் நடைபெறும் .
                   தாயாரை இழந்துவிடும் குடும்பத்தினருக்கு நெல்லை NFPE தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறது .
---------------------------------------------------------------------------------------------------------------------------

                 ஊதியக்குழு வந்துவிட்டது   
     கொடுப்பதை   வாங்கிக்கொள்      --மத்தியஅரசு         
         குறைவானதை ஏற்க மாட்டோம் --ஊழியர் சங்கங்கள் 
          கிடைப்பதை கெடுத்து விடாதே ! --ஊழியர்கள் 
ஆரூடத்தை கடந்து ,அச்சத்தை போக்கி ,அமைதியாக ,ஊதியக்குழுவின் பரிந்துரையை அப்படியே உத்தரவாக வெளிவந்துவிட்டது .ஆம் ஏழாவது ஊதியக்குழுவின் உத்தரவு 25.07.2016 அன்று கெசட்டட் அறிவிப்பாக வந்தது .
1.ஊதியநிர்ணயம் --31.12.2015இல் அடிப்படைஉதியம் + தகுதியூதியம்   இதை 2.57 மடங்கினால் பெருக்கி அதற்கு அடுத்தநிலை PAY MATRIX படி நிர்ணயிக்கப்படும் .
2.புதியஊதியம் 01.01.2016 முதல் அமுல்படுத்தப்படும் 
3.நிலுவைத்தொகை 2016-2017 நிதியாண்டில்  வழங்கப்படும் 
4.ஆண்டு ஊதியஉயர்வு ஜனவரி 1/ஜூலை 1 இதில் ஒன்று ஊழியர்களின் பணிக்கு சேர்ந்தநாள் அல்லது MACP பதவி உயர்வு நாள் அடிப்படையில் வழங்கப்படும் .
5.பஞ்சபடியை தவிர இதர அலவன்சகள் அனைத்தும் உயர்த்தப்படாத ஊதியத்தில் என்ன வாங்கினோமோ அவை வழங்கப்படும் .
6.மெடிக்கல் ,LTC ,TOUR TA   போன்றவைகள் நீடிக்கும் .
7.CGEGISபிடித்தம்  பழைய முறையே தொடரும்  
8.புதிய பென்ஷன் திட்டத்தை முறைப்படுத்த (மாற்ற அல்ல )DOP & Training ,மற்றும் Finance செயலர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் .
9.வழக்கம்போல் அனாமலி கமிட்டி அமைக்கப்படும் ( வழக்கம்போல் பல ஆண்டுகளுக்கு பிறகு அனாமலி கமிட்டி கொடுக்கும் பரிந்துரை அடுத்த அதாவது எட்டாவது ஊதியக்குழுவிற்கு அனுப்பப்படும் --இது கடந்தகால (கசந்தகால )வரலாறு .



GAZETTE NOTIFICATION RELEASED BY THE GOVERNMENT ON 25.7.2016 ON THE ACCEPTANCE OF 7TH CPC RECOMMENDATIONS

PLEASE CLICK HERE TO SEE 
THE GAZETTE NOTIFICATION
NEW DELHI,  MONDAY,  JULY  25,  2016/ SRAVANA 3, 1938.

HIGH LIGHTS 

4.(1)  The Pay Matrix, in replacement of the Pay Bands and Grade Pays as in force immediately prior to the notification of this Resolution, shall be as specified in Annexure I in respect of civilian employees. 

 (2)  With regard to fixation of pay of the employee in the new Pay Matrix as on 1  day of January, 2016, the existing pay (Pay in Pay Band plus Grade Pay) in the pre-revised structure as on 31st  day of December, 2015 shall be multiplied by a factor of 2.57. The figure so arrived at is to be located in the Level corresponding to employee’s Pay Band and Grade Pay or Pay Scale in the new Pay Matrix. If a Cell identical with the figure so arrived at is available in the appropriate Level, that Cell shall be the revised pay; otherwise the next higher cell in that Level shall be the revised pay of the employee.   

 (3)  After fixation of pay in the appropriate Level as specified in sub-paragraph (2) above, the
subsequent increments in the Level shall be at the immediate next Cell in the Level.  


5. There shall be two dates for grant of increment namely, 1st  January and 1 st  July of every year, instead of existing date of 1 st  July; provided that an employee shall be entitled to only one annual increment on either one of these two dates depending on the date of appointment, promotion or grant of financial up-gradation. 

6. The Commission’s recommendations and Government’s decision thereon with regard to
revised pay structure for civilian employees of the Central Government and personnel of All India Services as specified at Annexure I and the consequent pay fixation therein as specified at
Annexure II shall be effective from the 1 st  day of January, 2016.  The arrears on this account shall be paid during the financial year 2016-2017.  

7. The recommendations on Allowances (except Dearness Allowance) will be referred to a
Committee comprising Finance Secretary and Secretary (Expenditure) as Chairman and Secretaries of Home Affairs, Defence, Health and Family Welfare, Personnel and Training, Posts and Chairman, Railway Board as Members. The Committee will submit its report within a period of four months. Till a final decision on Allowances is taken based on the recommendations of this Committee, all Allowances will continue to be paid at existing rates in existing pay structure, as if the pay had not been revised with effect from 1 st  day of January, 2016.

8. The recommendations of the Commission relating to interest bearing Advances as well as 
interest free Advances have been accepted with the exception that interest free Advances for Medical Treatment, Travelling Allowance for family of deceased, Travelling Allowance on tour or transfer and Leave Travel Concession shall be retained.  

9. The recommendations of the Commission for increase in rates of monthly contribution
towards Central Government Employees Group Insurance Scheme (CGEGIS) for various categories of employees has not been accepted. The existing rates of monthly contribution shall continue. Department of Expenditure and Department of Financial Services will work out a customised group insurance scheme for Central Government employees.  

10. The Government has accepted the recommendations of the Commission on upgrading of
posts except for those specified at Annexure III. The recommendations on upgradation specified at Annexure III will be separately examined by Department of Personnel and Training for taking a comprehensive view in the matter.  

11. The Government has not accepted the recommendations of the Commission on downgrading of posts and normal replacement will be provided in such cases.  

12. While revising the pay of Doctors in respect of whom Non Practicing Allowance is
admissible and Railway employees in respect of whom Running Allowance is admissible, it will be ensured that the actual raise in pay at the time of initial fixation is about 14.29 percent as
recommended by the Commission.  

13. The pay of officers posted on deputation under Central Staffing Scheme will be protected and the difference in the pay will be given to them in the form of Personal Pay to be made effective from the date of notification.  

14. Recommendations not relating to pay, pension and allowances and other administrative issues specific to Departments/Cadres/Posts will be examined by the Ministries/Departments concerned as per the Allocation of Business Rules or Transaction of Business RulesUntil a decision is taken by the Government on administrative issues pertaining to (i) Non Functional Upgradation (NFU) presently admissible to the Indian Police Service/Indian Forest Service and Organised Group  ‘A’ Services, (ii) two years’ edge to Indian Administrative Service officers vis-a-vis other All India Services/Organised Group  ‘A’ Services in empanelment under Central Staffing Scheme, (iii) grant of two additional increments at Senior Time Scale, Junior Administrative Grade and Selection Grade to Indian Police Service and Indian Forest Service at par with Indian Administrative Service and Indian Foreign Service (iv) a uniform retirement age for all ranks in Central Armed Police Forces, where the Commission could not arrive at a consensus, status quo shall be maintained.  

15. A Committee of Secretaries comprising Secretaries of Departments of Personnel and
Training, Financial Services and Pension and Pensioners’ Welfare will be set up to suggest measures for streamlining the implementation of the National Pension System (NPS).  

16. Anomalies Committees will be set up by Department of Personnel and Training to examine
individual, post-specific and cadre-specific anomalies arising out of implementation of the
recommendations of the Commission. 

17. Regarding pay and related issues concerning All India Services, appropriate action will be
taken by Department of Personnel and Training to give effect to the decisions on these matters as may be applicable to them. 

18. The Government of India wishes to place on record their appreciation of the work done by

the Commission. 

                                                                           ORDER

 Ordered that this Resolution be published in the Gazette of India, Extraordinary.

 Ordered that a copy of this Resolution be communicated to the Ministries/Departments of the 
Government of India, State Governments, Administrations of Union Territories and all other
concerned. 


                                                                                                      R.K. CHATURVEDI, Jt. Secy. 

ANNEXURE I -  PAY MATRIX.

ANNEXURE II

 Statement showing the recommendations of the Seventh Central Pay Commission on Pay
relating to Civilian employees in Group ‘A’, ‘B’ and ‘C’ and personnel of All India Services and
Government’s decisions thereon.   

I. Pay Fixation in revised Pay Structure:

Sl. No.    Recommendation of the Seventh Central Pay                            Decision of the Government 
               Commission


1.           Minimum pay in government with effect from                           Accepted  
              01.01.2016 at Rs. 18000 per month (Para 4.2.13
              of the Report) 

2.           Pay Matrix comprising two dimensions having                          Accepted      
              horizontal range in which each level corresponds
              to a “functional role in the hierarchy” with
              number assigned 1, 2, 3 and so on till 18 and
             “vertical range” denoting “pay progression”.
             These indicate the steps of annual financial
             progression (Para 5.1.21 of the Report) 

3.         On recruitment, an employee joins at a particular                        Accepted  
             level and progresses within the level as per the
             vertical range. The movement is usually on an
             annual basis, based on annual increments till the
             time of their next promotion. (Para 5.1.22 of the
             Report) 

4.          The fitment factor of 2.57 to be applied                                       Accepted  
             uniformly for all employees. (Para 5.1.27 of the
             Report) 


II. Annual Increments:

Sl.No.   Recommendation of the Seventh Central Pay                     Decision of the Government  
             Commission

1.        The manner of drawal of annual increment to be                            Accepted 
           as laid down in Para 5.1.53 of the Report. 

III. Modified Assured Career Progression Scheme:

Sl. No. Recommendation of the Seventh Central Pay                      Decision of the Government   
            Commission

1. MACP will continue to be administered at 10, 20                                  Accepted  
and 30 years as before. In the new Pay Matrix,
the employee will move to immediate next Level
in hierarchy. Fixation of pay will follow the same
principle as that for a regular promotion in the
Pay Matrix. MACPS will continue to be
applicable to all employees up to Higher
Administrative Grade (HAG) level except
members of Organised Group ‘A’ Services. (Para
5.1.44 of the Report) 

2. Benchmark for performance appraisal for                                            Accepted       
promotion and financial ungrdation under
MACPS to be enhanced from “Good” to “Very
Good”. (Para 5.1.45 of the Report) 

3. Withholding of annual increments in the case of                                  Accepted 
those employees who are not able to meet the
benchmark either for MACP or a regular
promotion within the first 20 years of their
service. (Para 5.1.46 of the Report) 

V. Dearness Allowance: 

Sl. No.      Recommendation of the Seventh Central                        Decision of the Government
                Pay Commission

1. Existing formula and methodology for                              
calculating Dearness Allowance to  continue
(Para 8.17.37 of the Report)                                                 Accepted. The reference base for
                                                                                              calculation of Dearness Allowance after
                                                                                              coming into force of the revised Pay
                                                                                              structure shall undergo change
                                                                                              accordingly and will be linked to the
                                                                                              average index as on 01.01.2016.

NO REFERENCE FOR UPGRADED PRE REVISED SCALE TO POSTAL EMPLOYEES.

Monday, July 25, 2016

ஸ்கூட்டர் அட்வான்ஸ் ----நமது கோட்டத்தில் 5 பேருக்கு கிடைத்துள்ளது. 

 கம்ப்யூட்டர் முன்பணம் -நமது கோட்டத்தில் மூன்று தோழர்களுக்கு கிடைத்துள்ளது 



கேடர் சீரமைப்பு --ஒடிசா மாநிலத்தில் அமுல் --தமிழகத்தில் பதவிகளை அடையாளங்காட்டும் பணி மண்டல அலுவலகத்தில் மும்முரம் 

Cadre Restructuring of Group-C employees in Department of Posts - Odisha Circle


Cadre Restructuring of Group-C employees in Department of Posts - OdishaCircle










உறங்கவிடாத மத்திய அரசு!


கடை, வணிக நிறுவன ஊழியர்களின் சேம நலனுக்கு சட்டம் இயற்ற மத்திய அரசு சிந்திக்கவில்லை

திரையரங்குகள், ஓட்டல்கள், வங்கிகள், அலுவலகங்கள் 24 மணி நேரமும் திறந்திருப்பதற்கும், இயங்குவதற்கும் புதிய சட்டம் கொண்டுவர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. மத்திய அரசு திடீரென்று கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களின் பக்கம் தனது பார்வையைத் திருப்ப என்ன காரணம்? சுதந்திரமடைந்த இந்த 69 ஆண்டுகளில் கடை மற்றும் வணிக நிறுவனங்களுக்கென்று சட்டங்களே இல்லையா? யாருடைய விருப்பங்களை நிறைவேற்ற இப்புதிய நடவடிக்கை?

தொழிலாளர் சட்டங்கள்

சுதந்திரத்துக்கு முந்தைய காலனியரசு தொழிலாளர்களுக்கான எவ்வித உருப்படியான சட்டங்களையும் நிறைவேற்றவில்லை. தொழிலாளர் மற்றும் தொழிற்சங்கங்களின் ஆதரவைப் பெறுவதற்காக, சுதந்திரம் கிட்டியவுடன் தொழிலாளர்களைப் பாதுகாக்கும் சட்டங்களை இயற்றுவோம் என்று சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சி அறிவித்தது. இரண்டாம் உலகப்போர் முடிவுற்றவுடன் அமைக்கப்பட்ட இடைக்கால அரசு (1946) பம்பாய் மாகாணத் தொழிலாளர் உறவுச் சட்டத்தை இயற்றியது. இன்றைக்கும் அச்சட்டம் மகாராஷ்டிரா மற்றும் குஜராத் மாநிலங்களில் நடைமுறையில் உள்ளது. 1947-ல் தொழிற்தகராறு சட்டம் அகில இந்திய அளவில் கொண்டுவரப்பட்டது.

1948-ல்தான் தொழிற்சாலைகள் சட்டமியற்றப்பட்டது. அதன்கீழ் தொழிலாளர்களின் பாதுகாப்பு, உடல்நலன், சேமநலன் பற்றிய பிரிவுகள் புகுத்தப்பட்டன. ஒரு நாள் கட்டாய ஓய்வுடன் வாரத்தில் 48 மணி நேரத்துக்கு மிகைப்பட்டு ஊழியர்களை வேலை வாங்கக் கூடாது என்று கூறப்பட்டது. நிர்ணயித்த வேலை நேரத்துக்கு மேல் பணி செய்ய நேர்ந்தால் அதற்கு இரட்டிப்பு ஊதியமும், மாற்று விடுமுறையும் வழங்கச் சட்டம் வழிவகுத்தது. ஈட்டிய விடுப்பும், ஈட்டிய விடுப்புக்கான ஊதியமும் வழங்க நிர்ப்பந்தித்தது. பெண் ஊழியர்களை இரவு ஷிப்டில் அமர்த்துவதையும் தடை செய்தது.

இச்சட்டம் உற்பத்தியில் ஈடுபடும் தொழிற்சாலை களுக்கும், அதிலும் மின்சாரத்துடன் உற்பத்தி செய்யும் ஆலைகளில் பத்துத் தொழிலாளர்களுக்கு மேல் பணியாற்றினால் மட்டுமே பொருந்தக் கூடியதாகவிருந்தது. ஆயிரக்கணக்கான கடைகள், வணிக நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களின் சேமநலனைக் கருதும் சட்டமியற்றுவதைப் பற்றி மத்திய அரசு சிந்திக்கவில்லை.

வழிகாட்டிய தமிழ்நாடு

சுதந்திரம் கிடைப்பதற்கு முன் வங்கிகளும், காப்பீட்டு நிறுவனங்களும் தனியார் வசமே இருந்தன. அவற்றில் பணிபுரிந்த ஊழியர்களின் நலனைப் பாதுகாக்க உருவாக்கப்பட்டதே ”வணிக நிறுவனங்கள் ஊழியர் சங்கம்”(கமர்ஷியல் எம்ப்ளாயீஸ் அசோசியேஷன்). அன்றைக்கு தலைசிறந்த பாரிஸ்டராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்காடிய வி.ஜி.ராவ் அதன் தலைவர். அவர் சட்ட மேலவை உறுப்பினராக இருந்த காரணத்தினால் கடை மற்றும் வணிக நிறுவனங்களின் ஊழியர்களின் நலனைப் பாதுகாப்பதற்காக ஒரு சட்ட வடிவை தயார் செய்து, சட்டமன்றம் அச்சட்டத்தை நிறைவேற்ற உதவினார். இந்தியாவிலேயே முதன்முறை யாக உருவானதுதான் 1947-ம் வருடத்திய மதராஸ்(தமிழ்நாடு) கடை மற்றும் வணிக நிறுவனங்கள் சட்டம்.

இப்புதிய சட்டம், ஏறத்தாழ தொழிற்சாலைச் சட்டம் போலவே தினசரி வேலைநேரம், கடைத் திறப்பு மற்றும் மூடும் நேரங்கள், மிகுதி நேர வேலைக்கு இரட்டிப்புச் சம்பளம், கட்டாய வார விடுமுறை, பெண் ஊழியர்களுக்கு இரவு ஷிப்டு தடை போன்றவற்றை உறுதிசெய்தது. குழந்தைத் தொழிலாளர்கள் அமர்த்துவதைத் தடை செய்ததுடன் நிறுவனங்களில் தூய்மை, காற்றுவரத்து, வெளிச்சம் இவற்றை உறுதிப்படுத்துவதற்கான பிரிவுகளையும் உள்ளடக்கியிருந்தது. தொழிற்சாலைகளிலிருந்தது போல் கடைகளிலும், வர்த்தக நிறுவனங்களிலும் வலுவான தொழிற்சங்கங்கள் இருக்க மாட்டா என்ற புரிதலினால் வணிக நிறுவனங்களில் வேலைபார்க்கும் ஊழியர்களுக்குப் பணிப் பாதுகாப்பு வழங்கும் விதமாக எவ்வித முகாந்திரமுமின்றி தொழிலாளர்களைப் பணிநீக்கம் செய்வதைத் தடைசெய்தது. வேலைநீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்கள் சங்க ஆதரவின்றியே பணி நீக்கத்தை எதிர்த்துத் தொழிலாளர் அலுவலர்களிடம் மேல்முறையீடுகள் செய்யவும் சட்டம் வழிவகுத்தது. தமிழ்நாட்டில் இயற்றப்பட்ட சட்டத்தை நகலெடுத்துப் பல மாநில அரசுகளும் அதேபோன்ற சட்டத்தை இயற்றின. தனியார் வங்கிகள் மற்றும் காப்பீட்டு நிறுவனங்களில் வலுவான தொழிற்சங்கங்கள் ஏற்படவும் இச்சட்டம் உதவியது.

கடை, வணிக நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர் களின் பாதுகாப்புக்காக அனைத்து மாநிலங்களிலும் தனிச்சட்டங்கள் இருக்கையில் மத்திய அரசு ஏன் புதிய சட்டத்தை உருவாக்க வேண்டும்? மாநில அரசுகளின் அதிகாரங்களை பறிப்பதுடன் பன்னாட்டு நிறுவனங்க ளுக்குச் சிவப்பு கம்பளம் விரிக்கும் செயலிது.
பெங்களுரு மென்பொருள் நிறுவனமொன்றில் வேலை பார்த்த ஒரு பெண் இரவு ஷிப்ட் முடிந்தவுடன் வீடு செல்ல நிறுவனம் அமர்த்திய வாடகைக் காரில் பயணித்தபோது, வாகன ஓட்டுநர் அவரிடம் தவறாக நடக்க முற்பட்டார். இதுதொடர்பாக கர்நாடக அரசு அந்நிறுவனத்தின் மீது வழக்கு தொடர்ந்தது. இரவு ஷிப்டில் எப்படிப் பெண்களை நிறுவனம் அமர்த்தியது என்று குற்றம்சாட்டியது. அதற்கு ஆதரவாக, கர்நாடகா கடை மற்றும் வணிக நிறுவனங்களின் சட்டத்தின் பிரிவுகள் சுட்டிக்காட்டப்பட்டன. இதையடுத்து, அந்நிறுவனம் மேல்முறையீடு செய்துள்ளது. சமீபத்தில் சென்னையில் உள்ள தொழிலாளர் நீதிமன்றம் மென்பொருள் பொறியாளர்களும் ஊழியர்களே என்று தீர்ப்பளித்துள்ளது. இவ்வாறாக இச்சட்டம் இந்தியாவில் செயல்படும் மென்பொருள் நிறுவனங்களின் சுதந்திரமான சுரண்டலுக்குத் தடையாக உள்ளது. இதை மாற்ற மத்திய அரசு விழைகிறது.

பெரு நிறுவனங்களின் பேராசை

அம்பானி சகோதரர்களுக்கு ஒரு பக்கத்தில் பெட்ரோல் பொருட்களின் சந்தையில் பிடிப்பென்றால் மறு பக்கத்தில் சில்லறை விற்பனையிலுள்ள உப்பு, புளி, மிளகாய் வியாபாரத்திலும் லாபம் பார்க்க முயல்கின்றனர். மால்கள், திரைப்பட அரங்குகள், உணவு விடுதிகள், மதுபானக்கடைகள் நகர்ப்புறங்களில் பெருகிவருகின்றன. இவற்றைக் கட்டுப்படுத்தவும், அங்குள்ள ஊழியர்களின் நலன்களைப் பேணவும் தொழிலாளர் சட்டங்கள் பல உள்ளன. இவை மால்கள் நடத்தும் நிறுவனங்களைப் பாதிக்கின்றன.

எவ்வித சட்டப் பின்னணியோ நாடாளுமன்ற விவாதங் களோ இன்றி தாராளமயமாக்கலை நரசிம்மராவ் தொட்டு நரேந்திர மோடி வரை தடையின்றி அமல் படுத்திவருகின்றனர். அதற்கு ஆதரவளிக்க நீதித்துறையும் பின்தங்கவில்லை. 2005-ல் உச்ச நீதிமன்றம் அளித்த ஒரு தீர்ப்பில் இந்தியாவில் தாராளமயமாக்கல் வேரூன்றிவிட்டதாகச் சொல்லி, அதற்கு உதாரணமாகப் பெரு நகரங்களிலுள்ள விமான நிலையங்களில் மதுபானக்கடைகள் தொடங்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டி யுள்ளது. பெண்கள் மதுபானக்கடைகளில் மாலை நேரத்திற்குப் பிறகு வேலை செய்யக்கூடாது என்று டெல்லி அரசு போட்ட உத்தரவை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது. சென்னை உயர் நீதிமன்றம் 2002-ல் இரவு ஷிப்டில் பெண்களுக்கான தடை விதித்த தொழிற்சாலை சட்டத்தின் 66-வது பிரிவை ரத்து செய்தது.

மென்பொருள் நிறுவனங்கள், கால்சென்டர்கள், மால்கள், திரையரங்குகள், உணவு விடுதிகள், மதுபானக் கடைகள் இவற்றை ஓரளவுக்கு ஒழுங்குபடுத்திவரும் மாநில அரசுகளின் சட்டங்களைத் தவிர்க்கும் விதமாகத்தான் மத்திய அரசு புதிய கடை, வணிக நிறுவனங்களை ஒழுங்குபடுத்தும் சட்டத்தை இயற்ற முற்பட்டுள்ளது. தடையின்றி, காலவரையற்ற வணிகம், இரவு ஷிப்டில் பெண்கள் இப்படிப் பல சலுகைகளையளித்து மோடி அரசு பன்னாட்டு நிறுவனங்களுக்குப் பச்சைக்கொடி காட்டியுள்ளது.

நூறாண்டுகளுக்கு முன் சிகாகோ நகரத்தில் போர்க்கொடி தூக்கி, எட்டு மணிநேர வேலைக்கு வழிவகுத்த சட்டத் தடைகளையெல்லாம் ஒரு நொடியில் தூக்கியெறிய மத்திய அரசு தயாராகிவிட்டது. மேலும் பெண்கள் இரவு ஷிப்டில் பணிபுரியத் தடைவிதிக்கும் சட்டங்கள் சர்வதேசத் தொழிலாளர் நிறுவனத்தின் (ஐ.எல்.ஓ) தீர்மானங்கள் அடிப்படையில் கொண்டுவரப்பட்டவையே. பகல் நேரத்திலேயே பொது இடங்களில் பெண்கள் மீதான வன்முறையைத் தடுக்க முடியாத கையாலாகாத அரசுகள், இரவுப் பணிபுரியும் பெண்களை எப்படிப் பாதுகாக்கும் என்பது புரியவில்லை.

இரவெல்லாம் கடைகளையும், திரையரங்குகளையும், உணவு விடுதிகளையும், மதுபானக் கடைகளையும் திறந்துவைக்க உதவும் மத்திய அரசின் சட்ட வடிவு, மக்களை உறங்கவிடாது.உறங்கும் உரிமையும் அரசியல் சட்டம் கூறும் அடிப்படை உரிமைகளில் ஒன்றென உச்ச நீதிமன்றம் ஒரு தீர்ப்பில் குறிப்பிட்டிருப்பது இனி வரும் காலங்களில் நகைமுரணுக்குள்ளாகும்.

கே.சந்துரு, நீதிபதி (ஓய்வு)
சென்னை உயர்நீதிமன்றம்.