...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Tuesday, June 21, 2022

 அன்பார்ந்த தோழர்களே !நாளை நடக்கும் கூட்டு ஆர்ப்பாட்டத்தில் நாம் முழங்கும் கொள்கை முழக்கம் --நண்பர்கள் சிலரின் வேண்டுகோள்களுக்கிணங்க .......


வெல்லட்டும் வெல்லட்டும் 

அஞ்சல்  ஊழியர் போராட்டம் 

நாடுதழுவிய போராட்டம் 

வெல்லட்டும் வெல்லட்டும் !


மத்திய அரசே ! மத்திய அரசே !

மத்தியில் ஆளும் BJP அரசே 

மக்கள் சேவை செய்திடும் 

அஞ்சல் துறையினை 

தனியாருக்கு விற்காதே !


விற்காதே விற்காதே !

ஏழை மக்களின் காவலாம் 

கிராமப்புற அரசானம் 

அஞ்சல் துறையினை 

தனியாருக்கு விற்காதே !

தனிநபருக்கு கொடுக்காதே !


சுதந்திர இந்தியாவில் 

மிச்சமிருக்க்கும் ஒரே துறை 

மீண்டுவந்த ஒரே துறை 

எங்கள் துறை அஞ்சல் துறை 

கூறுபோட்டு விற்காதே 

காரணம் ஏதும் சொல்லாதே 


பொதுமக்கள் சேவை செய்யும் 

அஞ்சல் துறையிலே 

லாப நாட்டம் பார்க்காதே !

பார்க்காதே பார்க்காதே! 

லாப நட்டம் பார்க்காதே !


நாளும் பொழுதும் நாங்கள் இங்கே 

தேடி ஓடி சேர்த்த கணக்காம் 

பலகோடி கணக்குகளை 

தாரை நீ வார்க்காதே 

வரலாற்று பிழை செய்யாதே !


எங்கள் படைப்பு சொந்த படைப்பு 

அஞ்சல் காப்பீடு திட்டத்தில் 

பல்லாங்குழி ஆடாதே !

பணம் கிடைக்கும் என்பதற்காக 

படுகுழியில் தள்ளாதே !


அனுமதியோம் அனுமதியோம் 

அஞ்சல் துறையில் தனியாரை 

அனுமதியோம் அனுமதியோம் 


பல கோடி  கணக்குகள் 

பல கோடி வாடிக்கையாளர் 

சொந்தம் கானும் எங்கள் சேமிப்பை

IPPB க்கு மாற்றாதே !


நட்டத்தில் பிறந்த குழந்தை 

IPPB எனும் குழந்தைமீது 

நூற்றாண்டு கடந்த துறையை 

மூனு தலைமுறை பார்த்த துறையை 

விற்றிட துணியாதே !


அமுதசுரபி ஒவ்வொன்றையும் 

அடிமாட்டு விலைக்கு விற்றபின் 

நாடு கண்ட லாபமென்ன ?

நாங்கள் கண்ட மாற்றமென்ன !


வெள்ளையனை வெளியேற்ற 

போராடிய சங்கம் இது !

எல்லை கடந்த போராட்டத்தில் 

நாட்டை காத்த கூட்டமிது !


புரிந்துக்கோ புரிந்துக்கோ !

எங்கள் பங்கை புரிந்துக்கோ !

தெரிந்துக்கோ தெரிந்துக்கோ !

பழைய வரலாறை தெரிந்துக்கோ !


மக்கள் சேவை செய்திடும் எங்கள் 

துறையை பாதுகாப்போம் 

பாதுகாப்பு துறையை கூட விற்க 

நீயும் துணிந்த பின்பும் 

தொடர்வண்டி சேவையைக்கூட 

தனியாருக்கு கொடுத்தபின்பும் 

தொலைத்தொடர்பு சேவையை 

துண்டித்து பார்த்த பின்பும் 

உழைக்கும் மக்கள் கேட்கும் கேள்வி 

உன்னை பார்த்து கேட்கும் கேள்வி 


கார்டு கவர் எல்லாத்தையும் 

காடு மேடு தேடி சென்று

வீடுதேடி விலாசம் தேடி 

கொண்டுசேர்க்கும் எங்கள் துறையை 

விற்றுதான் வாழணுமா ?

அரசுத்துறைகளை விற்றுத்தான் பிழைக்கனுமா ?


SK .ஜேக்கப் ராஜ் மாநில உதவி செயலர் அஞ்சல் மூன்று --நெல்லை 







Monday, June 20, 2022

NFPE                                                         PJCA                                                             FNPO

                                        அஞ்சல் கூட்டு போராட்ட குழு --நெல்லை 

அன்பார்ந்த தோழர்களே !தோழியர்களே !  

                                பொழுதெல்லாம் எங்கள் செல்வம் கொள்ளை கொண்டு போகவோ ?நாங்கள் சாகவோ ? அழுது கொண்டிருப்போமோ ? --பாரதி 

                             அஞ்சல் துறையில் தனியார்மய நுழைவினை எதிர்த்து உணவு இடைவேளை ஆர்ப்பாட்டம் -- அகிலஇந்திய கூட்டு போராட்ட குழு அறைகூவல் 

நாள் --22.06.2022                             நேரம் மதியம் 1   மணி 

இடம் ----பாளையம்கோட்டை தலைமை அஞ்சலகம் முன்பு 

                          அஞ்சல் துறை படுவேகமாக அமுல்படுத்திவரும் டாக்மித்ரா ,CSC பார்சல் புக்கிங் என எந்த திட்டத்தையும் தொழிற்சங்கங்களோடு கலந்தாலோசிக்காமல் தன்னிச்சையாக செயல்படுத்திவருகிறது ....எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றும் செயலாக நாம் நூறாண்டுகளுக்கு மேல்அலைந்து திரிந்து சேமித்து சேர்த்துவைத்த அஞ்சல் சேமிப்பு கணக்குகள் ,சேமிப்பு காப்பீடு பிரிவுகள் அனைத்தும் ஒரே உத்தரவில் IPPB யின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு சென்றுவிட்டது ...மேலும் நெட்ஒர்க் கான்ட்ராக்ட் அனைத்தும் இனி IPPB தான் மேற்கொள்ளும் என்பதுமட்டில்லாமல் IPPB யும் அசுர வேகத்தில் தன் நெட்ஒர்க் சம்பந்தமாக டெண்டர் கோரியிருக்கிறது ..ஒரே நாளில் நமது கட்டுப்பாட்டில் இருந்த போஸ்டல் ATM IPPB க்கு கைமாறிவிட்டது ..

                       அஞ்சல் துறையின் இந்த தனியார்மய மோகத்திற்கு முடிவுகட்டிட நமது அஞ்சல் கூட்டு போராட்டக்குழு (NFPE --FNPO)சம்மேளனங்கள் நிர்வாகத்துடன் பலசுற்று பேசியும் --எழுதியும் இதுவரை அஞ்சல் இலாகா தனது நிலையில் இருந்து மாறிடவில்லை ...ஆகவே நமது இலாகாவின் இந்த செயல்பாட்டினை கண்டித்தும் அஞ்சல் துறையில் தனியார் நுழைவினை எதிர்த்தும் முதற்கட்டமாக அனைத்து இடங்களிலும் உணவு இடைவேளை ஆர்ப்பாட்டத்தை நடத்திட அறைகூவல் விடுத்துள்ளது ..

                        தொடர்ந்தது அஞ்சல் இலாகா நமது கோரிக்கைகளின் மீது கவனம் செலுத்தவில்லை என்றால் ஒரு காலவரையற்ற வேலைநிறுத்தத்தை செய்திட முடிவெடுக்கப்பட்டுள்ளது 

                                               ஆகவே நமது துறைக்கு நெருங்கிவரும் தனியார் மய ஆபத்தை தடுத்து நிறுத்திட நடைபெறும் அனைத்து இயக்கங்களிலும் தாங்கள் அனைவரும் முழுமையாக கலந்துகொள்ளும்படி கூட்டு போராட்டக்குழுவின் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்

                                                       நன்றி 

                                                             தோழமையுடன் 

    SK .ஜேக்கப் ராஜ் கன்வீனர் கூட்டு போராட்டக்குழு 

G.சிவகுமார் தலைவர் கூட்டு போராட்ட குழு 

அஞ்சல் மூன்று --அஞ்சல் நான்கு --புறநிலை ஊழியர்கள் சங்கம் -அஞ்சல் பொருள் கிடங்கு ---மற்றும் RMS-- திருநெல்வேலி கோட்டம் 

Saturday, June 11, 2022

 அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !

                                     அஞ்சல் இலாகாவை IPPB எனும் நிறுவனத்திற்கு தாரைவார்க்கும் முயற்சியா ?-

                அஞ்சல் துறையில் தொழில்நுட்ப பிரிவில் ஏற்பபடப்போகும் அதிரடி மாற்றங்கள் தான் IT .2.O .. இந்த ஒப்பந்தங்கள் நவீனமயமாக்கல் மற்றும் நடைமுறைப்படுத்திட IPPB க்கு நேரடியாக வழங்கப்பட்டுள்ளது .இதற்காக ரூபாய் 5785 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது ..இந்த நிதி 2022-2023 முதல் 2029-2030 நிதியாண்டு வரை பயன்படுத்தப்படும் .

                                   இனிமேல் இரண்டு கட்டமைப்புகள் என்பதில்லாமல் IPPB மட்டுமே BANKING ,இன்சூரன்ஸ் மற்றும் இதர நிதி நிலைக்குரிய திட்டங்களை பார்த்துக்கொள்ளும் .DOPஅதாவது நமது அஞ்சல் இலாகா மெயில் செயல்பாடுகளை மட்டுமே நிர்வகிக்கும் .இதர செயல்பாடுகள் அனைத்தும் IPPB யோடு இணைக்கப்பட்டுவிடும் .

                                   ஒப்பந்த காலங்கள் முடிந்துவிட்ட அனைத்துமே IPPB மேற்பார்வைக்கு சென்றுவிடும் .1.டேட்டா சென்டர் --01.04.2022     2.நெட்ஒர்க் --01.04.2022  3.BANKING ,இன்சூரன்ஸ் 29.08.2022  .

                                     BANKING ,இன்சூரன்ஸ் மற்றும் ரூரல் DEVICE  எல்லாமே IPPB  கட்டுப்பாட்டிற்குள் சென்றுவிடும் .DOP இக்கு மெயில், கவுண்டர் OPERATION,  ACCOUNTING AND  மற்றும் BACK OFFICEE மற்றும் களத்திலுள்ள நெட்ஒர்க் இவைகளை மட்டுமே விட்டு சென்றுள்ளன .

                           எல்லா நிர்வாக செயல்பாடுகளையும் கண்காணிக்க PROJECT  STEERING COMMITEE  புதிதாக அமைக்கப்பட்டுள்ளது .இதில் IPPB மற்றும் DOP  உயர் அதிகாரிகள் இடம்பெறுவார்கள் 

                     பல ஆண்டுகளாக நாம் சொல்லிவந்த மெயில் என்கின்ற இதய பகுதியை மட்டுமே அஞ்சல் இலாகாவிடம் ஒப்படைத்துவிட்டு இதர பாகங்கள் அனைத்தையும் கூறுபோட்டு பிரித்தெடுக்கும் TSR.சுப்பிரமணியம்கமிட்டி  அறிக்கையின் பெருந்தாக்கம் ....DOP--IPPB என பிரிக்கப்பட போகிறது ..IPPB க்காக பணியாற்றினால் IPPB சம்பளம் கொடுக்கும் ..DOP யோடு இருந்தால் DOPபொறுப்பெடுக்கும் ....

                                  தொலைத்தொடர்பு துறை DOT --BSNL என பிரிக்கப்பட்ட மாதிரி இங்கேயும் DOP--IPPB எனும் இரண்டு அமைப்புகளுக்கிடையில் பலமான தடுப்பு சுவர் எழுப்பப்படப்போகிறது ......என்ன செய்யப்போகிறோம் ?  

தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை 

                           

Wednesday, June 8, 2022

 அன்பார்ந்த தோழர்களே !தோழியர்களே ! 

                                 விடுப்பினை வழங்க மறுக்கும் கோட்ட நிர்வாகம் -கூடுதல் பொறுப்பேற்றியிருக்கும் கன்னியாகுமரி முதுநிலை கண்காணிப்பாளர் தொடுக்கும் புது தாக்குதல்கள் 

                     நெல்லை கோட்டத்தில் கடந்த 31.05.2022முதல் கூடுதல் கண்காணிப்பாளராக பொறுப்பேற்றிருக்கும் கன்னியாகுமரி கண்காணிப்பாளர் அவர்கள் ஊழியர்களின் விடுப்புகளை வழங்குவதில் கடுமையான முறைகளை கையாளுகிறார் ..மருத்துவ விடுப்பு கேட்டு மருத்துவ சான்றிதழுடன் அனுப்பினாலும் மறு OPINION கேட்டு MEDICAL BOARD க்கு அனுப்புகிறார் .அதற்குள் அவரது விடுப்பு நாட்கள் முடிந்துவிடும் .இதில் இதய நோயாளிகள் தங்களது வழக்கமான பரிசோதனைக்கு கூட செல்லமுடியாமலும் வெளியே சொல்லமுடியாமலும்  மிகப்பெரிய மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார்கள் 

..CCL விடுப்புகள் முற்றிலுமாக மறுக்கப்படுகிறது .அடுத்த நிதியாண்டிற்கு குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பதற்கு நமது தோழியர்கள் விண்ணப்பித்திருந்தாலும்  விடுப்புகள்  மறுக்கப்படுகிறது .உடல் நலம் பாதித்த குழந்தைகளின் நலன் பாதுகாக்க படவும் ,குழந்தைகளின் கல்வி தொடர்பான உதவிகள் செய்திடவும் அறிமுகப்படுத்தப்பட்ட CCL இன்று ஒவ்வொரு அதிகாரிகளின் மன நிலைக்கு தகுந்தாற்போல் CCL கேலி கூத்தாகிவிட்டது ..

                   அதேபோல் மகப்பேறு விடுப்பு முடிந்தபிறகு தொடர்ந்து குழந்தைகளை பராமரிக்க CCL தவிர ஏனைய விடுப்புகள் கேட்டாலும் விடுப்பு நாட்களை குறைத்து விண்ணப்பிக்க அறிவுறுத்த படுகிறார்கள் ...

             மற்றகோட்டங்களை ஒப்பிடும் போது நமது கோட்டத்தில் அவ்வளவாக ஆட்பற்றாக்குறை இல்லை ..பிறகு எதற்காக இவ்வளவு கடினமாக அதிகாரிகள் விடுப்பு விஷயத்தில் நடந்து கொள்கிறார்கள் என்பது தெரியவில்லை  

 இதுகுறித்து நேற்று நமது கோட்ட நிர்வாகத்திற்கு ஒரு கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது ..அதன் மீது நிர்வாகம் எடுக்கின்ற நிலைப்பாட்டை தொடர்ந்து நாம் நமது உறுப்பினர்களிடம் கலந்துபேசி அடுத்தகட்ட நடவடிக்கைகளுக்கு செல்ல தயாராகுவோம் .. 

                                                   தொழிலாளி கையேந்தும் பிச்சைக்காரன் அல்ல ....அவன் இந்த மண்ணின் உயிர்சத்து .....

தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை 

                      

Tuesday, June 7, 2022

 அன்பார்ந்த தோழர்களே !

                                                     செய்தி சிதறல்கள் 

*சர்வதேச பார்சல்களை அஞ்சலகம் மூலம் அனுப்பும்பொழுது அளவீட்டு முறைகளை (Volumetric weight ) பின்பற்றி கட்டணங்கள் ஏதும் வசூலிக்க வேண்டாம் 

  என்றும் VOLUMETRIC முறை  அதாவது( நீளம் X அகலம் X உயரம்) என்ற அளவுகோல்கள் என்பது உள்நாட்டு பார்சல்களுக்கு மட்டுமே பொருந்தும் என பார்சல் இயக்குனரகம் 07.06.2022 தேதியிட்ட தனது கடிதத்தில் கூறியுள்ளது 

* இதுவரை நிறுத்திவைக்கப்பட்ட தபால் சேவைகள் சீனாவிற்கு 07.06.2022 முதல் மீண்டும் துவக்கப்பட்டுள்ளதாக அஞ்சல் வாரியம் அறிவித்துள்ளது . இருந்தாலும் நமது டெலிவரி Norms படி உரிய நேரத்தில் பட்டுவாடா ஆகும் என்று சொல்லமுடியாது என்பதை வாடிக்கையாளர்களிடம் தெரிவித்திட வேண்டும்

*PLI /RPLI இன்சென்டிவ் வழங்குவது தொடர்பாக  கடந்த நிதியாண்டிற்கும்

நடப்பு நிதியாண்டிற்கும் தேவையான வழிகாட்டுதலை PLI இயக்குனரகம் 07.06.2022 அன்று வெளியிட்டுள்ளது

அதன் படி

ஒரு நிதியாண்டிற்கு குறைந்தபட்சம் நான்கு பாலிசிகள் பிடித்துக்கொடுத்திட வேண்டும் .அவ்வாறு குறைந்தபட்சம்  நான்கு பாலிசிகள் பிடித்திடாத விற்பனையாளர்களின் லைசென்ஸ் ரத்துசெய்யப்படும் . ஆனாலும் அவர்கள் புதிதாக லைசன்ஸ் நம்பர் வாங்கி கொள்ளலாம்.




அன்பார்ந்த தோழர்களே ! 

                 CSC மூலம் பார்சல் சேவைகள் --சீரமைப்பா ?சீரழிவா ?

ஸ்பீட் போஸ்ட் பார்சல் மற்றும் பதிவு  பார்சல்களை CSC யின் கீழ் கொண்டு வந்து அதை தனியாக நம்மிடம் இருந்து பிரித்து கொண்டு செல்லும் வேகத்தையும் ஆர்வத்தையும் நமது இயக்குநரகத்தின் 31.05.2022 தேதியிட்ட கடிதத்தில் பார்க்க முடிகிறது .

                                 ஏற்கனவே பரீட்சார்த்த முறையில் மூன்று மாநிலங்களில் நடைமுறைப்படுத்தப்பட்ட இத்திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்ட பின்னணியில் வருகிற 06.06.2022 திங்கள் முதல் இந்தியா முழுவதிலும் துவக்கிட முடிவெடுக்கப்பட்டுள்ளது .

                இதுவரை மற்ற துறைகளின் /நிறுவனங்களின் பணியை CSC  யில் நாம் செய்திட கட்டாயப்படுத்தப்பட்டோம் .இன்றோ நமது சொந்த பணிகள் அதாவது நமது ஏகபோகம் என சொந்தம் கொண்டாடிக்கொண்டிருந்த நமது பார்சல்களை நாம் ஸ்பீட் பார்சல் என்றும் பதிவு பார்சல் என்றும் வெளியாட்களுக்கு அதாவது CSC  VLE களுக்கு நாம் செய்யப்போகிறோம் .

                                  இதுகுறித்து நமது அஞ்சல்  கூட்டு போராட்டக்குழு  03.06.2022 அன்று நமது துறை செயலருக்கு கடிதம் எழுதியுள்ளது .CSC மூலம் பார்சல் சேவையை தொடங்குவது என்பது முழுக்க முழுக்க பார்சல் பிரிவினை தனியாருக்கு கொண்டுசெல்லும் முயற்சியே தவிர வேறொன்றும் இல்லை .இதற்கு மாறாக நமது கட்டமைப்புகளை மேம் படுத்திக்கொடுத்தல் ,நெட்ஒர்க் பிரச்சினைகளை சீராக்கி கொடுத்தால் நமது ஊழியர்களாலே பார்சல் சேவையயை சிறப்பாக செய்திடமுடியும் ஆகவே இத் திட்டத்தை உடனடியாக கைவிடவில்லையென்றால் . NFPE -FNPO சம்மேளனங்கள்  கூட்டாக தொழிற்சங்க நடவடிக்கைகளில் இறங்கும் என இலாகாவை எச்சரித்துள்ளது ..

                       உங்களுக்கெல்லாம் நன்றாக ஞாபகம் இருக்கும் என நினைக்கிறோம் .நமது துறையில் பதிவுதபால் முறை இருக்கும்போதே நமது துறை  விரைவு தபால் திட்டத்தை அறிமுகப்படுத்தி பொதுமக்களிடம் பதிவு தபாலை குறைத்தும் விரைவு தபாலை முன்னிறுத்தியும் பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்பட்டதை போல இன்றும் நம்மிடம் உள்ள பார்சல் சேவையை சீர்குலைத்திட CSC சேவையை முன்னிறுத்துவதை அனுமதிக்க கூடாது ...இதுகுறித்து நமது சம்மேளனங்கள் எடுக்கும் முடிவுக்கு நமது தமிழ்மாநில சங்கம் முழு ஆதரவினை கொடுக்கும் என்பதை தெரிவித்து கொள்கிறோம் 

நன்றி --NFPE -P3  தமிழ் மாநிலம் 

Friday, June 3, 2022

 அன்பார்ந்த தோழர்களே !வணக்கம் 

SB உத்தரவு 9/2022 DTD 02.06.2022  இன் சாராம்சங்கள் 

இந்த உத்தரவு நமது OPERATIVE பிரிவு ஊழியர்களுக்கு தொடர்புடையது இல்லை என்றாலும் வட்டி கணக்கீட்டில் ஏற்படும் வேறுபாடுகளை எவ்வாறு அட்ஜஸ்ட் செய்யப்படுகிறது என்பது குறித்து நாமும் தெரிந்து வைத்திருப்பதில் ஒன்றும் தவறில்லை என்பதற்காக சில முக்கிய அம்சங்களை மட்டும் உங்கள் தகவல்களுக்காக தருகிறோம் 

SBCO பிரிவில் வட்டி மற்றும் ஆரம்ப இருப்புத்தொகைஇவைகளை சரிகட்டிட நேரும்பொழுது SBCO ஊழியர்களால் HIARM மெனு மூலம் சரிசெய்யப்பட்டு அதை HACINT மெனு மூலம் செயல்படுத்துவார்கள் .இந்த பணியை இதுகாறும் CEPT செய்துவந்தது .தற்சமயம் இந்த திருத்தங்களை செயல்படுத்தும் முறையை பரவலாக்கப்பட்டு அந்தந்த CBS-CPC இக்கு கொடுக்கப்பட்டுள்ளது .

பொதுவாக IBB அடிப்படையில் வட்டி கணக்கிடப்படும் திட்டங்களான SB /PPF/SSA/NSS87/NSS92 மற்றும் PFF கடன் கணக்கு இவைகளில் ஏற்படும் வட்டி திருத்தங்கள் அதிகரித்திக்கொண்டே செல்வதால் இதை CEPTயில் இருந்து எடுத்து CBS-CPC இக்கு கொடுக்கப்பட்டுள்ளது 

 CBS-CPC பிரிவில் உள்ள இன்சார்ஜ் அதிகாரி தான் இனிமேல்  HACINT மெனுவை செயல்படுத்துவார் .இதற்கான பயிற்சிகள் 13.0.2022அன்று CPC ஊழியர்க்ளுக்கு கொடுக்கப்பட்டுள்ளது