...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Tuesday, August 3, 2021

அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !

                        தபால் காரர்கள் Postman mobile Application (PMA) செயல்படுத்துவது தொடர்பாக நிர்வாகம் தெரிவித்துள்ள புதிய வழிகாட்டுதலைகளை குறித்து நமது தபால்காரர் தோழர் /தோழியர்களுக்கு எழுகின்ற சந்தேகங்களையும் நடைமுறையில் சாத்தியமில்லாத வழிகளை குறித்தும் நாம் விவாதிக்கவேண்டியது காலத்தின் அவசியம் .

1.முதலில் PMA பயன்பாடு என்பது ஒரு அலுவலகத்தில் எத்தனை தபால்காரர்கள் பணியிடங்கள் இருக்கிறதோ அனைவருக்கும் தனியாக மொபைல் வழங்கவேண்டும் .ஆனால் நமது கோட்டத்தில் அனைவருக்கும் மொபைல் வழங்கப்படவில்லை .

2.பட்டுவாடா செய்கின்ற இடத்திலிருந்தே REMARK பதிவிடவேண்டும் என்பதெல்லாம் நெருக்கடியான நகர பகுதிகளில் குறிப்பாக போக்குவரத்து அதிகமாகவுள்ள இடங்களில் தபால்காரர்கள் எப்படி REMARK உள்ளிட்டவைகளை பதிவிடமுடியும் 

3.அதேபோல் BULK பட்டுவாடா செய்யப்படுகின்ற இடங்களிலிருந்தே APP பயன்படுத்திட நடைமுறை சாத்தியங்கள் இல்லை 

4.நேற்று நடைபெற்ற காணொளி காட்சிமூலம் கொடுக்கப்பட்ட அறிவுறுத்தல்களில் நமது தபால்காரர்களின் சந்தேகங்களுக்கு கோட்ட அலுவலகத்தில் கேட்டு பதில்சொல்வதாக DSM அவர்களும் தெரிவித்துள்ளார்கள் .

                   ஆகவே நமது தோழர்கள் இந்த புதிய அறிவிப்பின் படி உங்களுக்கு ஏற்படுகின்ற நடைமுறை சிக்கல்களை கோட்ட சங்கத்திற்கு அவசியம் தெரிவிக்கும் படி கேட்டுக்கொள்கிறோம் .வருகிற 06.08.2021 குள் நமது கோட்ட அலுவலகத்திற்கு இந்த மாத மாதாந்திர பேட்டியில் சேர்க்கவேண்டிய பிரச்சினைகளை கொடுக்கவேண்டியதிருப்பதால் தபால்காரர் தோழர்கள் விரைந்து செயல்படுமாறு கேட்டுக்கொள்கிறோம் 

தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் -T.புஷ்பாகரன் கோட்ட செயலர்கள் நெல்லை 





 அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே ! வணக்கம் .

                             மாதாந்திர பேட்டியும் -நமது கடமைகளும் 

நமது துறையில் மட்டும் தான் ஊழியர்களின் பிரச்சினைகளை மேல்மட்ட அதிகாரிகளுடன் விவாதிக்கவும் அந்த விவாதத்தின் முடிவுகளை எழுத்துபூர்வமாக நமக்கு கொடுத்திடவும் ஒரு அரிய வாய்ப்பு உள்ளது .ஊழியர்களின் நலன் மீது அக்கறை உள்ள அதிகாரிகளிடம் மாதாந்திர பேட்டி மிக  அமைதியாகவும் ,எனக்கென்ன என்று இருக்கும் அதிகாரிகளிடம் சற்று கடினமாகவும் இந்த மாதாந்திர பேட்டிகள் நடைபெறுவதுண்டு ..சுமார் 2 மணிநேரம் வரை இந்த பேட்டி நடைபெறவும் மாதத்திற்கொருமுறை எத்தனை பிரச்சினைகளையும் குறித்து விவாதிக்கவும் இலாகா விதி அனுமதிக்கிறது .அதேபோல் தொடர்ந்து  மாதாந்திர பேட்டி நடத்தவேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது .ஆகவே இந்த வாய்ப்பினை தொழிற்சங்க நிர்வாகிகள் சரியாக பயன்படுத்திக்கொள்ள நமது உறுப்பினர்கள் தங்கள் அலுவலக பிரச்சினைகளை உடனுக்குடன் நிர்வாகிகளின் கவனத்திற்கு கொண்டுசெல்லவேண்டியது உங்களது கடமை .

                              நமது கோட்டத்தில் வருகிற 12.08.2021 அன்று மாதாந்திர பேட்டி நடைபெறுகிறது .வருகிற 06.08.2021 குள் பேட்டியில் விவாதிக்கப்போகும் பிரச்சினைகளை நாம் அனுப்பவேண்டியதுள்ளது .ஆகவே தோழர்கள் 06.08.2021 வரை காத்திருக்காமல் இன்றே உங்கள் பிரச்சினைகளை கோட்ட சங்கத்திற்கு தெரியப்படுத்தவும் .

           கடந்த 08.07.2021 அன்று நடைபெற்ற மாதாந்திர பேட்டியில் எடுக்கபட்ட முடிவுகளை ஏற்கனவே உங்கள் பார்வைக்கு அனுப்பிவைத்திருந்தோம் ..பிரச்சினை தீராத விசயத்தில் நிர்வாகம் கேட்டிருக்கும் தகவல்கள் கோட்ட அலுவலகத்திற்கு சென்றுள்ளதா என்பதை உறுதிப்படுத்துங்கள் 

item no 41/2021 Supply of four monitors to Tirunelveli --இதற்கு திருநெல்வேலி போஸ்ட்மாஸ்டர் அவர்களிடம்  ரிப்போர்ட் கேட்கப்பட்டுள்ளதாக பதில் வந்துள்ளது . திருநெல்வேலி தலைமை அஞ்சலக ஊழியர்கள் இதை உறுதிப்படுத்தவும் 

item no 54/2021 . Request to either repair or dequarterize the SPM's quarters of Samugarengapuram SO.---இதற்கு SDH மூலம் ரிப்போர்ட் பெறப்படும் என்று பதில்வந்துள்ளது .SPM சமூகரெங்கம் அவர்கள் தங்கள் அலுவலகத்தில் இருந்து அனுப்பிய விவரத்தையும் ஆய்வாளர் வந்த்திருந்தால் அதன் தகவல்களையும் தெரிவிக்கவும் 

மேலும் இந்த இடைப்பட்ட நாட்களில் ஊழியர்கள் தெரிவித்த பிரச்சினைகளை கோட்ட நிர்வாகத்திற்கு அனுப்பிட நாம் அவர்களிடம் தெரிவித்திருந்தோம் .அதன்படி கூடன்குளம் ,இட்டமொழி  சங்கர் நகர் மற்றும் தச்சநல்லூர் அலுவகத்தில் இருந்து நமக்கு  தகவல்களை தந்துள்ளனர் ..விடுபட்ட ஊழியர்களும் இன்றே தங்கள் கோரிக்கைகளை குறைகளை கோட்ட சங்கத்திற்கு தெரிவிக்கும் படி கேட்டுக்கொள்கிறோம் .

                               மாதாந்திர பேட்டி --நம் தலைவர்கள் பெற்றுத்தந்த உரிமை -அதை பயனுள்ளதாக மாற்றுவது நம் ஒவ்வொருவரின் கடமை ! கடமையை செய்வோம் ! உரிமையை கேட்போம் !

நன்றி தோழமையுடன் S.K .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை 


 


Monday, August 2, 2021

  அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே ! வணக்கம் .

                         கமலேஷ் சந்திரா கமிட்டி பரிந்துரைத்தது என்ன ? நடைமுறைப்படுத்தியது என்ன ? பரீசீலினையில் இருப்பது என்ன ? என்கின்ற கேள்விக்கு மாநிலங்களவையில் நமது துறையின் இணை அமைச்சர் அளித்திட்ட பதில் உங்கள் பார்வைக்கு .

1.மருத்துவ உதவி /ஹெல்த் குரூப் இன்சூரன்ஸ் /ESIC மூலம் மருத்துவ சிகிச்சை 

2.கிளை அஞ்சலகங்களுக்கு புதிய வரவு /செலவு  கணக்கீடு முறை 

3.இலாகா ஊழியர்களை போன்று 12 வருடம் ,24 வருடம் 36 வருடம் சேவை முடித்தவர்களுக்கு மூன்று கட்ட பதவி உயர்வுகள் 

4.CWF WELFARE சந்தா ரூபாய் 100 யில் இருந்து 300 ஆக உயர்த்துதல் 

5.மாநில சேம நிதியில் இருந்து வழங்கும் உதவி தொகை 10 சதம் அதிகரித்தல் 

6.கூடுதலாக WELFARE நிதி மூலம் டேபிள் செல்போன் வாங்கிட ரூபாய் 10000 கடன் 

7.குரூப் இன்சூரன்ஸ் தொகை ரூபாய் 50000 யில் இருந்து 5 லட்சமாக உயர்த்துதல் 

நிராகரிக்கப்பட்ட பரிந்துரைகள் 

1.PAID LEAVE 20 நாளில் இருந்து 30 நாட்களாக உயர்த்துதல் 

2.விடுப்புகளை 180 நாட்கள் வரை சேர்த்து பணமாக்குவது 

3.COMPOSITE அலவன்ஸ் ABPM களுக்கும் வழங்குதல் 

4.வேலை நேரத்தை 8 மணிநேரமாக உயர்த்துதல் 

5.பணிஓய்வு என்பது 65 வயதில் அந்த மாத கடைசி தேதி 

6.அனைத்து தனிநபர்  BOகளை இரண்டு நபர் அலுவலகமாக மாற்றுதல் 

நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை