...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Monday, January 1, 2018

அன்பார்ந்த தோழர்களே !
நெல்லை கோட்டத்தில் புத்தாண்டை முன்னிட்டு நமது கண்காணிப்பாளர் . உதவி கண்காணிப்பாளர்கள்  மற்றும் SP PSD ஆகியோர்களை தொழிற்சங்க பாரம்பரியத்தை மெய்ப்பிக்கும் வகையில் மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்துக்களை கூறினோம் .
முதலாவதாக நமது கோட்ட கண்காணிப்பளர்களை தோழர்கள் ஜேக்கப் ராஜ் பாட்சா செல்வபாரதி குருசாமி மற்றும் புஷ்பாகரன் ஆகியோர் சந்தித்து வாழ்த்துக்களை கூறினோம் .இந்த புத்தாண்டின் முதல் பரிசாக நமது கோரிக்கையை ஏற்று திசையன்விளையில் இருந்து தோழியர் ஒருவருக்கு பாளையம்கோட்டை டெபுடேஷன் வழங்கி தனது கணக்கை தொடங்கிவைத்த நமது SSP அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிதனை தெரிவித்துக்கொள்கிறோம்   
அடுத்து நம் மண்ணின் மைந்தர்   PSD கண்காணிப்பாளர் திரு சொர்ணம் அவர்களை சந்தித்து வாழ்த்துக்களை பகிர்ந்துகொண்டோம் .இந்த சந்திப்பின் போது PSD நிர்வாகிகள் உடன் இருந்தனர் 
     தொடர்ந்து நமது 2018 கையேட்டை திருநெல்வேலி HO வில் வினியோகித்த போது ....

                                             ஒரு சேர காப்போம்
அதிகாரவர்க்கத்தின் கழுகு பார்வை
அஞ்சல் துறை மீதும் விழுந்ததெப்போ ?
ஆறு கூறாக்கி அழித்திடவும்
ஆசை இங்கு உதித்ததெப்போ ?
அரசாங்கத்தின் நியாயத்தராசின் முட்கள்
சேவை பக்கம் சாயாத மர்மம் என்ன ?
உலக அதிசயத்தையே அசைத்து பார்த்தவர்கள்
அஞ்சல் துறையையா விட்டு வைக்க போகிறார்கள்
சிறுக சிறுக சேர்த்த கணக்குகள்
வங்கி வாசல்களில் வீசப்பட்டுவிட்டன
வங்கிகளுக்கு விரிவு படுத்திய பின்பும்
வரிசை ஒன்றும் குறைந்து போய்விடவில்லை
முதுகெலும்பு வளைந்து ஒடிந்தாலும்
முனங்கல்களோடு முடித்து கொள்கிறோம்
வியர்வையோடு உதிரம்  வடிந்தாலும் -தானாய்
வேதனை சரியாகும் என்று சகித்து கொள்கிறோம்
வாங்கிய சில நாட்களிலே
வாயை பிளக்கும் பிரின்டர்கள்
உத்தரவாதம் முடியும் முன்பே
உயிரிழக்கும் பேட்டரிகள்
வந்துவந்து போகும் இண்டர்நெட்டுகள்
வந்துகொண்டே இருக்கும் ரிப்போர்டுகள்
தபால்துறையில் வடமாநிலத்தவர்கள்
தமிழில் சாதிக்கிறார்கள்
தமிழ் வளர்ந்திருப்பதாய் -இங்கே
போதிக்கிறார்கள்
பொங்க வேண்டியவர்களே இங்கு
பொறுமை காப்பது புரியவில்லை
தடுக்க வேண்டியவர்களே -இன்று
தடுமாற காரணம் என்ன ?
இடிந்து விழும் இலாகாவையும்
இழந்து வரும் இயக்க பெருமையையும்
ஒருசேர காக்க புறப்படுவோமஅனைவருக்கும் 
புத்தாண்டு வாழ்த்துக்கள் ----ஜேக்கப் ராஜ் நெல்லை 



அன்பிற்கினிய என் NFPE சொந்தங்களே !
   உங்கள் அனைவருக்கும் எங்கள் இனிய புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம் .கடந்த காலங்களை போல் தொடர்ந்து உங்கள் பேராதரவுடன் NELLAI NFPE தனித்துவத்துடன் சிறந்து விளங்க நாம் இனைந்து பணியாற்றுவோம் .
                                            முக்கிய செய்திகள் 
மாநில அளவிலான PA கேடருக்கான சீனியாரிட்டி பட்டியல் கடந்த நவம்பர் 92 க்கு பிறகு அடுத்துள்ள ஐந்தாண்டிற்கான பட்டியல் வெளிவரவிருக்கிறது .இதற்கான முதல் நிலை கூட்டங்கள் நடந்து முடிந்திருக்கின்றன .கேடர் சீரமைப்பின் படி அடுத்த LSG பட்டியல் இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்குள் வரவாய்ப்புகள் இருக்கிறது .
--------------------------------------------------------------------------------------------------------------------------
இந்தஆண்டிற்க்கான டைரி இன்று உங்கள் அனைவரின் கைகளில் கிடைத்திருக்கும் .தவிர்க்க முடியாத காரணத்தால் (CSI பயிற்சிக்காக மதுரை சென்றதால் ) 27.12.2017 முதல் 29.12.2017 வரை இறுதிக்கட்ட திருத்தங்களில் சில மாற்ற முடியாமல் போய்விட்டது .சம்பந்தப்பட்ட ஓரிரு தோழர்கள் பொறுத்துக்கொள்ளும்படி கேட்டு கொள்கிறேன் 
வாழ்த்துக்களுடன் 
                                       SK .ஜேக்கப் ராஜ்   SK .பாட்சா 
------------------------------------------------------------------------------------------------------------------------------