அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே ! வணக்கம்
சமீபத்திய சேமிப்பு வங்கி சம்பந்தமான உத்தரவுகள்
SB 13/2021 DTD 28.06.2021
CBS அஞ்சலங்களில் சேமிப்பு புத்தகங்களில் பிரிண்ட் போட MTS/GDS ஊழியர்களை பயன்படுத்துவது தொடர்பான ஆணை ..
இதன்படி அடையாளம் காட்டப்பட்ட MTS/GDS ஊழியர்களுக்கு CBS-CPC மூலமாக USERID கொடுக்கப்படும் .அவர்கள் கீழ்கண்ட நான்கு FINACLE மெனுவில் மட்டுமே பணியாற்றிட முடியும் .1.HPPB 2.HACCBAL 3.HAFT 4.HPR
-------------------------------------------------------------------------------------------------------------------
SB 14/2021 DTD 28.06.2021
நிறுத்தப்பட்ட சேமிப்பு திட்டங்களான NSS-87 மற்றும் NSS-92 இவைகளை CBS அலுவலகங்களுக்குள் மாற்றல் செய்வது சம்பந்தமாக
தற்சமயம் வரை சம்பந்தப்பட்ட தலைமை அஞ்சலகங்களில் மட்டுமே எந்தவித பரிவர்த்தனையும் செய்யமுடியும் என்பதனை மாற்றி வாடிக்கையாளர்கள் விரும்பும் அவர்கள் அருகாமையில் உள்ள தலைமை அஞ்சலகங்களில் மாறுதல் செய்து தொகையினை பெற்றுக்கொள்ளலாம் .அப்படி பெறப்படும் தொகை காசோலையாகவோ அல்லது சேமிப்பு நடப்பு கணக்கில் வரவு வைத்தோ மட்டுமே தரப்படும் .கையெழுத்து FINACLE லில் இருந்தால் ஒரு செட் KYC உள்ளிட்ட ஆவணங்களை மட்டுமே பெற்றுக்கொண்டு கணக்கை மாற்றிக்கொள்ளலாம் .கையெழுத்து FINACLE லில் இல்லையென்றால் இரண்டு செட் KYC உள்ளிட்ட ஆவணங்களை பெற்றுக்கொண்டு ஒரு செட்டையை சம்பந்தப்பட்ட தலைமை அஞ்சலகத்திற்கு அனுப்பி வைத்திட வேண்டும் .எந்த அலுவலகத்தில் கணக்கு இருக்கிறதோ அந்த அலுவகத்தில் மாறுதல் செய்யப்பட்டு அதன் தகவலை விண்ணப்பங்கள் பெறப்பட்ட அலுவகத்திற்கு அனுப்பிவைக்கப்படும் .
நன்றி .தோழமையுடன் S.K .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை
0 comments:
Post a Comment