...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Saturday, July 4, 2020

  அன்பார்ந்த தோழர்களே !  தோழியர்களே ! வணக்கம் 
*நடந்துமுடிந்த ஆய்வாளர் தேர்வில் தேர்ச்சிபெற்ற ஊழியர்களை கொண்டு தற்சமயம் காலியாகவுள்ள ஆய்வாளர் இடத்தில்  61/71 officiating வழங்கலாம் என மாநில அஞ்சல் நிர்வாகம் அனுமதித்துள்ளது .இதைதான் நாமும் காலியாகவுள்ள NFG HSG I  HSG II பதவிகளில் தகுதியுள்ள ஊழியர்களுக்கு OFFICIATING வாய்ப்புகளை வழங்கிட காலங்காலமாக கேட்டுவருகிறோம் .நிர்வாகஅலுவகம் வேறு நம்மைப்போல் OPERATIVE அலுவலகம் வேறு என்ற நிலை எப்பொழுது மாறப்போகிறதோ ?
*நாட்டில் மொத்தம் 109 வழித்தடங்க்ளில் தனியார் ரயில் சேவைக்கு அனுமதி ,அதில் தமிழகத்தில் 11 ரயில்கள் அடங்கும் .ரயில்வே GUARD மற்றும் டிரைவர் மட்டுமே ரயில்வே ஊழியர்களாக இருப்பார்கள் .அரசு பணத்தில் போடப்பட்ட தண்டவாளத்தில் தனியார் ரயில்தான் வேகமாக ஓடுமாம் ?
*ஆரம்பத்தில் கொரானா தொற்று ஒருவருக்கு இருந்தால் அந்த பகுதியே மூடப்பட்டது பிறகு அந்த தெரு பின்பு அந்த வீடு இப்பொழுது அந்த அறை என நின்றுவிட்டது .பணிபுரியும் இடத்தில் ஒருவருக்கு தொற்று என்றால் இரண்டுநாள் மூடலுக்கு பிறகு மீண்டும் திறக்கப்படும் என சர்வசாதாரன நிகழ்வாகிவிட்டது 
*நேற்று மதுரையில் நடைபெற்ற GDS TO போஸ்ட்மண் பதவிகளை நிரப்பிட நடந்த கமிட்டியில் நமது கோட்டத்தில் EWS பிரிவை தவிர ஏனைய இடங்கள் நிரப்பப்பட முடிவெடுக்கப்பட்டுள்ளது .மண்டல அலுவகத்தில் இருந்து மினிட்ஸ் ஒப்புதல் ஆனவுடன் முடிவுகள் வெளிவரும் 
நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் -T.புஷ்பாகரன் கோட்ட செயலர்கள் நெல்லை 

Friday, July 3, 2020

அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !
   வணக்கம்.
* GDS TO தபால்காரர் UNFILLED VACANCY களை நிரப்பிட தென்மண்டல அளவிலான கமிட்டி இன்று கூடுகிறது .நமது கோட்டத்திற்கு 8 காலியிடங்கள் நிரப்பப்டுள்ளன .UR 2 SC 2 ST 1 WES 3 .ஏற்கனவே கடந்த தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் நிரப்பப்படாத பதவிகள் நிரப்புவது என்பது நமது இயக்கத்திற்கு கிடைத்திட்ட  மற்றுமொரு வெற்றியாகும் .பதவிஉயர்வு பெறும் அனைத்து தோழர்களையும் NELLAI NFPE வாழ்த்துகிறது .
*நமது ASP(OD)
 திரு வேதராஜன் அவர்கள் SP ஆக  பதவி உயர்வு பெற்று தனது சொந்தமண்டலமான மத்திய மண்டலத்திற்கு செல்கிறார்கள் -அவர்கள் நமது கோட்டத்தில் பணியாற்றிய இந்த இரண்டு வருடங்களில் ஊழியர்களின் நலன் சார்ந்த விஷயங்களில் அனைவருக்கும் பேருதவியாக இருந்தார்கள் ,.மீண்டும் நமது ASP திரு .வேதராஜன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
*திரு A.சொர்ணம் SP PSD அவர்களுக்கு தென்மண்டலம் மறு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது .அவர்களுக்கும் வாழ்த்துக்கள்
*GDS TO MTS தேர்வு அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படவுள்ள பதவிகளுக்கான உத்தேசிக்கப்பட்ட  காலி இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது .நமது கோட்டத்திற்கு UR 1 EWS 1
*ஆதார் பணிகளில் OUT SOURCING அடிப்படையில் வெளியாட்களை அனுமதிபது  தொடர்பாக அனைத்து மாநில CPMG களிடம் கருத்துக்கள் கேட்கப்பட்டுள்ளது 
நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் -T.புஷ்பாகரன் கோட்ட செயலர்கள் நெல்லை 

Thursday, July 2, 2020

அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே ! 
                     *நமது கோட்டத்திற்கு புதிய SSP ஆக திரு  S .கலைச்செல்வன் பொறுப்பேற்கிறார் ..பணிஓய்விற்கு இன்னும் 4 மாதங்களே உள்ள நிலையில் JTS  குரூப் A பதவி உயர்வு பெறுகிற புதிய SSP அவர்களை வரவேற்கிறோம் .நாம் விசாரித்த வகையில் நிச்சயம் நெல்லைக்கு  புதிய SSP வருகிறார்       
            *நேற்று மதியம் வரை கிடைக்கப்பெற்ற விருப்பமனுக்களின் அடிப்படையில் 24 ஊழியர்களில் 12 ஊழியர்களுக்கு அருகாமையில் உள்ள அலுவலகங்களில் பணியாற்றிட அனுமதி அளித்த கோட்ட நிர்வாகத்திற்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம் .ஒரு சிலரின் விருப் பகடிதங்கள் விடுபட்டதை சுட்டிக்காட்டியுள்ளோம் .அனுமதி மறுக்கப்பட்ட ஊழியர்கள் தங்கள் பகுதியில் பொது போக்குவரத்து இல்லை என்றால் மீண்டும் விண்ணப்பித்து அதன் தகவல்களை கோட்ட சங்கத்திற்கு தெரிவிக்கவும் 
   *சிறுசேமிப்பு திட்டங்களான RD PPF SCSS மற்றும் SSA திட்டத்திற்கான சில தளர்வுகள் 01.07.2020 அன்று நிதியமைச்சகத்தால் வெளியிடப்பட்டுள்ளது 
அதன்படி 
(a )RD டெபாசிட் மார்ச் முதல் ஜூன் வரையிலான காலத்திற்கு DF இல்லாமல் 31.07.2020 வரை பெற்றுக்கொள்ளலாம் 
(b )Rebate பெறுவதற்கும்  மார்ச் முதல்  31.07.2020 வரை அனுமதிக்கலாம் 
(c ) PPF SCSS கணக்குகளை நீட்டிக்கவும் கால நீட்டிப்பு உண்டு 
(d )முதிர்வடைந்த RD கணக்குகளுக்கு மாறுதல் செய்திட 31/07.2020 வரை கட்டணம் கிடையாது 
(e )SSA கணக்கு தொடங்கிட 10 வயது3 (25,03.2020 முதல் 30.06.2020 ) இந்த காலத்திற்குள் இருந்தாலும் 31.07.2020 குள் அனுமதிக்கலாம் 
(f ) PPF SSA கணக்கிற்கான நிதியாண்டு 2019-2020 31.07.2020 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது 
நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் -T.புஷ்பாகாரன் கோட்ட செயலர்கள் நெல்லை