...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Tuesday, April 26, 2022

 அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !

                                  மாற்றங்களை வரவேற்போம் ! வர்த்தக ரீதியான போட்டிகளை எதிர்கொள்வோம் !

அஞ்சல் சேமிப்பு பிரிவின் மற்றுமொரு பரிணாம வளர்ச்சி தான் நமது POSB யில் இருந்து வாடிக்கையாளர்களின் பணத்தை இதர வங்கிகளுக்கும் ,பிற வங்கிகளில் இருந்து நமது POSB கணக்கிற்கும் பணத்தை  நமது அஞ்சலக வேலைநேரத்திற்குள்  மாற்றிக்கொள்ளலாம் .இதற்காக NEFT மற்றும் RTGS வசதிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன .NEFT என்பது PERIODICAL TRANSFER  எனஒரு  கால இடைவெளிக்குள் பணம் பரிமாற்றம் செய்யப்படும் .RTGS என்பது உடனே பணம் பரிமாற்றம் செய்யப்பட்டுவிடும் ..தற்சமயம் நமது துறையில் NEFT மட்டுமே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது .சில தொழிற்நுட்ப காரணங்களால் RTGS  வசதி இப்பொழுது இல்லை .குறைந்தபட்சம் ரூபாய் 1 முதல் 15 லட்சம் வரை பண பரிமாற்றம் செய்யலாம் .NET பாங்கிங் மூலமாக நாளொன்றுக்கு  5  TRANSACTIONS ஒவ்வொரு முறையும் அதிகபட்சம் ரூபாய் 2 லட்சம் என 10 லட்சம் வரை பண பரிமாற்றம்  செய்யலாம் .நமது அஞ்சலக IFSCCODE  IPOS00000DOP  ஆகும் .இதற்காக 16 இலக்கம் கொண்ட UTR எண் வழங்கப்படும் .இது FINACLE ,INTERNET BANKING மற்றும் MOBILEBANKING மூலமாக செயல்படுத்தப்படும் .இதற்காக தனி FINACLE (URL ) IPPB போல பயன்படுத்தப்படும் 

                    முன்னதாக நெட் பாங்கிங் வசதி மட்டுமே நம்மிடம் இருந்தது .அதுவும் நமது POSB  யில் இருந்து நமது SSA-- RD--TD உள்ளிட்ட கணக்குகள் சம்பந்தமான பரிவர்த்தனைகள் மட்டுமே செய்ய முடிந்தது .அதனை தொடர்ந்து ECS முறை அறிமுகப்படுத்தப்பட்டது .அதிலும் குறிப்பிட்ட சேவைகளுக்கு மட்டுமே வாடிக்கையாளர்களின் வங்கி கணக்கிற்கு மாற்றம் செய்யும் வசதி இருந்தது .

                 தற்சமயம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள NEFT மற்றும் RTGS வசதிகள்  நமது அஞ்சல் சேமிப்பு மற்றுமொரு மைல் கல்லை எட்டும் என்பதில் ஐயமில்லை .ஆனால் இதுபோன்ற புது புது சேவைகளுக்கு ஊழியர்களுக்கு முறையான பயிற்சிகள் கொடுப்பதில்லை .நிர்வாகம் வழக்கம் போல் SOP எனும் STANDARD OPERTTION  PROCEDURE  விளக்க கடிதத்தை பக்கம் பக்கமாக அனுப்பிவிட்டு இருந்து விடுகிறது ..

                  நமது துறையின் புதுப்புது திட்டங்கள் பொதுமக்களிடம் சென்றடைகிறதோ இல்லையோ சம்பந்தப்பட்ட ஊழியர்களுக்கு முழுமையாக சென்றடைய வேண்டும் ..இல்லையென்றால் இதுவும் காகித திட்டங்களாக ஒருசில இடங்களோடு நின்றுவிடும் ..ஆனாலும் இதுவரை கொண்டுவரப்பட்ட மாற்றங்கள் எல்லாமே எந்தவித பயிற்சிகள் இல்லாமல் நமது தோழர்களின் தனிப்பட்ட ஆர்வத்தால் ,முயற்சியால் முழுமையாயாக செயல்படுத்தப்பட்டிருப்பது நமக்கு பெருமையே !

தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை 

      

0 comments:

Post a Comment