...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Friday, April 1, 2022

அன்பார்ந்த தோழர்களே !தோழியர்களே ! வணக்கம் 

பார்சல் பிரிவு நவீனமயமாக்கப்படுகிறது ---அமேசன் பிளிப்கார்ட் போன்று பார்சல்கள் இனி பேக்கிங் செய்யப்பட்டால் மட்டுமே அஞ்சலகங்களில் ஏற்றுக்கொள்ளப்படும் .பேக்கிங்க்கு தேவையான பொருட்கள் ,நாம் கோட்ட அலுவலகங்களில் முன் அனுமதி பெற்று வாங்கிக்கொள்ளவேண்டும் ..

01.04.2022  முதல் நமது துறையில் பார்சல் அனுப்புவதில் பெரிய மாற்றங்களை  அஞ்சல் வாரியம் அறிவித்துள்ளது .பார்சல் பேக்கிங் பாலிசி என்கின்ற புதிய பெயரில் ALL-INDIA POSTAL ROAD TRANSPORT NET WORK என்கின்ற வழிகாட்டுதலில் கவனம் மற்றும் பாதுகாப்பு என்கின்ற முழக்கத்தோடு பார்சல் பிரிவு செயல்படப்போகிறது .அதனடிப்படையில் பார்சல் பேக்கிங் யூனிட்ஸ் பெரிய அலுவலகங்களில் அறிமுகபடுத்தப்படவுள்ளது .நமது கோட்டத்தில் பாளையம்கோட்டை தலைமை அஞ்சலகம் பேக்கிங் அலுவலகமாக மாற்றப்பட்டுள்ளது 

*துணிகளினால் சுற்றப்பட்ட பார்சல் அனுமதிக்கப்படாது 

*500 கிராம் முதல் 35கிலோ வரையிலான (20 கிலோ பதிவு பார்சல் ,35கிலோ விரைவு பார்சல் } அனுப்புவதற்கான பெட்டிகள் நமது அஞ்சலகத்திலே கிடைக்கும் ..

*INTERNAL பேக்கிங் ,EXTERNAL பேக்கிங் மற்றும் SELFADHESIVE SPECIALHANDLING LABEL என மூன்று வகைப்படுத்தப்பட்ட பேக்கிங் இருக்கிறது 

*அதற்கான சர்வீஸ் சார்ஜ் ரூபாய் 10 வசூலிக்கப்படும் 

*பேக்கிங் மெட்டி ரியல்ஸ் -RETAIL POST பிரிவின் கீழ் கணக்கில் கொண்டுவரப்படும் .

இவ்வாறு நவீனமயமாக்கப்படும் பார்சல் பிரிவுகள் வெற்றிகரமாக செயல்படவேண்டும் .அஞ்சல் துறையின் மகத்துவமும் முக்கியத்துவமும் வாடிக்கையாளர்களுக்கு சென்றடையவேண்டும் என்கின்ற நோக்கத்தில் செயல்பட்டால் நாம் வரவேற்போம் .

நன்றி தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை 

0 comments:

Post a Comment