இன்று (30.06..2021) பணிநிறைவு பெறுகின்ற தூத்துக்குடி அஞ்சல் மூன்றின் கோட்டத் தலைவர் தோழர் சங்கரநாராயணன் அவர்களின் பணிஓய்வு காலங்கள் சிறக்க வாழ்த்துக்கள்-- 30.06.2021
முத்துநகர் தந்திட்ட
முத்தான தலைவனே !
சந்தன மனம் மாறமல் --NFPE எனும்
சங்க நாதம் முழங்கியவனே !
தோழர் சங்கர நாராயணனே !
உன்னை வாழ்த்துகிறோம் .
ஆர்பாட்டத்தால் ஆவேசத்தால்
சாதிக்கமுடியாத காரியங்களை கூட -உன்
சாதுரியத்தால் சாதித்து காட்டியவனே !
தொழிற்சங்கத்தில் கூட
அகிம்சைக்கு அச்சாரம் போட்டவனே !
போட்டிகளுக்கு நடுவிலே --நீ
பொறுப்புகளுக்கு வந்தாலும் கூட
போட்டியை தவிர்க்க --பொறுப்புதனை
விட்டுக்கொடுத்து புகழின்
உச்சிக்கு சென்றவனே !
தொழிற்சங்கத்தில் அரசியலா --
அரசியலில் தொழிற்சங்கமா ?என
அனல் பறந்த நாட்களிலில் கூட
அணி சாயம் அவ்வளவாய் -ஒட்டிக்கொள்ளாமல்
அண்ணன் பாலுவோடும் --அண்ணன் KVS அவர்களோடும்
இன்றுவரை அணி வகுத்தவனே !
அடுத்ததடுத்து மற்ற தோழர்களை
கோட்ட செயலராய் பணியாற்றிட
வாய்ப்புகளை உருவாக்கி தந்தவனே !
கோட்ட செயலராய் -கோட்ட தலைவராய்
எந்த பொறுப்பில் இருந்தாலும்
NFPE தூத்துக்குடி வலைத்தளத்தில்
உன் வாசனைகள் இல்லாத
வாசகங்கள் ஏது ?
இனிமேல் உன்போன்ற அமைதி மிகு
ஆளுமைகள் ஏது ?ஏது ?
வாழ்க !நீ பல்லாண்டு !
என வாழ்த்தி மகிழும் --
உந்தன் தம்பி SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை
0 comments:
Post a Comment