அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே ! வணக்கம் .
மாதாந்திர பேட்டியும் -நமது கடமைகளும்
நமது துறையில் மட்டும் தான் ஊழியர்களின் பிரச்சினைகளை மேல்மட்ட அதிகாரிகளுடன் விவாதிக்கவும் அந்த விவாதத்தின் முடிவுகளை எழுத்துபூர்வமாக நமக்கு கொடுத்திடவும் ஒரு அரிய வாய்ப்பு உள்ளது .ஊழியர்களின் நலன் மீது அக்கறை உள்ள அதிகாரிகளிடம் மாதாந்திர பேட்டி மிக அமைதியாகவும் ,எனக்கென்ன என்று இருக்கும் அதிகாரிகளிடம் சற்று கடினமாகவும் இந்த மாதாந்திர பேட்டிகள் நடைபெறுவதுண்டு ..சுமார் 2 மணிநேரம் வரை இந்த பேட்டி நடைபெறவும் மாதத்திற்கொருமுறை எத்தனை பிரச்சினைகளையும் குறித்து விவாதிக்கவும் இலாகா விதி அனுமதிக்கிறது .அதேபோல் தொடர்ந்து மாதாந்திர பேட்டி நடத்தவேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது .ஆகவே இந்த வாய்ப்பினை தொழிற்சங்க நிர்வாகிகள் சரியாக பயன்படுத்திக்கொள்ள நமது உறுப்பினர்கள் தங்கள் அலுவலக பிரச்சினைகளை உடனுக்குடன் நிர்வாகிகளின் கவனத்திற்கு கொண்டுசெல்லவேண்டியது உங்களது கடமை .
நமது கோட்டத்தில் வருகிற 12.08.2021 அன்று மாதாந்திர பேட்டி நடைபெறுகிறது .வருகிற 06.08.2021 குள் பேட்டியில் விவாதிக்கப்போகும் பிரச்சினைகளை நாம் அனுப்பவேண்டியதுள்ளது .ஆகவே தோழர்கள் 06.08.2021 வரை காத்திருக்காமல் இன்றே உங்கள் பிரச்சினைகளை கோட்ட சங்கத்திற்கு தெரியப்படுத்தவும் .
கடந்த 08.07.2021 அன்று நடைபெற்ற மாதாந்திர பேட்டியில் எடுக்கபட்ட முடிவுகளை ஏற்கனவே உங்கள் பார்வைக்கு அனுப்பிவைத்திருந்தோம் ..பிரச்சினை தீராத விசயத்தில் நிர்வாகம் கேட்டிருக்கும் தகவல்கள் கோட்ட அலுவலகத்திற்கு சென்றுள்ளதா என்பதை உறுதிப்படுத்துங்கள்
item no 41/2021 Supply of four monitors to Tirunelveli --இதற்கு திருநெல்வேலி போஸ்ட்மாஸ்டர் அவர்களிடம் ரிப்போர்ட் கேட்கப்பட்டுள்ளதாக பதில் வந்துள்ளது . திருநெல்வேலி தலைமை அஞ்சலக ஊழியர்கள் இதை உறுதிப்படுத்தவும்
item no 54/2021 . Request to either repair or dequarterize the SPM's quarters of Samugarengapuram SO.---இதற்கு SDH மூலம் ரிப்போர்ட் பெறப்படும் என்று பதில்வந்துள்ளது .SPM சமூகரெங்கம் அவர்கள் தங்கள் அலுவலகத்தில் இருந்து அனுப்பிய விவரத்தையும் ஆய்வாளர் வந்த்திருந்தால் அதன் தகவல்களையும் தெரிவிக்கவும்
மேலும் இந்த இடைப்பட்ட நாட்களில் ஊழியர்கள் தெரிவித்த பிரச்சினைகளை கோட்ட நிர்வாகத்திற்கு அனுப்பிட நாம் அவர்களிடம் தெரிவித்திருந்தோம் .அதன்படி கூடன்குளம் ,இட்டமொழி சங்கர் நகர் மற்றும் தச்சநல்லூர் அலுவகத்தில் இருந்து நமக்கு தகவல்களை தந்துள்ளனர் ..விடுபட்ட ஊழியர்களும் இன்றே தங்கள் கோரிக்கைகளை குறைகளை கோட்ட சங்கத்திற்கு தெரிவிக்கும் படி கேட்டுக்கொள்கிறோம் .
மாதாந்திர பேட்டி --நம் தலைவர்கள் பெற்றுத்தந்த உரிமை -அதை பயனுள்ளதாக மாற்றுவது நம் ஒவ்வொருவரின் கடமை ! கடமையை செய்வோம் ! உரிமையை கேட்போம் !
நன்றி தோழமையுடன் S.K .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை
0 comments:
Post a Comment