அன்பார்ந்த தோழர்களே !
CSC மூலம் பார்சல் சேவைகள் --சீரமைப்பா ?சீரழிவா ?
ஸ்பீட் போஸ்ட் பார்சல் மற்றும் பதிவு பார்சல்களை CSC யின் கீழ் கொண்டு வந்து அதை தனியாக நம்மிடம் இருந்து பிரித்து கொண்டு செல்லும் வேகத்தையும் ஆர்வத்தையும் நமது இயக்குநரகத்தின் 31.05.2022 தேதியிட்ட கடிதத்தில் பார்க்க முடிகிறது .
ஏற்கனவே பரீட்சார்த்த முறையில் மூன்று மாநிலங்களில் நடைமுறைப்படுத்தப்பட்ட இத்திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்ட பின்னணியில் வருகிற 06.06.2022 திங்கள் முதல் இந்தியா முழுவதிலும் துவக்கிட முடிவெடுக்கப்பட்டுள்ளது .
இதுவரை மற்ற துறைகளின் /நிறுவனங்களின் பணியை CSC யில் நாம் செய்திட கட்டாயப்படுத்தப்பட்டோம் .இன்றோ நமது சொந்த பணிகள் அதாவது நமது ஏகபோகம் என சொந்தம் கொண்டாடிக்கொண்டிருந்த நமது பார்சல்களை நாம் ஸ்பீட் பார்சல் என்றும் பதிவு பார்சல் என்றும் வெளியாட்களுக்கு அதாவது CSC VLE களுக்கு நாம் செய்யப்போகிறோம் .
இதுகுறித்து நமது அஞ்சல் கூட்டு போராட்டக்குழு 03.06.2022 அன்று நமது துறை செயலருக்கு கடிதம் எழுதியுள்ளது .CSC மூலம் பார்சல் சேவையை தொடங்குவது என்பது முழுக்க முழுக்க பார்சல் பிரிவினை தனியாருக்கு கொண்டுசெல்லும் முயற்சியே தவிர வேறொன்றும் இல்லை .இதற்கு மாறாக நமது கட்டமைப்புகளை மேம் படுத்திக்கொடுத்தல் ,நெட்ஒர்க் பிரச்சினைகளை சீராக்கி கொடுத்தால் நமது ஊழியர்களாலே பார்சல் சேவையயை சிறப்பாக செய்திடமுடியும் ஆகவே இத் திட்டத்தை உடனடியாக கைவிடவில்லையென்றால் . NFPE -FNPO சம்மேளனங்கள் கூட்டாக தொழிற்சங்க நடவடிக்கைகளில் இறங்கும் என இலாகாவை எச்சரித்துள்ளது ..
உங்களுக்கெல்லாம் நன்றாக ஞாபகம் இருக்கும் என நினைக்கிறோம் .நமது துறையில் பதிவுதபால் முறை இருக்கும்போதே நமது துறை விரைவு தபால் திட்டத்தை அறிமுகப்படுத்தி பொதுமக்களிடம் பதிவு தபாலை குறைத்தும் விரைவு தபாலை முன்னிறுத்தியும் பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்பட்டதை போல இன்றும் நம்மிடம் உள்ள பார்சல் சேவையை சீர்குலைத்திட CSC சேவையை முன்னிறுத்துவதை அனுமதிக்க கூடாது ...இதுகுறித்து நமது சம்மேளனங்கள் எடுக்கும் முடிவுக்கு நமது தமிழ்மாநில சங்கம் முழு ஆதரவினை கொடுக்கும் என்பதை தெரிவித்து கொள்கிறோம்
நன்றி --NFPE -P3 தமிழ் மாநிலம்
0 comments:
Post a Comment