அன்பார்ந்த தோழர்களே !தோழியர்களே ! வணக்கம்
நிர்வாக அலுவலகத்தில் உள்ள எழுத்தர் SBCO பிரிவில் உள்ள எழுத்தர் மற்றும் FPO இவைகளில் உள்ள எழுத்தர் பதவிகளை அஞ்சலக எழுத்தர் பதவிகளோடு இணைத்தல் /மற்றும் ஒருங்கிணைத்தல் தொடர்பான ஒரு வரைவு திட்டத்தை அஞ்சல் வாரியம் 09.05.2022 அன்று வெளியிட்டுள்ளது .இதன் மீதான ஆலோசனைகள் மற்றும் கருத்துக்களை மாநில நிர்வாகம் மற்றும் கோட்ட அளவிலான நிர்வாகங்கள் 15 நாட்களுக்குள் தெரிவிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் இதன் முக்கிய சரத்துகளில் பொதுவான சில தகவல்கள் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது
மேலோட்டமாக பார்த்தால் RO CO SBCO களில் பணியாற்றும் ஊழியர்கள் இதுவரை POSTOFFICE க்கும் இவர்க்ளுக்கும் சம்பந்தம் இல்லாதது போல் நடந்து கொள்வார்கள் ..ஒரு வேலைநிறுத்தம் ஆர்ப்பாட்டம் என்றால் தங்களுக்கும் அதற்கும் சம்பந்தம் இல்லாதது போல் நடந்து கொள்வார்கள் ...இனிமேல் அவர்களும் பொதுப் பிரிவோடு இணைக்கப்பட உள்ளார்கள் ......
*இனி மேல் RO CO SBCO மற்றும் FOREIGN POSTஇவைகளுக்கு என PA நியமனம் கிடையாது
*தற்சமயம் RO CO SBCO மற்றும் FOREIGN POST களில் பணி புரிகின்ற ஊழியர்கள் அஞ்சலகத்திற்கு மாற பணியாற்ற விருப்பம் கொடுக்கலாம் .அவ்வாறு ஒருமுறை OPTION கொடுத்தவர்கள் மீண்டும் அதே இடத்திற்கு செல்ல முடியாது
*அவ்வாறு அஞ்சல் பிரிவிற்கு செல்ல விருப்பம் கொடுக்காத ஊழியர்கள் அவர்களது உயர் பதவி உயர்வு வரை மட்டுமே இந்த பிரிவில் தொடரலாம்
*இவ்வாறு விருப்பம் தெரிவித்து வருகிறவர்களுக்கு நிலவியல் அடிப்படையில் உள்ள போஸ்டல் டிவிசன்களில் பணியாற்ற அனுமதிக்கப்படுவார்கள் .
*இதிலுள்ள காலியாகும் பதவிகள் அனைத்தும் அஞ்சல் கோ ட்டத்தோடு இணைக்கப்படும்
*
0 comments:
Post a Comment