...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Thursday, July 2, 2020

அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே ! 
                     *நமது கோட்டத்திற்கு புதிய SSP ஆக திரு  S .கலைச்செல்வன் பொறுப்பேற்கிறார் ..பணிஓய்விற்கு இன்னும் 4 மாதங்களே உள்ள நிலையில் JTS  குரூப் A பதவி உயர்வு பெறுகிற புதிய SSP அவர்களை வரவேற்கிறோம் .நாம் விசாரித்த வகையில் நிச்சயம் நெல்லைக்கு  புதிய SSP வருகிறார்       
            *நேற்று மதியம் வரை கிடைக்கப்பெற்ற விருப்பமனுக்களின் அடிப்படையில் 24 ஊழியர்களில் 12 ஊழியர்களுக்கு அருகாமையில் உள்ள அலுவலகங்களில் பணியாற்றிட அனுமதி அளித்த கோட்ட நிர்வாகத்திற்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம் .ஒரு சிலரின் விருப் பகடிதங்கள் விடுபட்டதை சுட்டிக்காட்டியுள்ளோம் .அனுமதி மறுக்கப்பட்ட ஊழியர்கள் தங்கள் பகுதியில் பொது போக்குவரத்து இல்லை என்றால் மீண்டும் விண்ணப்பித்து அதன் தகவல்களை கோட்ட சங்கத்திற்கு தெரிவிக்கவும் 
   *சிறுசேமிப்பு திட்டங்களான RD PPF SCSS மற்றும் SSA திட்டத்திற்கான சில தளர்வுகள் 01.07.2020 அன்று நிதியமைச்சகத்தால் வெளியிடப்பட்டுள்ளது 
அதன்படி 
(a )RD டெபாசிட் மார்ச் முதல் ஜூன் வரையிலான காலத்திற்கு DF இல்லாமல் 31.07.2020 வரை பெற்றுக்கொள்ளலாம் 
(b )Rebate பெறுவதற்கும்  மார்ச் முதல்  31.07.2020 வரை அனுமதிக்கலாம் 
(c ) PPF SCSS கணக்குகளை நீட்டிக்கவும் கால நீட்டிப்பு உண்டு 
(d )முதிர்வடைந்த RD கணக்குகளுக்கு மாறுதல் செய்திட 31/07.2020 வரை கட்டணம் கிடையாது 
(e )SSA கணக்கு தொடங்கிட 10 வயது3 (25,03.2020 முதல் 30.06.2020 ) இந்த காலத்திற்குள் இருந்தாலும் 31.07.2020 குள் அனுமதிக்கலாம் 
(f ) PPF SSA கணக்கிற்கான நிதியாண்டு 2019-2020 31.07.2020 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது 
நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் -T.புஷ்பாகாரன் கோட்ட செயலர்கள் நெல்லை 

0 comments:

Post a Comment