அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !
அஞ்சல் இலாகாவை IPPB எனும் நிறுவனத்திற்கு தாரைவார்க்கும் முயற்சியா ?-
அஞ்சல் துறையில் தொழில்நுட்ப பிரிவில் ஏற்பபடப்போகும் அதிரடி மாற்றங்கள் தான் IT .2.O .. இந்த ஒப்பந்தங்கள் நவீனமயமாக்கல் மற்றும் நடைமுறைப்படுத்திட IPPB க்கு நேரடியாக வழங்கப்பட்டுள்ளது .இதற்காக ரூபாய் 5785 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது ..இந்த நிதி 2022-2023 முதல் 2029-2030 நிதியாண்டு வரை பயன்படுத்தப்படும் .
இனிமேல் இரண்டு கட்டமைப்புகள் என்பதில்லாமல் IPPB மட்டுமே BANKING ,இன்சூரன்ஸ் மற்றும் இதர நிதி நிலைக்குரிய திட்டங்களை பார்த்துக்கொள்ளும் .DOPஅதாவது நமது அஞ்சல் இலாகா மெயில் செயல்பாடுகளை மட்டுமே நிர்வகிக்கும் .இதர செயல்பாடுகள் அனைத்தும் IPPB யோடு இணைக்கப்பட்டுவிடும் .
ஒப்பந்த காலங்கள் முடிந்துவிட்ட அனைத்துமே IPPB மேற்பார்வைக்கு சென்றுவிடும் .1.டேட்டா சென்டர் --01.04.2022 2.நெட்ஒர்க் --01.04.2022 3.BANKING ,இன்சூரன்ஸ் 29.08.2022 .
BANKING ,இன்சூரன்ஸ் மற்றும் ரூரல் DEVICE எல்லாமே IPPB கட்டுப்பாட்டிற்குள் சென்றுவிடும் .DOP இக்கு மெயில், கவுண்டர் OPERATION, ACCOUNTING AND மற்றும் BACK OFFICEE மற்றும் களத்திலுள்ள நெட்ஒர்க் இவைகளை மட்டுமே விட்டு சென்றுள்ளன .
எல்லா நிர்வாக செயல்பாடுகளையும் கண்காணிக்க PROJECT STEERING COMMITEE புதிதாக அமைக்கப்பட்டுள்ளது .இதில் IPPB மற்றும் DOP உயர் அதிகாரிகள் இடம்பெறுவார்கள்
பல ஆண்டுகளாக நாம் சொல்லிவந்த மெயில் என்கின்ற இதய பகுதியை மட்டுமே அஞ்சல் இலாகாவிடம் ஒப்படைத்துவிட்டு இதர பாகங்கள் அனைத்தையும் கூறுபோட்டு பிரித்தெடுக்கும் TSR.சுப்பிரமணியம்கமிட்டி அறிக்கையின் பெருந்தாக்கம் ....DOP--IPPB என பிரிக்கப்பட போகிறது ..IPPB க்காக பணியாற்றினால் IPPB சம்பளம் கொடுக்கும் ..DOP யோடு இருந்தால் DOPபொறுப்பெடுக்கும் ....
தொலைத்தொடர்பு துறை DOT --BSNL என பிரிக்கப்பட்ட மாதிரி இங்கேயும் DOP--IPPB எனும் இரண்டு அமைப்புகளுக்கிடையில் பலமான தடுப்பு சுவர் எழுப்பப்படப்போகிறது ......என்ன செய்யப்போகிறோம் ?
தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை
வணக்கம்.
ReplyDeleteவாழ்க NFPE🌹 வளர்க இந்திய அஞ்சல் துறை.
மகா கவி பாரதி பாடிய படி தண்ணீர் விட்டா காப்பாற்றி வௗர்த்தோம அஞ்சல்துறை யை? தொழில் சங்க தலைவர்கள் உயிர் மற்றும் உடமைகளை தியாகம் செய்து உலகம் போற்றும் இலாகா உறுவாக்கினோம். கடந்தகால-நிகழ்கால அரசுகள் நம்ம உழைப்பு மூலம் லட்சம் கோடி லாபம் அடைந்தனர். ஆட்சியாளர்கள் மக்களின் நல திட்டங்களை நிறைவேற்ற நம்ம இலாகா பணம் உதவியது. நாமும் பல்வேறு உரிமைகள் பெற்றோம். ஆனால் அதற்கான தொழிலாளி மற்றும் தொழிற்சங்க தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் தியாகம் மேலும் நற்சிந்தையுடைய பல அரசியல் கட்சிஅமைச்சர் பெறுமக்க௵ம் அடங்குவர்.
இலாகா உயர் அதிகாரிகள் மற்றும் மதிப்புள்ள ஆட்சியாளர்கள் கவனத்திற்கு #அஞ்சல் துறை ஒரு பொன்முட்டையிடும் வாத்து. ஆண்டு தோரும் பலகோடி ருபாய் மத்திய அரசுக்கு லாபம் கிடைக்கும். இந்த இலாகாவை பிரிக்க நினைக்கும் அளவுக்கு தற்போது வறை நஷ்டம் இல்லை.
ஏற்கனவே பறித்த இலாகா ஊழல் வழக்கில் பல ஆண்டுகளாக தீர்வுகாண இயலவில்லை.
எத்தனை புதிய தொழில நுட்பம் நீங்கள் கொண்டு வந்தாலும் உழைக்க உங்கள் நேரடி ஊழியர்கள் நாங்கள் இருக்கிறோம்.
தனியார் மயமாக்கல் செய்த பக்கத்து நாடு பட்டினி சாவை தடுக்க நம்மை & உலகின் பல நாடுகளிலும் யாசகம் கேட்கும் நிலை உள்ளது. ஆட்சியாளர்களே நாங்கள் உங்க வீட்டு பிள்ளை. தனியார் அடுத்த வீட்டு பிள்ளை. யார் கடைசி வரை காப்பாற்றுவார் என்று உங்களுக்கு தெரியாது இல்லை.
நீங்களும் வாழ்ந்து அரசு ஊழியர்கள் வாழ வைக்க பணிவுடன் வேண்டுகிறேன்.
தொழில் சங்கம் என்றும் தோற்றதில்லை.
லாபம் தரும் தொழில் என்றும்
ஆட்சியாளர்கள் கையில் இருப்பது அரசுக்கு யானை பலம்.
உழைப்போம் உயர்வோம்.
வாழ்க அஞ்சல் துறை.
வளர்க இந்தியா.
NFPE GHINDHABAD.
K. PONNURAJ. EX EDDA
SANKARNAGAR. 12-6-22