...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Tuesday, June 29, 2021

 தோழியர் மீனா குமாரி SPM மானுர் அவர்களுக்கு NELLAI -NFPE யின் இனிய பணிநிறைவு வாழ்த்துக்கள் 

தோழியர் மீனா குமாரி   அவர்களை 

வாழ்த்துகிறோம் ...

தோழியர் என்று அழைப்பதை விட -எங்களது 

சகோதரிகளில் ஒருவர் என்றழைப்பது தான் 

பொருத்தமாக இருக்கும் ..

அன்பு சகோதரியை வாழ்த்துகிறோம் ....

கவலை ,கஷ்டம் ,கண்ணீர் என 

எந்த துயரமும் எட்டிப்பார்க்காத 

உன்னத உள்ளம் எங்கள் சகோதரிக்கு உண்டு 

அன்பு ,ஆனந்தம் ,அர்ப்பணிப்பு --சகோதாரிக்கு 

இப்போதும் உண்டு ..

எந்த பொறுப்புகளுக்கும் நாங்கள் இவரை 

முன்னிறுத்தியதில்லை --ஆனால் கொடுத்திட்ட 

பணியினை ஒருபோதும் மறுத்திட்டதில்லை 

அலுவலகத்தில் குடும்ப உறுப்பினராக -

அடுத்த இடம் சென்றாலும் தொடரும் நட்பாக 

சகோதரியை சுற்றி இன்னும் எங்கள் 

தோழியர்கள் படையெடுப்பு 

வெளிப்படையாக கேள்விகளை கேட்பவர் -இன்றும் 

வெகுளியாய் பேசுபவர் 

கள்ளம் கபடம் ஏதுமின்றி --வெள்ளை மனம் கொண்ட 

எங்கள் சகோதரியை NELLAI -NFPE 

சார்பாக வாழ்த்தி மகிழ்கின்றோம் ..

தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் 






 இன்று (30.06..2021) பணிநிறைவு பெறுகின்ற தூத்துக்குடி அஞ்சல் மூன்றின் கோட்டத்  தலைவர் தோழர் சங்கரநாராயணன் அவர்களின் பணிஓய்வு காலங்கள் சிறக்க வாழ்த்துக்கள்-- 30.06.2021

முத்துநகர் தந்திட்ட 

முத்தான தலைவனே !

சந்தன மனம் மாறமல் --NFPE எனும் 

சங்க நாதம் முழங்கியவனே !

தோழர் சங்கர நாராயணனே !

உன்னை வாழ்த்துகிறோம் .


ஆர்பாட்டத்தால் ஆவேசத்தால் 

சாதிக்கமுடியாத காரியங்களை கூட -உன் 

சாதுரியத்தால் சாதித்து காட்டியவனே !

தொழிற்சங்கத்தில் கூட 

அகிம்சைக்கு அச்சாரம்  போட்டவனே !


போட்டிகளுக்கு நடுவிலே --நீ 

பொறுப்புகளுக்கு வந்தாலும் கூட 

போட்டியை தவிர்க்க  --பொறுப்புதனை 

விட்டுக்கொடுத்து புகழின் 

உச்சிக்கு சென்றவனே !


தொழிற்சங்கத்தில் அரசியலா --

அரசியலில் தொழிற்சங்கமா ?என 

அனல் பறந்த நாட்களிலில் கூட 

அணி சாயம் அவ்வளவாய் -ஒட்டிக்கொள்ளாமல் 

அண்ணன் பாலுவோடும் --அண்ணன் KVS அவர்களோடும் 

இன்றுவரை அணி வகுத்தவனே !


அடுத்ததடுத்து மற்ற தோழர்களை 

கோட்ட செயலராய் பணியாற்றிட 

வாய்ப்புகளை உருவாக்கி தந்தவனே !

கோட்ட செயலராய் -கோட்ட தலைவராய் 

எந்த பொறுப்பில் இருந்தாலும் 

NFPE தூத்துக்குடி வலைத்தளத்தில் 

உன் வாசனைகள் இல்லாத 

வாசகங்கள் ஏது ?

இனிமேல் உன்போன்ற அமைதி மிகு 

ஆளுமைகள் ஏது ?ஏது ?

வாழ்க !நீ பல்லாண்டு !

என வாழ்த்தி மகிழும் --

உந்தன் தம்பி SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை 















 அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே ! வணக்கம் 

                                                சமீபத்திய சேமிப்பு வங்கி சம்பந்தமான உத்தரவுகள் 

SB 13/2021  DTD 28.06.2021

                         CBS அஞ்சலங்களில் சேமிப்பு புத்தகங்களில் பிரிண்ட் போட MTS/GDS ஊழியர்களை பயன்படுத்துவது தொடர்பான ஆணை ..

      இதன்படி அடையாளம் காட்டப்பட்ட MTS/GDS ஊழியர்களுக்கு CBS-CPC மூலமாக USERID  கொடுக்கப்படும் .அவர்கள் கீழ்கண்ட நான்கு FINACLE மெனுவில் மட்டுமே பணியாற்றிட முடியும் .1.HPPB 2.HACCBAL 3.HAFT 4.HPR 

-------------------------------------------------------------------------------------------------------------------

SB 14/2021  DTD 28.06.2021

நிறுத்தப்பட்ட சேமிப்பு திட்டங்களான NSS-87 மற்றும் NSS-92  இவைகளை CBS அலுவலகங்களுக்குள் மாற்றல் செய்வது சம்பந்தமாக 

     தற்சமயம் வரை சம்பந்தப்பட்ட தலைமை அஞ்சலகங்களில் மட்டுமே எந்தவித பரிவர்த்தனையும் செய்யமுடியும் என்பதனை மாற்றி வாடிக்கையாளர்கள் விரும்பும் அவர்கள் அருகாமையில் உள்ள தலைமை அஞ்சலகங்களில் மாறுதல் செய்து தொகையினை பெற்றுக்கொள்ளலாம் .அப்படி பெறப்படும் தொகை காசோலையாகவோ அல்லது சேமிப்பு நடப்பு கணக்கில் வரவு வைத்தோ மட்டுமே தரப்படும் .கையெழுத்து FINACLE லில்  இருந்தால் ஒரு செட்  KYC உள்ளிட்ட ஆவணங்களை மட்டுமே பெற்றுக்கொண்டு கணக்கை மாற்றிக்கொள்ளலாம் .கையெழுத்து FINACLE லில் இல்லையென்றால்  இரண்டு செட்  KYC உள்ளிட்ட ஆவணங்களை பெற்றுக்கொண்டு ஒரு செட்டையை சம்பந்தப்பட்ட தலைமை அஞ்சலகத்திற்கு அனுப்பி வைத்திட வேண்டும் .எந்த அலுவலகத்தில் கணக்கு இருக்கிறதோ அந்த அலுவகத்தில் மாறுதல் செய்யப்பட்டு அதன் தகவலை விண்ணப்பங்கள் பெறப்பட்ட அலுவகத்திற்கு அனுப்பிவைக்கப்படும் .

நன்றி .தோழமையுடன் S.K .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை