...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Monday, October 15, 2018

தோழர் திருவேங்கடம் போஸ்ட்மாஸ்டர் கிரேடு II அவர்களின் பணிஓய்வு பாராட்டுவிழா சேலம் வலசையூரில் சேலம் NCA பேரவையின் தலைவர் தோழர் வீரமுத்து அவர்கள் தலைமையில் 14.10.2018 அன்று சிறப்பாக நடைபெற்றது .விழாவில் முன்னாள் மாநில தலைவர் தோழர் செம்பான் முன்னாள் மாநில அமைப்பு செயலர் அண்ணன் வாசு சேலம்  மேற்கு கோட்ட செயலர் தோழர் புகழேந்தி சேலம் கிழக்கு கோட்ட செயலர் தோழர் ரவீந்திரன் நெல்லை கோட்ட செயலர் ஜேக்கப் ராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டு சிறப்பித்தனர் .நிகழ்ச்சிகளை மிக சிறப்பாக தலைமை ஏற்று நடத்தி காட்டிய சேலம் பேரவையின் பொறுப்பாளர் அண்ணன் ரத்தினம் உயர்மட்ட குழு உறுப்பினர் அண்ணன் லட்சுமணன் மற்றும் ராபின் முத்து அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிதனை தெரிவித்து கொள்கிறோம் .விழாவிற்குப்பிறகு 21.10.2018 சேலத்தில் நடைபெறும் அண்ணன் பாலு அவர்களின் நினைவேந்தல் நிகழ்ச்சிகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது .நன்றி தோழமையுடன் ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை 



Saturday, October 13, 2018

                                             முக்கிய செய்திகள் 
வடகிழக்கு மாநிலங்கள் -ஜம்மு காஷ்மீர் மற்றும் அந்தமான் நிக்கோபாத் தீவுகளுக்கு LTC வசதி 

25.09.2018 முதல் மேலும் இரண்டாண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது 

-------------------------------------------------------------------------------------------------------------------

Observance of Vigilance Awareness Week from 29th October to 3rd November, 2018

ஊழலை ஒழிப்போம் -புதிய இந்தியாவை படைப்போம் என்ற முழக்கத்தோடு விஜிலென்ஸ் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த நமது துறை அழைப்பு விடுத்துள்ளது .
                                         மரியாதைக்குரிய திரு .சகாயம் IAS அவர்கள் கூற்றின் படி  பிச்சை எடுத்தாவது படி -வேலைக்கு வந்தபின் பிச்சை எடுக்காதே !
தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை 
-----------------------------------------------------------------------------------------------------------------------

 முன்னாள் மாநில செயலர் அண்ணண் பாலு அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவேந்தல் 
நாள் -21.10.2018 நேரம் காலை 10 மணி 
இடம்-  லட்சுமி அரங்கம் -சாமுண்டி வணிக வளாகம் 2 ம் மாடி நாலு ரோடு அருகில் சேலம் 
தலைமை- தோழர் C .அமிர்தலிங்கம் அவர்கள் (முன்னாள் துணை பொதுச்செயலர் அஞ்சல் மூன்று 
அண்ணன் பால் பற்றுண்ட அனைவரையும் அழைக்கிறோம் 
---------------------------------------------------------------------------------------------------------------------
                            நெஞ்சின்  நீங்கா  நினைவலைகள் -2 
அஞ்சாநெஞ்சன் அண்ணன் பாலு அவர்களின் நினைவு நாளினை (அக்டோபர் 20 ) ஒட்டி அவரது நினைவு மலரில் இருந்து வெளியிடப்படும் இரண்டாவது கட்டுரை -இந்த கட்டுரைக்கு சொந்தக்காரர்TK என்றழைக்கப்படும்  விருத்தாச்சலம்
 T .கந்தசாமி அவர்கள் .முன்னாள் மாநில உதவி செயலர் ...
1.1986 கரூர் மாநில மாநாட்டில் GDS களுக்கென்று  தனிச்சங்கம் வேண்டும் என்று பல்வேறு எதிர்  ப்புக்களுயிடையே தீர்மானத்தை நிறைவேற்றி காட்டியவர் 
2..சென்னை GPO வின் இருநூற்றண்டு விழாவிற்கு வந்த அமைச்சர் காட்கில் அவர்களுக்கு*போனஸ் வழங்குவதில் உள்ள பாகுபாடுகளை கண்டித்து)  GPO தோழர்கள் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்தினர் .அந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தவிடாமல் தடுக்கவேண்டும் என அன்றைய DPS (HOS ) திரு .ஜெயராமன் அவர்கள் அண்ணன் பாலு அவர்களை வீட்டிலே வந்து சந்தித்து முதலில் பேசியும் பிறகு மிரட்டல் பாணியில் பேச தொடங்கிய DPS அவர்களை மரியாதையாக வெளியே போய் விடு என துணிச்சலுடன் துரத்தி அடித்தவர் தான் அன்றைய மாநில செயலர் அண்ணன் பாலு .
3.1992 இல் மத்திய மண்டல PMG திரு TS .சர்மாவின் ஊழியர் விரோத போக்கை எதிர்த்து மாநிலம் தழுவிய கருப்பு கொடி போராட்ட இயக்கங்களை நடத்தி வெற்றி கண்டவர் .அந்த அறைகூவலை ஏற்று விருத்தாசலம் வந்த PMG க்கு நாங்கள் கருப்பு கொடி காட்டினோம் .
4.1990 யில் மத்திய மண்டல PMG திரு .ராம் பாகு அவர்கள் இருமாதாந்திர பேட்டியின் போது அண்ணனின் அடுக்கடுக்கான விவாதங்களுக்கு பதில் சொல்லமுடியாமல் கூட்ட அரங்கில் இருந்து கொஞசம் கொஞசமாக வெளியேற முயன்றபோது அவரது அறைக்குள் சென்று அவர் பதுங்கிடும் வரை துரத்தி விவாதம் செய்தவர் 
 இப்படி அதிகாரிகளின் காட்டு தர்பார் மூலம் ஊழியர்கள் வஞ்சிக்கப்பட்ட போதெல்லாம் மாநிலச்சங்க பத்திரிகை போஸ்டல் கிளார்க் மூலம் அதிகாரிகளின் அடக்குமுறை எனும் இடுப்பை உடைத்தவர் அண்ணன் பாலு 
அதனால் அவர் அஞ்சாநெஞ்சன் என அனைவராலும் போற்ற பட்டார் ..நன்றி .(தொடரும் )
தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை