...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Tuesday, January 8, 2019

                 போராடும் தோழர்களுக்கு வீர வாழ்த்துக்கள் 
வரலாற்று சிறப்புமிக்க இரண்டுநாள் வேலைநிறுத்தம் சிறப்பாக தொடங்கியது . திருநெல்வேலி RMS யில் திட்டமிட்டபடி நள்ளிரவு 12.00 மணிக்கு வேலைநிறுத்தம் துவங்கியது .முன்னதாக திருநெல்வேலி PSD 100 சதம் என்ற வெற்றியை தொடர்ந்து தக்கவைத்து கொண்டுள்ளது .பல இடங்களில் போஸ்ட்மாஸ்டர் கேடர் ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் கலந்துகொண்டனர் .நெல்லை MMS அனைத்து ஓட்டுனர்களுக்கு வேலைநிறுத்தத்தில் பங்கேற்றனர் .அம்பாசமுத்திரம் முழுவதும் போராட்டம் பரவியது .நெல்லை பாளை பகுதிகளில் அனைத்து டவுன் SOS மூடப்பட்டன .புறநகர் பகுதிகளில் நமது தோழர்கள் பணியாற்றும் அலுவலகங்களில் 99 சதம் போராட்டம் நடக்கிறது .கோட்ட அலுவலக ஊழியர்களும் சிறப்பான ஆதரவை தந்திருக்கிறார்கள் .
                                   வீர திருமகள் தோழியர் ராணி அன்பரசி 
இந்த மாதம் ஜனவரியில் பணிஓய்வு பெறவிருக்கும் மேலப்பாளையம் பஜார் SPM அவர்கள் வேலைநிறுத்தத்தில் கலந்துகொள்கிறார்கள் .தோழியரின் மன உறுதிக்கும் போராட்ட குணத்திற்கும் வீர வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம் .
                                      இந்த புனித போராட்டத்தில் அணிவகுத்த அனைத்து தோழர் தோழியர்களுக்கும் நெல்லை NFPE தனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது .
                            இன்று காலை 10 மணிக்கு கோட்ட அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது .வாய்ப்புள்ள தோழர் /தோழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறோம் .
                                   போராட்ட வாழ்த்துக்களுடன் 
SK .ஜேக்கப் ராஜ் --SK பாட்சா கோட்ட செயலர்கள் நெல்லை 

                      

Monday, January 7, 2019

                         வெல்லட்டும் !வேலைநிறுத்தம் வெல்லட்டும் !
        அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !
                 ஜனவரி 8 மற்றும் 9 ஆகிய இருநாட்கள் மத்திய தொழற்சங்கங்கள் அழைப்பு விடுத்திருக்கும் வேலைநிறுத்த போராட்டத்தில் நமது அஞ்சல் பகுதியில் NFPE மற்றும் FNPO சம்மேளனங்கள் போராட்டத்தில் கலந்துகொள்கின்றன .சூப்பர்வைசர் அஸோசியேஷன் என்றழைக்கப்படும் போஸ்ட்மாஸ்டர் கிரேடு தோழர்களும் பங்கேற்கவேண்டுமென அச்சங்கத்தின் பொதுச்செயலர் அழைப்பு விடுத்துள்ளார் .ஆகவே நாட்டிலுள்ள மத்திய தொழிற்சங்கங்களான INTUC  AITUC HMS CITU உள்ளிட்ட அமைப்புகள் நாடுமுழுவதிலும் லட்சக்கணக்கான தொழிலாளர்களை அரசின் பொருளாதார கொள்கைகளுக்கு எதிராக போராட ஊழியர்களை தயார்படுத்தி வருகின்றன .
                      08.01.2019 காலை 10 மணிக்கு ஆர்ப்பாட்டம் 
 நமது போராட்டத்தின் முதல்நாளான 08.01.2019 அன்று காலை 10 மணியளவில் பாளையம்கோட்டை தலைமை அஞ்சலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது .நமது போராட்டத்திற்கு ஆதரவாக நெல்லை மாவட்ட அனைத்து ஓய்வூதியர்கள் சங்க கூட்டமைப்பும் போராட்ட ஆதரவு ஆர்பாட்டங்களில் கலந்துகொள்கின்றன 
                                    அஞ்சல் நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை 
இதற்கிடையில் அஞ்சல் நிர்வாகம் போராடும் அனைத்து அஞ்சலக சங்க பிரதிநிதிகளுடன் 07.01.2019 அன்று காலை 11.30 மணிக்கு பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்துள்ளது .
                                          வேலைநிறுத்தம் குறித்து விருதுநகர் கோட்ட சங்கம் எடுத்துள்ள தீர்மானம்
இரண்டு நாட்கள் வேலை நிறுத்தம் குறித்த விளக்கக் கூட்டம் விருதுநகரில் இன்று நடைபெற்றது.கூட்ட முடிவில் ஆண்டுகள் இரண்டு கடந்தும் இரண்டு நாட்கள் வேலை பார்த்ததுக்கு சம்பளம் கொடுக்காத அஞ்சல் துறைக்கு வேலை நிறுத்தத்துக்கு சம்பளத்தை பிடிக்க தார்மீக நியாயமில்லை. எனவே இரண்டு நாட்களுக்காக சம்பள உத்தரவு வரும் வரை சம்பள பிடிப்பு கூடாதென நிர்வாகத்தை வற்புறுத்துமாறு தீர்மானம் இயற்றப்பட்டது
                     அரசின் கொள்கை முடிவுகளுக்கு எதிராக நடைபெறும் வேலைநிறுத்தத்தில் நாமும் பங்கேற்போம் .
                             வேலைநிறுத்த வாழ்த்துக்களுடன் 
SK .ஜேக்கப் ராஜ் -SK பாட்சா கோட்ட செயலர்கள் நெல்லை 
                  

Saturday, January 5, 2019

அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !
             வருகிற ஜனவரி 8 மற்றும் 9 ஆகிய இரண்டுநாள் நடைபெறும்  பொது வேலைநிறுத்தத்தில் NFPE -FNPO  சங்கங்கள் பங்கேற்கின்றது 
வேலைநிறுத்தம் செய்கின்ற தோழர்கள் கவனத்திற்கு 
1.கோட்ட அலுவலகத்தில் இருந்து தகவல்கள் கேட்டால் வேலைநிறுத்தத்தில் பங்கேற்கிறேன் என்று தெரிவிக்கவும் .
2.INCHARGE SPM தோழர்கள் 07.01.2019 அன்று email  முலம் வேலைநிறுத்தத்தில் கலந்துகொள்வதை தெரிவிக்கவும் .
3.பெரிய அலுவலகங்களில் உள்ள காசாளர்கள் தங்கள் சாவியை 07.01.2019 மாலை அந்தந்த போஸ்ட்மாஸ்டர் வசம் ஒப்படைக்கவும் .
4.வேலைநிறுத்தத்தின் முதல் நாள் 08.01.2019 அன்று காலை 10.30 மணியளவில் பாளையம்கோட்டை தலைமை அஞ்சலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும் .
5.இது பொது வேலைநிறுத்தம் என்பதால் எந்த சூழ்நிலையிலும் வேலைநிறுத்தம் வாபஸ் ஆகாது .
6.வேலைநிறுத்தத்தின் போது எதாவது தங்களுக்கு சந்தேகங்கள் ஏற்பட்டால் கோட்ட செயலர்களை அல்லது முன்னணி நிர்வாகிகளை தொடர்புகொள்ள கேட்டு கொள்கிறோம் .
7.பணிஓய்வு நெருங்குகிறது என்றோ யாரும் அச்சப்பட தேவையில்லை .
8.NO WORK -NO PAY என்பதை தவிர வேறு எந்த நடவடிக்கையும் கிடையாது .
                                        பங்கேற்போம் ! பங்கேற்போம் ! வேலைநிறுத்தத்தில் முழுமையாக பங்கேற்போம் !
                             போராட்ட வாழ்த்துக்களுடன் 
SK .ஜேக்கப் ராஜ் --SK .பாட்சா கோட்ட செயலர்கள் நெல்லை