...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Tuesday, May 7, 2019

                                                முக்கிய செய்திகள் 
அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !
                                             நமது நெல்லை கோட்டத்தில் Rotational Transfer ,LSG Re allotment வந்தவர்களுக்கு இடமாறுதல்   .விருப்ப விண்ணப்பங்கள் பரிசீலனை மற்றும் Rule 38 யின் கீழ் வரும் ஊழியர்களுக்கு இடமாறுதல் என கிட்டத்தட்ட 100 ஊழியர்களுக்குமேல் இடமாறுதல் உத்தரவுகள் பிறப்பிக்கப்படவுள்ளன .இது குறித்து நமது SSP அவர்களை நேற்று சந்தித்து பேசினோ ம் .
1.Rotational Trasnfer யை  பொறுத்தவரை கூடுமானவரை ஊழியர்களின் முதல் விருப்ப இடங்கள் கொடுக்கப்பட்டுள்ளன .என்றும் எந்த ஊழியர்களும் பாதிக்கப்படாத வண்ணம் இடமாறுதல்கள் இறுதிசெய்யப்பட்டுள்ளன என்றும் தெரிவித்தார்கள் .
2.LSG Re -allotment பெற்றுள்ள ஊழியர்களுக்கும் இடமாறுதல் சேர்த்தே வெளியிடப்படவுள்ளன .
3.நமது கோட்டத்திற்கு கிருஷ்ணகிரி கோட்டத்தில் இருந்து 
LSG Re allotment மூலம் மீண்டும் இடமாறுதல் பெற்று வரும் தோழியர் சங்கரி SPM பெளத்தூர் அவர்களையும் வாழ்த்தி வரவேற்கிறோம் .
4.கடந்த LSG இடமாறுதலில் மேல்முறையிடு செய்த தோழர் துளசிராமன் அவர்களின் மனுவிற்கும் மண்டல அலுவலகத்தில் இருந்து SPECIFIC COMMANDANTS கேட்டு கடிதம் வந்துள்ளது .இதுகுறித்து ஏற்கனவே மாநிலச்சங்கமும் PMG SR அவர்களுக்கு கடிதம் எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது .மாநிலச்சங்க  நடவடிக்கைகளுக்கு எங்கள் நன்றியை தெரிவித்து கொள்கிறோம் .
    நன்றி .தோழமையுடன் 
SK .ஜேக்கப் ராஜ் -SK .பாட்சா கோட்ட செயலர்கள் நெல்லை 

Saturday, May 4, 2019

அன்பார்ந்த தோழர்களே !
                              சுழல் மாறுதல் குறித்து இன்று நடைபெறும் நமது கோட்ட சங்க செயற்குழுவில் விவாதிக்கவிருக்கிறோம் .கோட்ட நிர்வாகமும் ஒரு வெளிப்படையான அணுகுமுறையை கையாண்டுவருவது வரவேற்கத்தக்கது .மொத்தமுள்ள 96      இடங்களுக்கு சுமார் 75  (73+2 ) ஊழியர்கள் இந்த சுழல் மாறுதலில் இருக்கிறார்கள் .நமது கோட்டத்தில் 01.07.2018 வரையிலான DIVISIONAL GRADATION LIST அடிப்படையில்  ஒரு வரிசைப்பட்டியலை தயாரித்து உங்கள் பார்வைக்கு தந்திருக்கிறோம் .இதில் இருந்தே உங்களுக்கு ஒரு புரிதல் கிடைக்கும் என்று நம்புகிறோம் .நமக்கு ஜூனியர் யார் ? சீனியர் யார் ? என்ற தெளிவும் கிடைக்கும் .மீதமுள்ள இடங்கள் முழுவதும் RULE 38 யில் வரும் ஊழியர்களை கொண்டு நிரப்பப்படும் .
நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை 

                                              கோட்ட சங்க செயற்குழு கூட்டம் 
அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !
                          நாம் ஏற்கனவே அறிவித்தபடி நமது கோட்ட சங்கத்தின் செயற்குழு கூட்டம் 04.05.2019 சனிக்கிழமை மாலை 6 மணிக்கு கோட்டத்தலைவர் தோழர் T .அழகுமுத்து அவர்கள் தலைமையில் நடைபெறுகிறது .செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம் .
                                                                    செயற்குழு கூட்டம் 
நாள் 04.05.2019    சனிக்கிழமை 
நேரம் மாலை 6 மணி 
இடம் திருநெல்வேலி HO
தலைமை .தோழர் .T .அழகுமுத்து அவர்கள் பொருள் --1.சுழல் மாறுதல் 2019
                        2.RULE 38 இடமாறுதல் 
                       3.டெபுடேஷன் விதிமீறல்கள் 
                        4. இன்னும் பிற (தலைவர் அனுமதியுடன் )
          செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் புதிய உறுப்பினர்கள் அனைவரும் செயற்குழு கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம் 
                                               நன்றி .
                                                               தோழமை வாழ்த்துக்களுடன் 
                                                                      SK .ஜேக்கப் ராஜ் 
                                                                          கோட்ட செயலர் நெல்லை