...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Saturday, October 13, 2018

 முன்னாள் மாநில செயலர் அண்ணண் பாலு அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவேந்தல் 
நாள் -21.10.2018 நேரம் காலை 10 மணி 
இடம்-  லட்சுமி அரங்கம் -சாமுண்டி வணிக வளாகம் 2 ம் மாடி நாலு ரோடு அருகில் சேலம் 
தலைமை- தோழர் C .அமிர்தலிங்கம் அவர்கள் (முன்னாள் துணை பொதுச்செயலர் அஞ்சல் மூன்று 
அண்ணன் பால் பற்றுண்ட அனைவரையும் அழைக்கிறோம் 
---------------------------------------------------------------------------------------------------------------------
                            நெஞ்சின்  நீங்கா  நினைவலைகள் -2 
அஞ்சாநெஞ்சன் அண்ணன் பாலு அவர்களின் நினைவு நாளினை (அக்டோபர் 20 ) ஒட்டி அவரது நினைவு மலரில் இருந்து வெளியிடப்படும் இரண்டாவது கட்டுரை -இந்த கட்டுரைக்கு சொந்தக்காரர்TK என்றழைக்கப்படும்  விருத்தாச்சலம்
 T .கந்தசாமி அவர்கள் .முன்னாள் மாநில உதவி செயலர் ...
1.1986 கரூர் மாநில மாநாட்டில் GDS களுக்கென்று  தனிச்சங்கம் வேண்டும் என்று பல்வேறு எதிர்  ப்புக்களுயிடையே தீர்மானத்தை நிறைவேற்றி காட்டியவர் 
2..சென்னை GPO வின் இருநூற்றண்டு விழாவிற்கு வந்த அமைச்சர் காட்கில் அவர்களுக்கு*போனஸ் வழங்குவதில் உள்ள பாகுபாடுகளை கண்டித்து)  GPO தோழர்கள் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்தினர் .அந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தவிடாமல் தடுக்கவேண்டும் என அன்றைய DPS (HOS ) திரு .ஜெயராமன் அவர்கள் அண்ணன் பாலு அவர்களை வீட்டிலே வந்து சந்தித்து முதலில் பேசியும் பிறகு மிரட்டல் பாணியில் பேச தொடங்கிய DPS அவர்களை மரியாதையாக வெளியே போய் விடு என துணிச்சலுடன் துரத்தி அடித்தவர் தான் அன்றைய மாநில செயலர் அண்ணன் பாலு .
3.1992 இல் மத்திய மண்டல PMG திரு TS .சர்மாவின் ஊழியர் விரோத போக்கை எதிர்த்து மாநிலம் தழுவிய கருப்பு கொடி போராட்ட இயக்கங்களை நடத்தி வெற்றி கண்டவர் .அந்த அறைகூவலை ஏற்று விருத்தாசலம் வந்த PMG க்கு நாங்கள் கருப்பு கொடி காட்டினோம் .
4.1990 யில் மத்திய மண்டல PMG திரு .ராம் பாகு அவர்கள் இருமாதாந்திர பேட்டியின் போது அண்ணனின் அடுக்கடுக்கான விவாதங்களுக்கு பதில் சொல்லமுடியாமல் கூட்ட அரங்கில் இருந்து கொஞசம் கொஞசமாக வெளியேற முயன்றபோது அவரது அறைக்குள் சென்று அவர் பதுங்கிடும் வரை துரத்தி விவாதம் செய்தவர் 
 இப்படி அதிகாரிகளின் காட்டு தர்பார் மூலம் ஊழியர்கள் வஞ்சிக்கப்பட்ட போதெல்லாம் மாநிலச்சங்க பத்திரிகை போஸ்டல் கிளார்க் மூலம் அதிகாரிகளின் அடக்குமுறை எனும் இடுப்பை உடைத்தவர் அண்ணன் பாலு 
அதனால் அவர் அஞ்சாநெஞ்சன் என அனைவராலும் போற்ற பட்டார் ..நன்றி .(தொடரும் )
தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை 
                          

2 comments:

  1. NFPE GINDHABAD-
    AT Tirunelveli Division year1990-or 1991 one of the ssp-take un necessary action againt our senior comrades Soundarapandian,comrade Kuppusay and more than six senior members of NFPE-P3-.AT that time P3 and P4 unions combined struggle like
    Hunger fast (unnaviraham) more than 3days.Comrade Balu-came from Chennai to Palayankottai-and ask our seniors to finish hunger fast.And he says from this minute circle union take your subject and solve your problem.Then within one month the SSPO-TVL-DIVISION transferred.
    That is comrade Balu.
    One of your comrade
    K.Ponnuraj retired PA
    Ex EDDA/MC
    Sankarnagar s.I
    Tirunelveli- Division
    14/10/2018

    ReplyDelete
  2. நான் அப்பொழுது ஈடிடிஏ இருந்தேன்.திருச்செந்தூர் சங்கரய்யர் பள்ளியில் சங்கரகுமார் சார் தலைமையில் நடந்த மீட்டிங்கில் அனைவராலும் அண்ணண் என அழைக்கப்படும் பாலு அண்ணண் அவர்களின் எழுச்சியுரையைக் கேட்டேன். இன்று வரை என் செவியில் ஒலித்துக் கொண்டிருக்கின்றது இரா.உலகராஜ் எழுத்தர் தி_ர் தலைமை அஞ்சலகம் 14/10/2018

    ReplyDelete