...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Wednesday, April 27, 2022

 அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே ! வணக்கம் .

    COULD NOT GET RESPONSE FROM SERVER என்ன நமது அன்றாட மன்றாட்டு வழிபாடா ? RUNTIME ERROR  என்பது நமக்கென்ன மூல மந்திரமா ?SERVICE  NOT ACCESSIABLE என்ன நமது வேத வசனமா ?   நமது அன்றாட சிலுவை பாடுகளுக்கு நமது மாநில சங்கம் கொடுத்துள்ள கடிதத்தை பாரீர் !பாரீர் !

                     நமது மாநில சங்கத்தின் சார்பாக நெட்ஒர்க் சம்பந்தமாக கடந்த 12.04.2022   CPMG அவர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தை நீங்களும் பார்த்திருப்பீர்கள் என நினைக்கின்றேன் ...ஒரு சராசரி அஞ்சல் எழுத்தராக ஒரு C அல்லது B கிளாஸ் அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியரின் ஆதங்கத்தை அப்படியே படம்பிடித்து காட்டிருந்தது

 .இதுபோன்ற ஊழியர்கள் நலன் சார்ந்த விஷயங்களை இவ்வளவு எதார்த்தமாக நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்ற திறமையும் பெருமையும் நமது NFPE பேரியக்கத்திற்கு மட்டுமே உண்டு என்பதில் நாமும் பெருமைகொள்வோம் ...

SAP BACKOFFICE IPVS ,MCCAMISH FINACLE ,IPPB மற்றும் CSCவரை நாம் அன்றாடம் சந்திக்கும் பிரச்சினைகள் ,நெட்ஒர்க் குறைபாடுகளினால் ஏற்படும் DOUBLE ENTRY,தேவையில்லாமல் REVERSAL என அனைத்து பகுதிகளையும் உள்ளடக்கிய முழுமையான நமது உள்ளக்கிடக்கை அப்படியே படம் பிடித்து காட்டியிருக்கிறது 

SAP மூலமாக கொடுக்கப்படும் CASH REMITTANCE ,கிளை அஞ்சலகங்களுக்கு பணம் அனுப்புவதில் TCB க்கு REFELCT ஆக மறுக்கும் பிரச்சினைகள் ,காலை முதலே DPMS யில் ஏற்படும் SLOWNESS EMO பிரின்டிங்யில் ஏற்படும் சிக்கல்கள் POS CASH பிரச்சினை ,,MCCAMISH யில் ஏற்படும் DOUBLE ENTRY அதேபோல் FINACLE  ,அதனை தொடர்ந்து IPPB ரிப்போர்ட் தாமதம் CSCயில் ஏற்படும் காலதாமதம் என அனைத்து பிரச்சினைகளையும் மாநில நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டுசென்றது அருமை .

அதிலும் குறிப்பாக ஒவ்வொருமுறையும் FINACLE  யில் லாகின் ஆவது என்பது ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்லும் பேரானந்தத்திற்கு சமம் என குறிப்பிட்டிருப்பது மிகவும் சரியே ..ஒரு சராசரி ஊழியரின் அனுதின முனங்கல்களை அப்படியே படம்பிடித்துக்காட்டிய மாநில சங்கத்திற்கு வாழ்த்துக்கள் .....நன்றி 

தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை 

Tuesday, April 26, 2022

 அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !

                                  மாற்றங்களை வரவேற்போம் ! வர்த்தக ரீதியான போட்டிகளை எதிர்கொள்வோம் !

அஞ்சல் சேமிப்பு பிரிவின் மற்றுமொரு பரிணாம வளர்ச்சி தான் நமது POSB யில் இருந்து வாடிக்கையாளர்களின் பணத்தை இதர வங்கிகளுக்கும் ,பிற வங்கிகளில் இருந்து நமது POSB கணக்கிற்கும் பணத்தை  நமது அஞ்சலக வேலைநேரத்திற்குள்  மாற்றிக்கொள்ளலாம் .இதற்காக NEFT மற்றும் RTGS வசதிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன .NEFT என்பது PERIODICAL TRANSFER  எனஒரு  கால இடைவெளிக்குள் பணம் பரிமாற்றம் செய்யப்படும் .RTGS என்பது உடனே பணம் பரிமாற்றம் செய்யப்பட்டுவிடும் ..தற்சமயம் நமது துறையில் NEFT மட்டுமே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது .சில தொழிற்நுட்ப காரணங்களால் RTGS  வசதி இப்பொழுது இல்லை .குறைந்தபட்சம் ரூபாய் 1 முதல் 15 லட்சம் வரை பண பரிமாற்றம் செய்யலாம் .NET பாங்கிங் மூலமாக நாளொன்றுக்கு  5  TRANSACTIONS ஒவ்வொரு முறையும் அதிகபட்சம் ரூபாய் 2 லட்சம் என 10 லட்சம் வரை பண பரிமாற்றம்  செய்யலாம் .நமது அஞ்சலக IFSCCODE  IPOS00000DOP  ஆகும் .இதற்காக 16 இலக்கம் கொண்ட UTR எண் வழங்கப்படும் .இது FINACLE ,INTERNET BANKING மற்றும் MOBILEBANKING மூலமாக செயல்படுத்தப்படும் .இதற்காக தனி FINACLE (URL ) IPPB போல பயன்படுத்தப்படும் 

                    முன்னதாக நெட் பாங்கிங் வசதி மட்டுமே நம்மிடம் இருந்தது .அதுவும் நமது POSB  யில் இருந்து நமது SSA-- RD--TD உள்ளிட்ட கணக்குகள் சம்பந்தமான பரிவர்த்தனைகள் மட்டுமே செய்ய முடிந்தது .அதனை தொடர்ந்து ECS முறை அறிமுகப்படுத்தப்பட்டது .அதிலும் குறிப்பிட்ட சேவைகளுக்கு மட்டுமே வாடிக்கையாளர்களின் வங்கி கணக்கிற்கு மாற்றம் செய்யும் வசதி இருந்தது .

                 தற்சமயம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள NEFT மற்றும் RTGS வசதிகள்  நமது அஞ்சல் சேமிப்பு மற்றுமொரு மைல் கல்லை எட்டும் என்பதில் ஐயமில்லை .ஆனால் இதுபோன்ற புது புது சேவைகளுக்கு ஊழியர்களுக்கு முறையான பயிற்சிகள் கொடுப்பதில்லை .நிர்வாகம் வழக்கம் போல் SOP எனும் STANDARD OPERTTION  PROCEDURE  விளக்க கடிதத்தை பக்கம் பக்கமாக அனுப்பிவிட்டு இருந்து விடுகிறது ..

                  நமது துறையின் புதுப்புது திட்டங்கள் பொதுமக்களிடம் சென்றடைகிறதோ இல்லையோ சம்பந்தப்பட்ட ஊழியர்களுக்கு முழுமையாக சென்றடைய வேண்டும் ..இல்லையென்றால் இதுவும் காகித திட்டங்களாக ஒருசில இடங்களோடு நின்றுவிடும் ..ஆனாலும் இதுவரை கொண்டுவரப்பட்ட மாற்றங்கள் எல்லாமே எந்தவித பயிற்சிகள் இல்லாமல் நமது தோழர்களின் தனிப்பட்ட ஆர்வத்தால் ,முயற்சியால் முழுமையாயாக செயல்படுத்தப்பட்டிருப்பது நமக்கு பெருமையே !

தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை 

      

Monday, April 25, 2022

 அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !

                                  மாற்றங்களை வரவேற்போம் ! வர்த்தக ரீதியான போட்டிகளை எதிர்கொள்வோம் !

அஞ்சல் சேமிப்பு பிரிவின் மற்றுமொரு பரிணாம வளர்ச்சி தான் நமது POSB யில் இருந்து வாடிக்கையாளர்களின் பணத்தை இதர வங்கிகளுக்கும் ,பிற வங்கிகளில் இருந்து நமது POSB கணக்கிற்கும் பணத்தை  நமது அஞ்சலக வேலைநேரத்திற்குள்  மாற்றிக்கொள்ளலாம் .இதற்காக NEFT மற்றும் RTGS வசதிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன .NEFT என்பது PERIODICAL TRANSFER  எனஒரு  கால இடைவெளிக்குள் பணம் பரிமாற்றம் செய்யப்படும் .RTGS என்பது உடனே பணம் பரிமாற்றம் செய்யப்பட்டுவிடும் ..தற்சமயம் நமது துறையில் NEFT மட்டுமே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது .சில தொழிற்நுட்ப காரணங்களால் RTGS  வசதி இப்பொழுது இல்லை .குறைந்தபட்சம் ரூபாய் 1 முதல் 15 லட்சம் வரை பண பரிமாற்றம் செய்யலாம் .NET பாங்கிங் மூலமாக நாளொன்றுக்கு  5  TRANSACTIONS ஒவ்வொரு முறையும் அதிகபட்சம் ரூபாய் 2 லட்சம் என 10 லட்சம் வரை பண பரிமாற்றம்  செய்யலாம் .நமது அஞ்சலக IFSCCODE  IPOS00000DOP  ஆகும் .இதற்காக 16 இலக்கம் கொண்ட UTR எண் வழங்கப்படும் .இது FINACLE ,INTERNET BANKING மற்றும் MOBILEBANKING மூலமாக செயல்படுத்தப்படும் .இதற்காக தனி FINACLE (URL ) IPPB போல பயன்படுத்தப்படும் 

                    முன்னதாக நெட் பாங்கிங் வசதி மட்டுமே நம்மிடம் இருந்தது .அதுவும் நமது POSB  யில் இருந்து நமது SSA-- RD--TD உள்ளிட்ட கணக்குகள் சம்பந்தமான பரிவர்த்தனைகள் மட்டுமே செய்ய முடிந்தது .அதனை தொடர்ந்து ECS முறை அறிமுகப்படுத்தப்பட்டது .அதிலும் குறிப்பிட்ட சேவைகளுக்கு மட்டுமே வாடிக்கையாளர்களின் வங்கி கணக்கிற்கு மாற்றம் செய்யும் வசதி இருந்தது .

                 தற்சமயம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள NEFT மற்றும் RTGS வசதிகள்  நமது அஞ்சல் சேமிப்பு மற்றுமொரு மைல் கல்லை எட்டும் என்பதில் ஐயமில்லை .ஆனால் இதுபோன்ற புது புது சேவைகளுக்கு ஊழியர்களுக்கு முறையான பயிற்சிகள் கொடுப்பதில்லை .நிர்வாகம் வழக்கம் போல் SOP எனும் STANDARD OPERTTION  PROCEDURE  விளக்க கடிதத்தை பக்கம் பக்கமாக அனுப்பிவிட்டு இருந்து விடுகிறது ..

                  நமது துறையின் புதுப்புது திட்டங்கள் பொதுமக்களிடம் சென்றடைகிறதோ இல்லையோ சம்பந்தப்பட்ட ஊழியர்களுக்கு முழுமையாக சென்றடைய வேண்டும் ..இல்லையென்றால் இதுவும் காகித திட்டங்களாக ஒருசில இடங்களோடு நின்றுவிடும் ..ஆனாலும் இதுவரை கொண்டுவரப்பட்ட மாற்றங்கள் எல்லாமே எந்தவித பயிற்சிகள் இல்லாமல் நமது தோழர்களின் தனிப்பட்ட ஆர்வத்தால் ,முயற்சியால் முழுமையாயாக செயல்படுத்தப்பட்டிருப்பது நமக்கு பெருமையே !

தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை 

      

Monday, April 11, 2022

அன்பார்ந்த தோழர்களே !தோழியர்களே !வணக்கம் 

              நமது துறையில் உள்ள  VACANCY  POSITION ( PA ,SA ,MTS,POSTMAN,MAIL GUARD ) குறித்த அறிக்கையை அனுப்புவதில்  மேலும் சில தகவல்களை சேர்த்து வழங்கிட மாநில நிர்வாகத்திற்கு 09.04.2022அன்று இயக்குனரகம் கேட்டுள்ளது .

அதன்படி முடிவுகள் அறிவிக்கப்பட்ட பதவிகள் LDCE,SOPRTS QUOTA ,COMPOSINATE APPOINTMENT இவைகளை நிரப்பட்ட இடங்களாக எ டுத்துக்கொள்ளவேண்டும் .அதேபோல் OPEN MARKET கணக்கெடுக்கும் போது நிரப்பப்படாத நமது DEPARTMENT UNFILLED VACANCY அனைத்தும் OPEN MARKET க்கு சென்றுவிடும் ..

GDS பதவிகளை நிரப்பிட அதிகாரபூர்வ அறிவிப்பு 02.02.2022 அன்று வெள்ளியிடப்படும் .விண்ணப்பங்கள் 02.05.2022 முதல் 05.06.2022  வரை ஆன்லைன் மூலம் ஏற்றுக்கொள்ளப்படும் .முடிவுகள் 10.06.2022  முதல் வெளியிடப்படும் 

நேற்றைய நன்கொடையாளர்கள் திருமதி MP.விஜயா( RETD)தோழர் GS .கங்காதரன் தபால்காரர் பாளை 

அனைவருக்கும் நன்றி --தோழமை வாழ்த்துக்களுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை 

Saturday, April 9, 2022

 அன்பார்ந்த தோழர்களே !தோழியர்களே !வணக்கம் .

                                  அஞ்சல் மூன்றின்  அகிலஇந்திய மாநாட்டிற்கு (16.04.2022 முதல் 25.04.2022) வரை பஞ்சாப் மாநிலம் அனந்தசாஹிபுர் செல்லவிருப்பதால் இந்த ஆண்டின் புதிய உறுப்பினர்களின் விண்ணப்ப படிவங்களை (அஞ்சல் மூன்று )கோட்ட நிர்வாகத்திடம் வழங்கப்பட்டுள்ளது ...புதிய உறுப்பினர்கள் அனைவரையும் NELLAI --NFPE வாழ்த்தி வரவேற்கிறது 

                                  அஞ்சல் நான்கின் மாநில செயற்குழு கூட்டம் 25.04.2022மற்றும் 26.04.2022  ஆகிய இருநாட்கள் கரூர் மாநகரில் நடைபெறுகிறது ..இந்த செயற்குழுவில் PMA   செயல்பாட்டிற்கு தபால்காரர்களை சொந்த போனை பயன்படுத்த நிர்பந்திக்கும் நிர்வாக செயல்பாட்டை தடுத்திட நமது கோட்டத்தின் சார்பாக தீர்மானம் முன்மொழியப்படுகிறது ...மேலும் திருநெல்வேலி PSDNFPE -P4 கிளையை புதுப்பித்து தரவும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது 

                      அஞ்சல் மூன்றின் மாநில மாநாடு --நேற்றைய நன்கொடையாளர் திருமதி .பரிதிமாலினி அவர்களுக்கு நன்றி ..இதுவரை 54பேர் நன்கொடை வழங்கியுள்ளார்கள் ...மீதமுள்ளவர்கள் விரைந்து நன்கொடைகளை வழங்கிட கேட்டுக்கொள்கிறோம் ..

நன்றி தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் --E.அருண்குமார் கோட்ட செயலர்கள் நெல்லை 

Friday, April 8, 2022

 அன்பார்ந்த தோழர்களே !தோழியர்களே ! வணக்கம் .

                                 நேற்று நடைபெற்ற மாதாந்திர பேட்டியில் நாம் ஏற்கனவே கொடுக்கப்பட்ட சப்ஜெக்ட்ஸ் மீதான விவாதங்கள் சுமூகமாக நடைபெற்றது .குறிப்பாக காலியாகவுள்ள ATR மற்றும் TR பதவிகள் உடனே CALL FOR செய்து நிரப்பப்படும் .நீண்ட நாட்களாக காலியாகவுள்ள அக்கௌன்டன்ட் திருநெல்வேலி HOமிக விரைவில் நிரப்பப்படும் .MMSஊழியர்களுக்கான TA BILL பென்டிங் இருப்பதால் இனி மாதந்தோறும் ADVANCE OF TA  அவர்களின் விண்ணப்பத்தின் அடிப்படையில் வழங்கப்படும் .தலைமை அஞ்சலகங்களுக்கு HEAVY WITHDRAWAL MEMO  PSD மூலமாக வழங்க ஏற்பாடு செய்யப்படும் .HEAVY  WITHDRAWALVERIFICATION அனுப்ப எந்தெந்த B கிளாஸ் அலுவலகங்களில் SINGLE OPERATOR பணி புரிகிறார்களோ அதன் விவரங்கள் வாராந்திர அடிப்படையில் மூன்று தலைமை அஞ்சலகங்களுக்கும் அனுப்பப்படும் .வள்ளியூர் மெயில் பிரைவேட் MMSஒப்புதல் அளிக்கப்பட்டும் விரைவில் அதற்கான E.கான்ட்ராக்ட் முடிக்கப்பட்டு அமுல்படுத்தப்படும் ..என்பன விவாதிக்கப்பட்டன .

அதன்பிறகு நடைபெற்ற விவாதத்தில் LSG  இடமாறுதலில் கோட்ட அலுவலகத்தின் மாறுபட்ட நடைமுறைகள் பின்பற்றப்படுவதை சுட்டிக்காட்டினோம் ..அதில் கொஞ்சம் கடுமையான வாக்குவாதங்களுக்கு பிறகு நாம் கொடுத்த கடிதத்திற்கு கோட்டநிர்வாகம் கொடுக்கும் பதிலின் அடிப்படையில் மணடல அளவில் இந்த பிரச்சினைகளை எடுக்க முடிவெடுக்கப்பட்டது .மேலும் நமது மூத்த தோழியர் ஒருவருக்கு மருத்துவ காரணங்களின் அடிப்படையில் இடமாறுதல் வழங்கிட ஒப்புக்கொள்ளப்பட்டது .மேலும் அம்பையில் இருந்து நெல்லை மற்றும் தபால்காரரில் இருந்து எழுத்தர் ஆன தோழர்களின் இடமாறுதல்கள் குறித்தும் பேசப்பட்டது .இறுதியாக GPF கான்ட்ரிபியூஷன் இந்தமாதம் கிரெடிட் ஆகாதா விஷயங்கள் ,இந்தமாதம் பணிஓய்வு பெறுகின்ற தோழியர் ஒருவருக்கு கொடுக்கப்பட்ட சோகாஷ் நோட்டீஸ் இவைகளை முடித்துவைத்திடவும் பேசப்பட்டது ........

நேற்றைய நமது நன்கொடையாளர்கள் தோழர் R.மகாராஜன் VS .கிருஷ்ணன் ஆசை தம்பி தோழியர்கள் பாப்பா ,ஹைருனிசா பேகம் மற்றும் அஞ்சல் நான்கின் நிர்வாகிகள் E.அருண்குமார் மகேஸ்வரன் நிஷாகர் அனைவருக்கும் எங்கள் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம் ...நன்கொடை அனுப்பிட POSB எண் 0072772744 இதில் கிரெடிட் செய்யவும் ..

நன்றி தோழமை வாழ்த்துக்களுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை 

Thursday, April 7, 2022

 அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே ! வணக்கம் 

                                             துணை அஞ்சலகங்களில் சேமிப்பு பிரிவில் பணிபுரியும் எழுத்தர்கள் மற்றும் SPM தோழர்கள் ஏப்ரல் மாதம் முதல் தங்கள் கீழுள்ள கிளைஅஞ்சலகங்களில் SB பரிவர்த்தனைக்கு வருகின்ற பாஸ்புக் அனைத்தையும் INTREST பதிந்திட வருகிறதா என்பதை கண்காணிக்கவேண்டும் .அதற்காக ஸ்பெஷல் ERROR BOOK ஒன்றையும் பராமரித்திட வேண்டும் .அவ்வாறு வட்டி பதிய வராத புத்தகங்கள் குறித்து ஜூலை மாத இறுதியில் உபகோட்ட அதிகாரிகளுக்கு அந்த பட்டியலை அனுப்பவேண்டும் ..நமது கோட்டத்தில் இரண்டு மூன்று வருடங்களுக்கு முன்னால்  இரண்டு கிளை அஞ்சலகங்களில் BPM மற்றும் ஆக்ட்டிங் BPM செய்திட்ட தவறுகளுக்கு இன்று துணை அஞ்சலக எழுத்தர்கள் போஸ்ட்மாஸ்டர் என தொடங்கி கோட்ட அலுவலக OA வரை விதி 16 யின் கீழ் குற்றப்பத்திரிக்கை வழங்கப்பட்டுள்து .ஆகவே நமது தோழர்கள் துணை அஞ்சலகங்களில் அன்றாடம் பராமரிக்கவேண்டிய பதிவேடுகளில் ஸ்பெஷல் ERROR BOOK  என்பதும் அவசியமான ஒன்று ...வேலைப்பளு ,B  கிளாஸ் அலுவலகத்தில் தனி ஆளாக வேலைப்பார்த்தேன் என்ற எந்த வாதமும் நிர்வாகத்தின் காதுகளுக்கோ ,கண்களுக்கோ எட்டப்போவதில்லை .....

                    நமது கோட்டத்தில் LSG ஊழியர்க்ளுக்கு APAR எழுதிட (PART 1&PART II ) சம்பந்தப்பட்ட ஊழியர்களுக்கே அனுப்பட்டுள்ளது .இதுகுறித்து இன்று நடைபெறும் மாதாந்திர பேட்டியில் விவாதித்து விளக்கம் தரப்படும் .

                     இன்றுமுதல் தபால்காரர் புதிய தோழர்களுக்கு மண்டல அளவில் மதுரை தலைமை அஞ்சலகத்தில் வைத்து IN HOUSING TRAINING ஒரு வாரத்திற்கு நடைபெறுகிறது .நமது தோழியர்கள் தங்குவதற்கு வசதியாக லேடீஸ் ஹாஸ்டெல் உள்ளிட்ட பல தகவல்களை தந்துதவிய மதுரை கோட்ட நிர்வாகிகளுக்கு எங்கள் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம் 

                  HSG II இடமாறுதல் நேற்று வந்துள்ளது .நமது தோழியர் திருமதி கிளாடிஸ் அவர்கள் APMSB திருநெல்வேலி HO  விற்கு வருகிறார்கள் .அவர்களுக்கு NELLAI -NFPE யின் சார்பாக வாழ்த்துக்கள் 

                     நேற்றைய நன்கொடையாளர் திரு .S.முருகன் LSG PA திருநெல்வேலி HO.

நன்றி .தோழமை வாழ்த்துக்களுடன் SK .ஜேக்கப் ராஜ் --E.அருண்குமார் கோட்ட செயலர்கள் நெல்லை 

Saturday, April 2, 2022

அன்பார்ந்த தோழர்களே !தோழியர்களே ! வணக்கம் 

GDS யில் இருந்து தபால் காரர்களாக தேர்ச்சி பெற்றுள்ள தோழர்கள் /தோழியர்களை நமது NELLAI -NFPE சார்பாக வாழ்த்துகிறோம் ..அவர்களுக்கு  IN HOUSING பயிற்சி மதுரையில் நடைபெறுகிறது .பல தோழியர்களின் வேண்டுகோளின் படி மதுரையில் தங்கிட அனைத்து உதவிகளையும் நமது மதுரை கோட்ட அஞ்சல் நான்கு நிர்வாகிகள்மற்றும் அஞ்சல் மூன்று நிர்வாகிகள்  செய்துதர தயாராக உள்ளனர் .மதுரை தலைமை அஞ்சலகம் அருகில் பெண்கள் விடுதி இருக்கிறது .ஏதேனும் உதவிகள் தேவைப்பட்டால் எங்களை அனுகவும் .உங்களது பயிற்சி தொடங்கும் நாள் முதல் APPOINTMENTஆனதாக எடுத்துக்கொள்ளப்படுவதால் உங்களுக்கு நாளொன்றுக்கு பயணப்படி  மற்றும் உணவு படி ரூபாய் 500உண்டு என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம் .

நாளை 07.04.2022 அன்று நமது SSP அவர்களுடனான மாதாந்திர பேட்டி நடைபெறுகிறது .சமீபத்தில் போடப்பட்ட LSG உத்தரவு மற்றும் நமது மூத்த ஊழியர்களுக்கு மறுக்கப்படும் இடமாறுதல் ,உள்ளிட்ட பிரச்சினைகள் விவாதிக்கப்படும் .

மதுரையில் நடைபெறும் அஞ்சல் மூன்றின் மாநில மாநாட்டிற்கு நமது உறுப்பினர்கள் தாராளமாக நன்கொடை வழங்கிவருகிறீர்கள் .குறிப்பிட்ட தொகை எதுவும் நிர்ணயிக்கவில்லை ..உங்கள் விருப்பம்போல் நன்கொடை கொடுக்கலாம் .நன்கொடை அனுப்புவோர் நமது சங்க கணக்கு எண் 0072772744 யில் செலுத்தவும் .நேற்றைய நன்கொடையாளர்கள் தோழர்கள் மாரிமுத்து -பாளை KG.குருசாமி ஓய்வூதியர் சங்க செயலர் ,மகபூப் ஜான் ஆட்சியர் அலுவலகம் மற்றும் தோழியர் வளர்மதி ..அனைவருக்கும் எங்கள் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம் 

நன்றி தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ்  -E.அருண குமார்  கோட்ட செயலர்கள் நெல்லை 


Friday, April 1, 2022

அன்பார்ந்த தோழர்களே !தோழியர்களே ! வணக்கம் 

பார்சல் பிரிவு நவீனமயமாக்கப்படுகிறது ---அமேசன் பிளிப்கார்ட் போன்று பார்சல்கள் இனி பேக்கிங் செய்யப்பட்டால் மட்டுமே அஞ்சலகங்களில் ஏற்றுக்கொள்ளப்படும் .பேக்கிங்க்கு தேவையான பொருட்கள் ,நாம் கோட்ட அலுவலகங்களில் முன் அனுமதி பெற்று வாங்கிக்கொள்ளவேண்டும் ..

01.04.2022  முதல் நமது துறையில் பார்சல் அனுப்புவதில் பெரிய மாற்றங்களை  அஞ்சல் வாரியம் அறிவித்துள்ளது .பார்சல் பேக்கிங் பாலிசி என்கின்ற புதிய பெயரில் ALL-INDIA POSTAL ROAD TRANSPORT NET WORK என்கின்ற வழிகாட்டுதலில் கவனம் மற்றும் பாதுகாப்பு என்கின்ற முழக்கத்தோடு பார்சல் பிரிவு செயல்படப்போகிறது .அதனடிப்படையில் பார்சல் பேக்கிங் யூனிட்ஸ் பெரிய அலுவலகங்களில் அறிமுகபடுத்தப்படவுள்ளது .நமது கோட்டத்தில் பாளையம்கோட்டை தலைமை அஞ்சலகம் பேக்கிங் அலுவலகமாக மாற்றப்பட்டுள்ளது 

*துணிகளினால் சுற்றப்பட்ட பார்சல் அனுமதிக்கப்படாது 

*500 கிராம் முதல் 35கிலோ வரையிலான (20 கிலோ பதிவு பார்சல் ,35கிலோ விரைவு பார்சல் } அனுப்புவதற்கான பெட்டிகள் நமது அஞ்சலகத்திலே கிடைக்கும் ..

*INTERNAL பேக்கிங் ,EXTERNAL பேக்கிங் மற்றும் SELFADHESIVE SPECIALHANDLING LABEL என மூன்று வகைப்படுத்தப்பட்ட பேக்கிங் இருக்கிறது 

*அதற்கான சர்வீஸ் சார்ஜ் ரூபாய் 10 வசூலிக்கப்படும் 

*பேக்கிங் மெட்டி ரியல்ஸ் -RETAIL POST பிரிவின் கீழ் கணக்கில் கொண்டுவரப்படும் .

இவ்வாறு நவீனமயமாக்கப்படும் பார்சல் பிரிவுகள் வெற்றிகரமாக செயல்படவேண்டும் .அஞ்சல் துறையின் மகத்துவமும் முக்கியத்துவமும் வாடிக்கையாளர்களுக்கு சென்றடையவேண்டும் என்கின்ற நோக்கத்தில் செயல்பட்டால் நாம் வரவேற்போம் .

நன்றி தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை