...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Thursday, April 30, 2020

                                           தோழமையை நேசிப்போம் 

அதிகாலை முதல் 
அந்தி சாயும் வரை 
உழைத்த சமூகம் 
உயர்த்தி முழங்கிய  கோசம் தான் 
எட்டுமணி நேர வேலை 

சிகாகோ வீதியெங்கும் -ரத்தம் 
சிந்த சிந்த தொழிலாளிகள் 
துப்பாக்கியும் _ தூக்கும் 
தலைவர்களை அலங்கரித்தன 

பணிக்கு வந்த  புதிதில் 
எங்கள்   நாட்கள் -இப்படித்தான் 
நட்போடு  நகர்ந்திருந்தன 
நட்புகள் மெல்ல மெல்ல  
தோழமைகளை  துளிர்த்திருந்தன 

தோழமைகள் ஒவொருநாளும் 
தேடலை தர தொடங்கிருந்தன 
தேடல்கள்  எங்கள் உள்ளங்களில் 
தெளிவை கான துடித்தன 

ஆம் நாங்கள் தோழர்களாகி விட்டோம்  
ஒருவரை ஒருவர் 
தோழர்களென்று விளிக்கவும் 
தொடங்கிவிட்டோம் 

தோழமை -இங்கு 
புதுப்புது உறவை கூட்டியிருக்கிறது 
 மதம் இனம் மொழி கடந்து 
வர்க்க உணர்வு அரும்பி கொண்டிருந்தது 

தோழமை மட்டும் தான் -உலகை 
உனக்கு காட்டும் 
மற்ற உறவுகள் எல்லாம் 
உன்னுள்ளே முடங்கும் என்ற 
உண்மையை காலம் எங்களுக்கு 
உணர்த்த தொடங்கியிருந்தது 

ஒற்றுமை என்பது  உலக 
அவசியமாகிவிட்டது 
உரிமை மட்டுமே தீர்வு என்று 
ஒலிக்கதொடங்கிவிட்டது 

அதிகாரவர்க்கத்தின் எச்சரிக்கைகளை 
அலட்சியம் செய்யம் நேரம்  வந்துவிட்டது
நிர்வாகத்தில் நீயும்  பாதி எனும் 
நீதி பலிக்க தொடங்கிவிட்டது 

அடக்குமுறை அடிமை 
இவைகளெல்லம் அடுத்த 
கிரகம் எற தயாராகிவிட்டது 

அடுத்தவனுக்கு வந்தால்
 நமக்கென்ன என்ற நினைப்பு 
விலக  தொடங்கிவிட்டது 

இழப்பதற்கு ஒன்றும் இல்லை -என்ற 
உண்மை உணர்த்த தொடங்கிவிட்டது 
இன்னும் தயக்கமா ? என 
கேள்விகள் எங்கும் கேட்க தொடங்கிவிட்டது 

புதிய அத்தியாயம் படைக்க 
புது புயலாய் புறப்படுவோம் 
தோழமைக்காய் சுவாசிப்போம் 
தோழமையை நேசிப்போம் 
                                   மே தின வாழ்த்துக்களுடன் 
                                                          ----------   SK .ஜேக்கப் ராஜ்------------------



















அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !
                      இன்று பணிஓய்வு பெறுகின்ற தோழர்களை வாழ்த்துகிறோம் =30.04.2020 
தோழர் SK .பாட்சா அஞ்சல்நான்கின் கோட்ட செயலராக 8 ஆண்டுகள் சிறப்பாக பணியாற்றி நமது கோட்டத்திற்கு மாநில அளவில் தனி அடையாளத்தை பெற்றுத்தந்தவர் .மிக சிறந்த பொதுநல சேவகர் .அஞ்சல் நான்கில் உறுப்பினர்களின் சேர்க்கையில் மிகுந்த ஈடுபாடு காட்டியவர் .தோழர் பாட்சா அவர்கள் பல்லாண்டுகாலம் வாழ்க என வாழ்த்துகிறோம் 
தோழர் மாசனமுத்து தபால்காரர் நான்குனேரி -GDS ஆக தனது பணியினை தொடங்கி தனது பணியினை மிக நேர்மையாகவும் நேர்த்தியாகவும் நடத்தி காட்டியவர் .NFPE இயக்கத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர் .பாலைவன சோலை போல இக்கட்டான நேரத்தில் நான்குனேரியில் நமது இயக்க பணிகளை ஆற்றியவர் .அண்ணன் அவர்கள் பல்லாண்டுகாலம் வாழ்க என வாழ்த்துகிறோம் 
தோழமையுடன் 
SK .ஜேக்கப் ராஜ் -T.புஷ்பாக ரன் கோட்ட செயலர்கள் நெல்லை 

Wednesday, April 29, 2020

அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !
                                 இந்த ஆண்டில் புதிய உறுப்பினர்கள் சேர்ப்பில் பேருதவி புரிந்திட்ட அனைத்து முன்னணி நிர்வாகிகளுக்கும் நெல்லை NFPE தனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறது .இந்த வெற்றி நமது இயக்கத்தின் கூட்டுமுயற்சிக்கு கிடைத்திட வெற்றியாகும் .
            அஞ்சல் மூன்று புதிய உறுப்பினர்கள் 
நெல்லை --23 அம்பாசமுத்திரம் -11 மொத்தம் -34
           அஞ்சல் நான்கு புதிய உறுப்பினர்கள் 
நெல்லை --23  அம்பாசமுத்திரம் --6 மொத்தம் =29
                    ஆக சுமார் 63  ஊழியர்கள் இந்த ஆண்டில் நமது இயக்கத்தில் புதிய உறுப்பினர்களாக இணைந்துள்ளனர் .அதுபோக பல்வேறு ஊழியர்கள் RULE 38 யின் கீழ் வந்தவர்களிலும் நமது NFPE இயக்க தோழர்களாக இருக்கின்றனர் .NFPE இயக்கத்தின் மீது நம்பிக்கை வைத்து இனைந்திட்ட அனைத்து ஊழியர்களை வரவேற்கிறோம் . இந்த உறுப்பினர்கள் சேர்ப்பில் ஈடுபட்டு களப்பணியாற்றிய முன்னனி தோழர்கள் /தோழியர்களுக்கு மீண்டும் எங்கள் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம் .இன்குலாப் ஜிந்தாபாத் .
                                       தோழமையுடன் 
SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் அஞ்சல் மூன்று 
T.புஷ்பா கரண் கோட்ட செயலர் அஞ்சல் நான்கு