தோழர் திருவேங்கடம் போஸ்ட்மாஸ்டர் கிரேடு II அவர்களின் பணிஓய்வு பாராட்டுவிழா சேலம் வலசையூரில் சேலம் NCA பேரவையின் தலைவர் தோழர் வீரமுத்து அவர்கள் தலைமையில் 14.10.2018 அன்று சிறப்பாக நடைபெற்றது .விழாவில் முன்னாள் மாநில தலைவர் தோழர் செம்பான் முன்னாள் மாநில அமைப்பு செயலர் அண்ணன் வாசு சேலம் மேற்கு கோட்ட செயலர் தோழர் புகழேந்தி சேலம் கிழக்கு கோட்ட செயலர் தோழர் ரவீந்திரன் நெல்லை கோட்ட செயலர் ஜேக்கப் ராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டு சிறப்பித்தனர் .நிகழ்ச்சிகளை மிக சிறப்பாக தலைமை ஏற்று நடத்தி காட்டிய சேலம் பேரவையின் பொறுப்பாளர் அண்ணன் ரத்தினம் உயர்மட்ட குழு உறுப்பினர் அண்ணன் லட்சுமணன் மற்றும் ராபின் முத்து அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிதனை தெரிவித்து கொள்கிறோம் .விழாவிற்குப்பிறகு 21.10.2018 சேலத்தில் நடைபெறும் அண்ணன் பாலு அவர்களின் நினைவேந்தல் நிகழ்ச்சிகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது .நன்றி தோழமையுடன் ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை
0 comments:
Post a Comment