...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Saturday, July 4, 2020

  அன்பார்ந்த தோழர்களே !  தோழியர்களே ! வணக்கம் 
*நடந்துமுடிந்த ஆய்வாளர் தேர்வில் தேர்ச்சிபெற்ற ஊழியர்களை கொண்டு தற்சமயம் காலியாகவுள்ள ஆய்வாளர் இடத்தில்  61/71 officiating வழங்கலாம் என மாநில அஞ்சல் நிர்வாகம் அனுமதித்துள்ளது .இதைதான் நாமும் காலியாகவுள்ள NFG HSG I  HSG II பதவிகளில் தகுதியுள்ள ஊழியர்களுக்கு OFFICIATING வாய்ப்புகளை வழங்கிட காலங்காலமாக கேட்டுவருகிறோம் .நிர்வாகஅலுவகம் வேறு நம்மைப்போல் OPERATIVE அலுவலகம் வேறு என்ற நிலை எப்பொழுது மாறப்போகிறதோ ?
*நாட்டில் மொத்தம் 109 வழித்தடங்க்ளில் தனியார் ரயில் சேவைக்கு அனுமதி ,அதில் தமிழகத்தில் 11 ரயில்கள் அடங்கும் .ரயில்வே GUARD மற்றும் டிரைவர் மட்டுமே ரயில்வே ஊழியர்களாக இருப்பார்கள் .அரசு பணத்தில் போடப்பட்ட தண்டவாளத்தில் தனியார் ரயில்தான் வேகமாக ஓடுமாம் ?
*ஆரம்பத்தில் கொரானா தொற்று ஒருவருக்கு இருந்தால் அந்த பகுதியே மூடப்பட்டது பிறகு அந்த தெரு பின்பு அந்த வீடு இப்பொழுது அந்த அறை என நின்றுவிட்டது .பணிபுரியும் இடத்தில் ஒருவருக்கு தொற்று என்றால் இரண்டுநாள் மூடலுக்கு பிறகு மீண்டும் திறக்கப்படும் என சர்வசாதாரன நிகழ்வாகிவிட்டது 
*நேற்று மதுரையில் நடைபெற்ற GDS TO போஸ்ட்மண் பதவிகளை நிரப்பிட நடந்த கமிட்டியில் நமது கோட்டத்தில் EWS பிரிவை தவிர ஏனைய இடங்கள் நிரப்பப்பட முடிவெடுக்கப்பட்டுள்ளது .மண்டல அலுவகத்தில் இருந்து மினிட்ஸ் ஒப்புதல் ஆனவுடன் முடிவுகள் வெளிவரும் 
நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் -T.புஷ்பாகரன் கோட்ட செயலர்கள் நெல்லை 

0 comments:

Post a Comment