...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Thursday, April 30, 2020

                                           தோழமையை நேசிப்போம் 

அதிகாலை முதல் 
அந்தி சாயும் வரை 
உழைத்த சமூகம் 
உயர்த்தி முழங்கிய  கோசம் தான் 
எட்டுமணி நேர வேலை 

சிகாகோ வீதியெங்கும் -ரத்தம் 
சிந்த சிந்த தொழிலாளிகள் 
துப்பாக்கியும் _ தூக்கும் 
தலைவர்களை அலங்கரித்தன 

பணிக்கு வந்த  புதிதில் 
எங்கள்   நாட்கள் -இப்படித்தான் 
நட்போடு  நகர்ந்திருந்தன 
நட்புகள் மெல்ல மெல்ல  
தோழமைகளை  துளிர்த்திருந்தன 

தோழமைகள் ஒவொருநாளும் 
தேடலை தர தொடங்கிருந்தன 
தேடல்கள்  எங்கள் உள்ளங்களில் 
தெளிவை கான துடித்தன 

ஆம் நாங்கள் தோழர்களாகி விட்டோம்  
ஒருவரை ஒருவர் 
தோழர்களென்று விளிக்கவும் 
தொடங்கிவிட்டோம் 

தோழமை -இங்கு 
புதுப்புது உறவை கூட்டியிருக்கிறது 
 மதம் இனம் மொழி கடந்து 
வர்க்க உணர்வு அரும்பி கொண்டிருந்தது 

தோழமை மட்டும் தான் -உலகை 
உனக்கு காட்டும் 
மற்ற உறவுகள் எல்லாம் 
உன்னுள்ளே முடங்கும் என்ற 
உண்மையை காலம் எங்களுக்கு 
உணர்த்த தொடங்கியிருந்தது 

ஒற்றுமை என்பது  உலக 
அவசியமாகிவிட்டது 
உரிமை மட்டுமே தீர்வு என்று 
ஒலிக்கதொடங்கிவிட்டது 

அதிகாரவர்க்கத்தின் எச்சரிக்கைகளை 
அலட்சியம் செய்யம் நேரம்  வந்துவிட்டது
நிர்வாகத்தில் நீயும்  பாதி எனும் 
நீதி பலிக்க தொடங்கிவிட்டது 

அடக்குமுறை அடிமை 
இவைகளெல்லம் அடுத்த 
கிரகம் எற தயாராகிவிட்டது 

அடுத்தவனுக்கு வந்தால்
 நமக்கென்ன என்ற நினைப்பு 
விலக  தொடங்கிவிட்டது 

இழப்பதற்கு ஒன்றும் இல்லை -என்ற 
உண்மை உணர்த்த தொடங்கிவிட்டது 
இன்னும் தயக்கமா ? என 
கேள்விகள் எங்கும் கேட்க தொடங்கிவிட்டது 

புதிய அத்தியாயம் படைக்க 
புது புயலாய் புறப்படுவோம் 
தோழமைக்காய் சுவாசிப்போம் 
தோழமையை நேசிப்போம் 
                                   மே தின வாழ்த்துக்களுடன் 
                                                          ----------   SK .ஜேக்கப் ராஜ்------------------



















0 comments:

Post a Comment